பருவம் 3 இயல் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் - வீம்பால் வந்த விளைவு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 3 Chapter 3 : Veempal vantha vilaivu
வாங்க பேசலாம்
“வீம்பால் வந்த விளைவு” கதையை உமது சொந்த நடையில் கூறுக.
வணிகன் ஒருவன் தன் குதிரையின் மீது ஏறி வாணிகம் செய்து வந்தான். களைப்பாக இருந்ததால், சற்றுநேரம் ஓய்வெடுக்க எண்ணி மரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டு ஓய்வெடுத்தான். அச்சமயம் வீரன் ஒருவன், தன் குதிரையுடன் அதே மரத்தடியில் ஒய்வெடுக்க வந்தான்.
வணிகன், அந்த வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் உனது குதிரையைச் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான். சற்று நேரம் கழித்து வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்ததால் அதன் கால் உடைந்தது. வீரனும் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பி நடந்ததைக் கூறி நஷ்டஈடு கேட்டான். வணிகனோ நஷ்டஈடு தர மறுத்து விட்டான்.
இருவரும் நீதிபதியிடம் சென்றனர். வணிகன் நீதிபதிகேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் மௌனமாக நின்றான். வீரன் நடந்ததை அப்படியே கூற. நீதிபதி, வீரனிடம் நீ கூறிய பதிலிலே தீர்ப்பு அமைந்துள்ளது. வணிகன் முன்பே கூறினாலும் வீம்புக்காகச் செய்தவன் நீ. எனவே, வணிகன் உனக்கு நஷ்டஈடு தரமாட்டான் என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. வணிகன் தான் அமைதியாக இருந்ததற்கு மன்னிப்பும், சரியான தீர்ப்பு வழங்கியதற்கு நன்றியும் கூறிச் சென்றான்.
பால் பண்ணையில் வரிசையில் நின்று, பால் வாங்கும்போது ஒருவன் இடையில் குறுக்கே வந்து பால் வாங்கினால் நீ என்ன செய்வாய்?
அவனை வரிசையில் வந்து மற்றவர்களைப்போல் அமைதியாக பால் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்துவேன்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
வினாக்களுக்கு விடையளிக்க.
1. வணிகன் எதில் சென்று வாணிகம் செய்தான்?
வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்தான்.
2. வணிகன், வீரனிடம் என்ன கூறினான்?
வணிகன் அந்த வீரனிடம், “உங்கள் குதிரையை சற்றுத் தள்ளி கட்டுங்கள். ஏனெனில், எனது குதிரை முரட்டுத்தனமானது” என்றான்.
3. வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை என்ன செய்தது?
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை எட்டி உதைத்துவிட்டது.
4. ‘வீம்பால் வந்த விளைவு' இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
‘வீம்பால் வந்த விளைவு’ இக்கதையிலிருந்து நான் உணர்ந்து கொண்ட கருத்து, 'வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்' என்பதே ஆகும்.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான். - அவன் யார்? படைவீரன்
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான். - அவன் யார்? குதிரை
நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்? கண்
பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன் அச்சாணி
மொழி விளையாட்டு.
கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.
மீண்டும் மீண்டும் ஒலிப்போமா?
1. மலையில் பழுத்த பழம் குலை குலையாய்த் தொங்குது
2. வாழைப்பழத்தோலில் நடந்து வழுக்கி விழுந்தேன். கீழே பார்த்தேன் ‘வழவழ’ன்னு தரை இருந்தது
3. அழுத குழந்தை புரளுது. ஆளுக பார்த்தால் விழுதப் பிடிச்சு ஊஞ்சலாடுது
விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.
1. வணிகன் _________ அயர்ந்துவிட்டான்.
விடை : கண்
2. ___________ குணம் படைத்த உனக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை
விடை : வீம்புக்
3. வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ____________ உதைத்து தள்ளிவிட்டது.
விடை : எட்டி
4. வணிகன், வாணிகம் செய்துவிட்டு __________ எடுக்க நினைத்தான்.
விடை : ஓய்வு
5. வீரனுடைய குதிரையின் ____________ உடைந்துவிட்டது.
விடை : கால்
கலையும் கைவண்ணமும்
வண்ணமிட்டு மகிழ்க
கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.
1. துளசி
2. பிரண்டை
3. வல்லாரை
4. கற்றாழை
5. வெற்றிலை
6. மணத்தக்காளி
7. தூதுவளை
எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக.
மரம்
தென்னைமரம்
வாழைமரம்
பலா மரம்
கொடி
வெற்றிலைக்கொடி
அவரைக்கொடி
பூசணிக்கொடி
செடி
தக்காளிச்செடி
வெண்டைச்செடி
கத்திரிச்செடி
உயர்திணையும் அஃறிணையும்
எழிலி: "அப்பா, அப்பா, இங்கே வாங்க, இந்தப் பூனையைப் பாருங்க. காலெல்லாம் ஒரே சேறு. அந்தச் சேற்றுக் காலோட நம்ம வீட்டுக்குள்ளும் வந்திருக்கு".
அப்பா: "அட, ஆமா! எங்கேயிருந்து சேற்றைப் பூசிக்கொண்டு வந்ததுன்னு தெரியலேயே?"
எழிலி: "என்னப்பா, இது? தரையில என்ன இருக்குன்னு இந்தப் பூனைக்குத் தெரியாதா? பார்த்து நடக்கலாம்ல."
அப்பா: "அது சரி, எழிலி, நீயா இருந்தா என்ன செய்வே?"
எழிலி: ஐ! நானா இருந்தா, கால்ல சேறு படாம ஒரே தாண்டா தாண்டி ஓடி வந்திருப்பேனே"
அப்பா: அதைத்தான் நானும் சொல்ல வர்றேன். சேற்றில் கால் பட்டால் அழுக்காகும்னு உனக்குத் தெரியுது. ஆனால், பூனைக்குத் தெரியலே. ஏன் தெரியுமா?
எழிலி: தெரியலயே, நீங்களே சொல்லுங்கப்பா.
அப்பா: ஏன்னா, நாமெல்லாம் உயர்திணை. விலங்கு, பறவையெல்லாம் அஃறிணை. அதனாலதான், என்ன நடக்கப்போகுதுன்னு நமக்குத் தெரியுது. ஆனா, விலங்கு, பறவைக்கு நாம என்ன செய்றோம்? செய்தா என்னாகும்னு புரிந்துகொள்ள முடியல.
எழிலி: ஓ! அதுதானா? அது சரிப்பா, உயர்திணை, அஃறிணைன்னு சொன்னீர்களே, அப்படின்னா என்னப்பா?
அப்பா: நான் கேட்கிறதுக்கு முதல்ல விடை சொல்லு, உன்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்காங்க?
எழிலி: இம். இம்... நீங்க, அம்மா, அண்ணா , அக்கா, தம்பி, சிற்றப்பா, பெரியப்பா, அத்தை அப்புறம்...என்கூட விளையாடுவாங்களே மீனா, ரோசி, கம்ரூன், பாபு, சுரேஷ், கௌதம், சீனு, ராதிகா, ரம்யா, ஐசு, சிருஷ்டி, பாரு, வித்யூன்.....
அப்பா: போதும்....போதும். உனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி இருக்கிறவங்கன்னு நீ இப்ப சொன்னேல, இவங்க எல்லாருக்கும் உயிரிருக்கு. அதுமட்டுமா? நல்லது எது? தீயது எதுன்னு பகுத்துப் பார்க்கும் பண்பும் இருக்கு. இவங்க மட்டுமில்லாம நம்மைப்போலவே பண்புகள் இருக்கிற மக்கள், தேவர், நரகர் இவங்களையெல்லாம் உயர்திணைன்னுதான் சொல்றாங்க. அதுசரி, எழிலி. நீ இன்னும் வேறெ என்னல்லாம் உன்னைச் சுற்றி இருக்குன்னு சொல்லலியே?
எழிலி: வேறே என்னப்பா இருக்கு?
அப்பா: இதோ இந்த நாற்காலி, மேசை, குடம், மின்விசிறி, புத்தகம் இதுமட்டுமல்லாம பூனை, நாய், மாடு, ஆடு முதலான விலங்குகள், கோழி, காகம், குயில், மயில், கிளி முதலான பறவைகள் அப்படின்னு நிறைய பார்க்கிறாய் அல்லவா! இவற்றில் பறவை, விலங்குகளுக்கு எல்லாம் உயிர் இருக்கு. ஆனால் நாற்காலி, மின்விசிறி இவை போன்றவற்றிற்கு உயிரில்லை. அதனால, இந்த மாதிரி உயிருள்ள, உயிரற்ற பொருள்களெல்லாம் உயர்திணைல சேர்க்க முடியாது. இவையெல்லாம் உயர்திணை அல்லாத திணை. அதனாலதான் அஃறிணைன்னு சொல்றோம். நிலம், நீர், மலை, மரம், கடல் இவையெல்லாம்கூட அஃறிணைதான்.
எழிலி: ஆனா நான் பார்க்கிற பொருள்ல இதுதான் உயர்திணை, இதுதான் அஃறிணைன்னு எப்படிப்பா கண்டுபிடிக்கறது?
அப்பா: அடடே, நீ நல்லாவே யோசிக்கிற எழிலி. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பேரு இருக்குல்லே, அதை வைத்து நீ எளிதாக் கண்டுபிடிக்கலாம். அந்தப் பெயரை வைத்தே அதற்கு உயிரிருக்கா, நம்மைப்போல அது சிந்திக்குமா? வேலை செய்யுமான்னு கண்டுபிடிக்கலாம்ல. பெயரை வைத்தே என்ன திணை, பால், எண், இடம்னு எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம். இதைப்பற்றி இன்னும் விரிவா நாளைக்குச் சொல்றேன். இதுவரைக்கும் சொன்னதில என்ன புரிஞ்சுக்கிட்டன்னு எனக்கும் தெரியணும்ல தென்னை மரம் உயர்திணையா, அஃறிணையா, எங்கே சொல்லு பார்க்கலாம்.
எழிலி: இம்... இம். மரமெல்லாம் அஃறிணைதானே. தென்னைமரம் அஃறிணைதாம்பா. இப்ப நல்லாப் புரிந்துகொண்டேன் அப்பா.
திணை என்பது, ஒழுக்கம். அதன் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என இரண்டாகக் கூறுவர்.
எது உயர்திணை - எது அஃறிணை?
பிரித்து அறிவோமா?
அஃறிணை
வாளி
கன்று
மீன்
பசு
கழுதை
குருவி
வண்டு
தேனீ
ஒட்டகம்
எறும்பு
மரங்கள்
நாற்காலி
மேசை
மின்விசிறி
விலங்கு
பறவை
உயர்திணை
முருகன்
செல்வி
குழந்தை
சிறுமியர்
சிறுவர்
செயல் திட்டம்.
உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களை உயர்திணை, அஃறிணை என்று வகைப்படுத்தி எழுதி வருக.
உயர்திணை
• அப்பா
• அம்மா
• தம்பி
• அக்கா
• தாத்தா
• பாட்டி
அஃறிணை
• தொலைக்காட்சி
• தொலைபேசி
• கட்டில்
• கதவு
• மின்விசிறி
• குவளை
• புத்தகம்
• நாய்
• நாற்காலி
• மின்விளக்கு
• காய்கறிகள்
• குளிரூட்டி
• துணி வெளுப்பான்
• கத்தரிக்கோல்
• எழுதுபொருள்கள்