முக்கியத்துவம், வழிமுறைகள், அணுகுமுறைகள் - நீர் பாதுகாப்பு | 9th Science : Environmental Science
நீர் பாதுகாப்பு
நீர் ஆதாரங்களை சரியான முறையில் சேமித்து, கட்டுப்படுத்தி, நிர்வகிப்பதே நீர் பாதுகாப்பு எனப்படும். மேலும் மனிதனின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைச் சந்திப்பதற்கும்,
நீர்க்கோளத்தைப் பாதுகாப்பதற்குமான செயல்பாடுகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.
● நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. .
● போதுமான அளவு பயன்படுத்தக்கூடிய நீரானது நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது.
● நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
● ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகின்றது.
தொழிற்சாலைகளில் நீர்ப்பாதுகாப்பு
தொழிற்சாலைகளில் எடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளாவன:
● உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன் படுத்துதல்.
● குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.
விவசாயத்தில் நீர் பாதுகாப்பு
வயல்களில் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்படுதல், வழிந்தோடுதல் மற்றும் ஆவியாதல் ஆகியவற்றால் விவசாய நீரானது விரயமாகின்றது. இவற்றிலிருந்து பாதுகாக்கும் சில நீர்ப்பாதுகாப்பு முறைகளாவன:
● மூடப்பட்ட அல்லது குறுகிய வாய்க்கால்களைப் பயன்படுத்துவதால் ஆவியாதலையும்,
நீர் இழப்பையும் குறைக்கலாம்.
● நீர்த் தெளிப்பு, சொட்டு நீர்ப் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட யுக்திகளைப் பயன்படுத்துதல்.
● வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
● காய்கறி உற்பத்தி மற்றும் தோட்டக்கலையில் தழைக்கூளங்களை மண்ணிற்குப் பயன்படுத்தலாம்.
வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு
நீரினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் நாம் நீரினைப் பாதுகாக்க முடியும்.
● வாறல் குளிப்பான்களில் (Showers)
குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
● குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
● மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
● குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
● முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
உங்களுக்குத் தெரியுமா?
நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
(i)
மழை நீர் சேகரிப்பு.
(ii)
மேம்படுத்தப்பட்ட பாசன நுட்பங்கள்.
(ii) பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நீர் சேகரித்தல் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
(iv)
வீடுகளில் நீர் பயன்பாட்டைக் குறைத்தல்.
(v)
நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
(vi) பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல்.
(vii) நீரினை மறுசுழற்சி செய்தல்.