Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | வானிலை மற்றும் காலநிலை

அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வானிலை மற்றும் காலநிலை | 8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate

   Posted On :  12.06.2023 12:55 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை

வானிலை மற்றும் காலநிலை

கற்றலின் நோக்கங்கள் >வானிலை மற்றும் காலநிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்>வானிலை மற்றும் காலநிலைக் கூறுகளின் தன்மையைஅறிந்துகொள்ளுதல்>வானிலை கூறுகளை அளவிடக்கூடிய கருவிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்>ஓர் இடத்தினுடைய வானிலை மற்றும் காலநிலையின் வகைகளை அடையாளம் காணல்

அலகு - 2

வானிலை மற்றும் காலநிலை


 

கற்றலின் நோக்கங்கள்

>வானிலை மற்றும் காலநிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்

>வானிலை மற்றும் காலநிலைக் கூறுகளின் தன்மையை அறிந்துகொள்ளுதல் 

>வானிலை கூறுகளை அளவிடக்கூடிய கருவிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்

>ஓர் இடத்தினுடைய வானிலை மற்றும் காலநிலையின் வகைகளை அடையாளம் காணல்

 

 

அறிமுகம்

காலநிலை இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். இது நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில், மே மாதம், யுக்தா தன்னுடைய விடுமுறையை தம்பியுடனும், குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்றாள். அவள் எப்பொழுதும் பருத்தியால் ஆன உடையை அணிகிறாள். அவளுடைய அம்மா கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவான கஞ்சி, நீர்மோர், எலுமிச்சைசாறு, தர்பூசணி போன்றவற்றைத் தன் குழந்தைக்கு வழங்குகின்றனர்.

அதே மே மாதத்தில் தியா என்பவர் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து என்னும் நகரத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர்கள் மேல்சட்டை, வன்துணியாடை, கையுறை, காலுறை போன்ற ஆடைகளை

உங்களுக்குத் தெரியுமா?

புவியின் வளி  மண்டலமானது வாயுக்களால் ஆன பல அடுக்குகளைக்  கொண்டதாகும். இது புவியைச் சூழ்ந்துள்ளது. புவியின் ஈர்ப்பு விசையினால் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், 0.97% ஆர்கானும், 0.03% கார்பன் டை ஆக்ஸைடும் 0.04% மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன.

அணிந்துள்ளார். அவருடைய அம்மா அவருக்கு, சாண்ட்விச், ஓட்ஸ் உணவு, வஞ்சிரமீன், வடிசாறு போன்ற சூடான உணவு வகைகளை அளிக்கிறார். யுக்தா கிருஸ்துமஸ் விழாவைக் குளிர்காலத்திலும், தியா கிருஸ்துமஸ் விழாவைக் கோடைக்காலத்திலும் கொண்டாடுகின்றனர். காரணம் என்ன என்று சிந்தனை செய்வீர்களா?

யுக்தா, தியா இருவரும் வெவ்வேறான அரைக் கோளத்தில் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர்.

 

கண்டறிக

சூரியக்குடும்பத்திலுள்ள எல்லா கோள்களுக்கும் வளிமண்டலம் உள்ளதா?

இதற்கு அவ்விடங்களின் வெவ்வேறான வானிலையே காரணமாகும்.

வானிலையும் காலநிலையும் மனிதனுடைய செயல்பாடுகள், உணவு வகைகள், ஆடைமுறைகள், வசிக்கும் வீடு, செய்யும் தொழில்கள், வேளாண்மை , கடல் பயணம், மீன் பிடித்தல், நவீன போக்குவரத்து மற்றும் நாம் விளையாடும் நேரத்தின் மீதும் தாக்கத்தை எற்படுத்துகின்றன.

எனவே ஒவ்வொருவரும் வானிலை மற்றும் காலநிலைப் பற்றிய அறிவை பெற்றிருக்கவேண்டும். இப்பாடப்பகுதியில் வானிலை, காலநிலையின் உட்கூறுகள் பற்றி படிப்போம். மேலும் அவை எவ்வாறு மனித வாழ்க்கை முறையில் தாக்கத்தை எற்படுத்துகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

உங்களுக்குத் தெரியுமா?

"Climate" என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து  பெறப்பட்டதாகும்.

கிளைமோ "Klimo" என்றால் தமிழில் சாய்வுகோணம் (Inclination) என்று பொருள்.

 

வானிலை (Weather)

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிற கூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். வானிலை குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும். மேலும் இது நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாறக்கூடியது.காலையில் வானிலை தெளிவான வானத்துடன் வெப்பமாகவும் மாலை நேரத்தில், மேகமூட்டத்துடன் கூடிய மழையாகவும் இருக்கக்கூடும். இதேபோல் வானிலை குளிர்காலத்தில் குளிராகவும், கோடைக்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.

நம்மில் சிலர் அடிக்கடி "இன்றைய காலநிலை மிகவும் நன்றாக உள்ளது அல்லது "மோசமாக உள்ளது" என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அக்கூற்று தவறானது. அதற்கு பதிலாக "இன்றைய வானிலை நன்றாக உள்ளது அல்லது மோசமாக உள்ளது" என்றே கூற வேண்டும். தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்கள் இன்றைய வானிலை அறிக்கை என்று கூறுகின்றார்கள். ஆனால் கால நிலை அறிக்கை என்று கூறுவதில்லை . (எ.கா) இன்றைய மட்டைப்பந்து விளையாட்டு மோசமான வானிலையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

காலநிலை (Climate)

காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும். காலநிலையின் கூறுகளும் மற்றும் வானிலையின் கூறுகளும் ஒன்றே ஆகும். வானிலையைப் போன்று காலநிலை அடிக்கடி மாறக்கூடியது அல்ல


வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள்

சூரியக்கதிர்களின் படுகோணம், சூரிய ஒளிப்படும் நேரம், உயரம், நிலம் மற்றும் நீர் பரவல், அமைவிடம், மலைத்தொடர்களின் திசை அமைவு , காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஓரிடத்தின் / பகுதியின் / பிரதேசத்தின் காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

வளியியல் என்பது வானிலையின் -அறிவியல் பிரிவாகும். காலநிலையியல் என்பது -காலநிலையின் அறிவியல் பிரிவாகும்

புவி கோள வடிவமானது. ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழுவது இல்லை. புவியின் துருவப் பகுதிகள் சூரியக் கதிர்களை சாய்வாக பெறுகின்றன. அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகக் கடும் குளிர் நிலவுகிறது. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது. வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் காரணமாக உள்ளன. வெப்பக்காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கிச் செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக உள்ளது. அதனால் குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுகின்றது.

செயல்பாடு

உயரம், நிலப்பரவல், நீர்நிலைகள், மலையமைவு, காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம் எவ்வாறு வானிலையையும், கால நிலையையும் பாதிக்கின்றன என்பதை உன் வகுப்பில் கலந்துரையாடுக.

Tags : Chapter 2 | Geography | 8th Social Science அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate : Weather and Climate Chapter 2 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை : வானிலை மற்றும் காலநிலை - அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை