வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate

   Posted On :  20.08.2023 07:59 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. புவியின் வளிமண்டலம் ----------- நைட்ரஜன் மற்றும் ----------- ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

அ) 78% மற்றும் 21%

ஆ) 22% மற்றும் 1%

இ) 21% மற்றும் 0.97%

ஈ) 10 மற்றும் 20%

[விடை : அ) 78% மற்றும் 21%]

 

2. --------------- ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

அ) புவி

ஆ) வளிமண்டலம்

இ) காலநிலை

ஈ) சூரியன்

[விடை :  இ) காலநிலை]

 

3. புவி பெறும் ஆற்றல் ---------------------

அ) நீரோட்டம்

ஆ) மின்காந்த அலைகள்

இ) அலைகள்

ஈ) வெப்பம்

[விடை :  ஈ) வெப்பம்]

 

4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

அ) சமவெப்பக்கோடு

ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு

இ) சம காற்றழுத்தக் கோடு

ஈ) சம மழையளவுக் கோடு

[விடை : ஈ) சம மழையளவுக் கோடு]

 

5. ----------------- என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

அ) காற்றுமானி

ஆ) அழுத்த மானி

இ) ஈரநிலை மானி

ஈ) வெப்பமானி

[விடை : இ) ஈரநிலை மானி]

`                                                                         

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. வானிலை என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு வளியியல்

3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் கிரீன்லாந்து மலைத் தொடர் (மரணப் பள்ளத்தாக்கு)

4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ஒப்பு ஈரப்பதம்

5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை ஆகியவை அளக்கப்படுகின்றன.

6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு சம வெப்பக் கோடு

 

III பொருத்துக

 

1. காலநிலை - புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது

2. ஐசோநிப் - சூறாவளி

3. ஈரநிலைமானி - சம அளவுள்ள பனிபொழிவு

4. ரேடார் - நீண்ட நாளைய மாற்றங்கள்

5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த - ஈரப்பதம் மண்ட லம்)

 

விடைகள்

1. காலநிலை - நீண்ட நாளைய மாற்றங்கள்

2. ஐசோநிப் - சம அளவுள்ள பனிபொழிவு

3. ஈரநிலைமானி - ஈரப்பதம்

4. ரேடார் - புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது 

5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்) - சூறாவளி

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

 

1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும். விடை: சரி

2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

விடை: தவறு

3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர். விடை: சரி

4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்தமானி. விடை: தவறு

 

V சுருக்கமாக விடையளி

 

1. காலநிலை - வரையறு

> காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்

> இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டு கூறுவதாகும்.

 

2. "வெயிற் காய்வு" என்றால் என்ன?

ஒரு இடத்தில் கிடைக்கும் சூரியக் கதிர் வீச்சின் அளவு ‘வெயிற் காய்வு' எனப்படும்.

 

3. "வளிமண்டலக் காற்றழுத்தம்" என்றால் என்ன?

புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டலக் காற்றழுத்தம் எனப்படும்.

 

4. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று

> ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.

> எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

 

5. சம அளவுக் கோடுகள் - "ஐசோலைன்ஸ்" என்றால் என்ன?

> நில வரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக்கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது.

> சம அளவுக்கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும்.

> இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

 

VI வேறுபடுத்துக

 

1. காலநிலை மற்றும் வானிலை



2. முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்



3. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்


 

VII காரணம் கூறுக

 

1. காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

புவி கோள வடிவமானது. ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழுவதில்லை . புவியின் துருவப் பகுதிகள் சூரியனுடைய சாய்வான கதிர்களை பெறுகின்றன. அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகக் கடும் குளிர் நிலவுகிறது. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள்செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது. எனவே காலநிலையும், வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

 

2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கு 1°C வெப்பநிலை குறையும், உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறைவதால் தட்ப வெப்பநிலையும் குறையும், எனவே உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.  

 

3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜன் அளவும் காற்றின் அழுத்தமும் குறைவதால், மலையேறுபவர்கள் ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். ஏனெனில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படும்.

 

VIII விரிவான விடையளி

 

1. வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?

> வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கன அளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.

> இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.

> வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்த பட்ச அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.

> சூரிய கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.

> வளிமண்டலம் புவி கதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.

> ஆகையால் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது.

> குறைந்த பட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

 

2. காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

> கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.

> காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.

> காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

1. கோள் காற்றுகள் (அ) நிரந்தர காற்றுகள்

2. பருவக்காலக் காற்றுகள் மற்றும்

3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்

1. கோள் காற்றுகள்: ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் (அ) நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று

2. பருவக்காலக் காற்றுகள்: - பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.

3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்: ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று


3. வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.


.> புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல். (எ.கா. நிலக்கரி போன்ற எரிபொருட்கள்)

> மரங்களை பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல்

.> மக்கிப்போகாத நெகிழி போன்ற பொருட்களின் கண்மூடித்தமான உபயோகத்தை தவிர்த்தல்


IX கீழ்க்கண்டவைகளை உலக வரைபடத்தில் குறிக்கவும்


1. வெப்ப மண்டலங்கள்

 

2. காற்றழுத்த மண்டலமும், கோள் காற்றுகளும்

 

X செயல்பாடுகள்

 

1. மழைமானி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.

2. சிறிய அளவிலான மாதிரி வானிலை மையத்தை உன் பள்ளியில் உருவாக்கு

3. தினமும் வானிலை அறிக்கையை படித்து அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கீழே உள்ள கட்டங்களில் நிரப்பு.


Tags : Weather and Climate | Chapter 2 | Geography | 8th Social Science வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate : Questions with Answers Weather and Climate | Chapter 2 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை : வினா விடை - வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை