புவியின் உள்ளமைப்பு | முதல் பருவம் அலகு 1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சுருக்கம், கலைச்சொற்கள் | 7th Social Science : Geography : Term 1 Unit 1 : Interior of the Earth
சுருக்கம்
• புவியின் உட்பகுதி ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது
• புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு எனப்படுகிறது
• புவியின் மேலோடு சியால் (SIAL) ஆகும்
• புவியின் மேலோட்டின் கீழ்ப்பகுதி சிமா (SIMA) ஆகும்
• கவசமானது சுமார் 2900 கி.மீ. ஆழம் வரை பரவியுள்ளது.
• பாறைக்கோள உடைப்பால் ஏற்படும் தட்டுக்களை பாறைக்கோளத் தட்டுகள் என்கிறோம்
• புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை புவி அதிர்வு வரைமானி என்கிறோம்
• கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய நிலநடுக்கமானது சுனாமி அலைகளைத் தோற்றுவிக்கிறது
• புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதை எரிமலை என்கிறோம்
• லாவாக்களின் தன்மை மற்றும் அது வெளியேறும் விதம் ஆகியவற்றை பொருத்தே எரிமலைகளின் வடிவம் அமையப் பெறுகிறது
• உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன
கலைச்சொற்கள்
1. கருவம் - Core - புவியின் மையப்பகுதியே கருவாகும்
2. கவசம் - Mantle - புவி மேலோட்டின் அடுத்த பகுதி
3. மோஹோரோவிசிக் எல்லை - Mohorovicic discontinuity - எல்லை கீழ்மேலோட்டையும் மேல் கவசத்தையும் பிரிக்கிறது
4. நிலச்சரிவு - Land slide - மலைச்சரிவில் சிதைந்த பாறைகள் கீழ்நோக்கி சரிதல்
5. சீஸ்மோகிராப் – Seismograph - புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி -
6. ஆழிப்பேரலை - Tsunami - கடலுக்கு அடியில் (அ) கடற்கரை ஓரங்களில் ஏற்படும் நில நடுக்கத்தால் தோன்றும் பெரிய அலைகள்
7. எரிமலைவாய் - Vent - புவியிலுள்ள பாறைக் குழம்பு வெளியேறும் பகுதி
8. பாறைக்குழம்பு - Magma - உருகிய நிலையில் புவிக்குள் உள்ள பாறை
9. எரிமலைக்குழம்பு படிதல் – Lava - பாறைக் குழம்பு புவி மேற்பரப்பிற்கு வந்து படிதல்
Reference
Majid Husain, Physical Geography Anmol Publication Pvt Ltd
A Das Gupta, A.N. Kapoor, Principles of Physical Geography, S. Chand & Company Ltd., New Delhi
Goh Cheng Leong, certificate Physical and Human Geography, Oxford University press. Savindra Singh (2015) physical Geography Pravalika publications Allahabad.
இணையச்செயல்பாடு
புவியின் உள்ளமைப்பு
இந்த செயல் பாட்டின் மூலம் பூமியின் உட்பகுதிகள் பற்றிதெரிந்து கொள்ள முடியும்
படிநிலைகள்:
படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க.
படி 2: Click on the Map to start என்பதை சொடுக்கவும்
படி 3: முழுத்திரை பக்கமாக மாற்றவும், பின்னர் தோன்றும் பூமியின் உட்பகுதி விளக்கப்படத்தை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து விளையாடவும்.
புவியின் உள்ளமைப்பு உரலி:
** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.