Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பாடச் சுருக்கம் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
   Posted On :  09.01.2024 10:43 pm

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

பாடச் சுருக்கம் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

நரம்பு மண்டலம் உடல் உறுப்புகளின் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து அக மற்றும் புறச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினை புரிகின்றது.

பாடச் சுருக்கம்

நரம்பு மண்டலம் உடல் உறுப்புகளின் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து அக மற்றும் புறச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினை புரிகின்றது.

நரம்பு மண்டலத்தில் நியூரான்கள் மற்றும் நியூரோகிளியா என இரண்டு வகைச் செல்கள் உள்ளன. மைய நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் பணிகளுக்கான அடிப்படை அலகு நியூரான்களாகும்.

மைய நரம்பு மண்டலத்தில் மூளை மற்றும் தண்டுவடம் ஆகியவை அடங்கும். பெருமூளை, டையன்செஃபலான், சிறுமூளை மற்றும் மூளைத்தண்டு ஆகியவை மூளையின் முக்கியமான பகுதிகள் ஆகும். உறைகளால் சூழப்பட்டுள்ள மூளையானது மூளைப்பெட்டகத்தினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய நரம்பு மண்டலத்திற்குத் தேவையான பாதுகாப்பையும் உணவூட்டப் பொருட்களையும் மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.

முகுளத்தின் தொடர்ச்சியாகத் தண்டுவடம் அமைந்துள்ளது. இது இரண்டாவது இடுப்ப முள்ளெலும்பில் கோனஸ் மெடுல்லாரிஸ் (conus medullaris) என்னும் அமைப்பாக முடிகிறது. அனிச்சை செயலில் ஈடுபடும் அனைத்துக் கூறுகளும் அனிச்சை வில் எனப்படும்.

மூளையிலிருந்து 12 இணை மூளை நரம்புகளும் தண்டுவடத்திலிருந்து 31 இணை தண்டுவட நரம்புகளும் வெளிவருகின்றன. இவை புறநரம்பு மண்டலத்தினை உருவாக்குகின்றன. புறநரம்பு மண்டலம் உடல் நரம்பு மண்டலம் மற்றும் தானியங்கி நரம்பு மண்டலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடல் நரம்பு மண்டலம் சுய விருப்பத்துடனும் தானியங்கு நரம்பு மண்டலம் அனிச்சையாகவும் செயல்படுகிறது.

தானியங்கு நரம்பு மண்டலத்தின் பெரும்பகுதி பரிவு நரம்பு மண்டலம் மற்றும் துணை பரிவு நரம்பு மண்டலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அக மற்றும் புறச்சூழல்களில் ஏற்படும் மாற்றங்களைச் சுயஉணர்வு அல்லது ஆழ்மனது விழிப்புணர்வு மூலம் பெறவைப்பது உணர்வறிதல் எனப்படும். தூண்டப்படுதல், கடத்தல், நரம்புத்தூண்டல் உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு நிகழ்வுகள் உணர்வறிதலில் நடைபெறுகின்றன.

எளிய உணர்வேற்பிகள் தொடு உணர்ச்சி (தோல்) போன்ற உடல்சார்ந்த உணர்வுகளுடன் தொடர்புடையவை. சிக்கலான உணர்வேற்பிகள் சிறப்புத்தன்மை வாய்ந்த உணர்வேற்பிகளான மணம், சுவை, பார்வை, கேட்டல் மற்றும் சமநிலை பேணல் போன்றவற்றுடன் தொடர்புடையவை.







இணையச்செயல்பாடு

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு


நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் பணிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!

படிகள்

1. உரலி / விரைவுக் குறியீ

ட்டைப் பயன்படுத்தி 'Nervous System' என்ற பக்கத்தைத் திறக்கவும். கட்டத்திலிருந்து 'Nervous system organization' என்ற பகுதியைத் தெரிவு செய்து நரம்பு செல்லின் தன்னிச்சையான மற்றும் உடற்செல் அமைப்பினைத் தெரிந்து கொள்ளலாம்.

2. "Back space" பொத்தானைப் பயன்படுத்தி அல்லது திரையின் மேல் பகுதியில் 'Nervous System' எனச் சொடுக்கி Nerve cells" என்று கட்டத்தில் தேர்வு செய்து கொள்ளவும்.

3. மேற்கூறிய படிநிலைகளைப் பயன்படுத்தி, நரம்பு மண்டலத்தின் பகுதிகள் மற்றும் பணிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

4. கீழேயுள்ள படங்களின் துணைக்கொண்டு, நரம்புசெல்லினுடைய மேலும் பல கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நரம்பு மண்டலத்தின் உரலி.

https://www.getbodysmart.com/nervous-system

3D-Brain:

http://www.brainfacts.org/3d-brain#intro=false&focus=Brain&zoom=false

3D-Ear:

https://www.amplifon.com/web/uk/interactive-ear/index.html

படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.


11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Activity, Summary and Case Study - Neural Control and Coordination in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : பாடச் சுருக்கம் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு