Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination

   Posted On :  09.01.2024 09:28 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:

I. சரியான விடையைத் தேர்ந்ததெடு


1. காதிலுள்ள எப்பகுதி அழுத்த அலைகளைச் செயல்நிலை மின்னழுத்தமாக மாற்றுகிறது

) செவிப்பறை சவ்வு

) கார்ட்டை உறுப்பு

) நீள் வட்டப் பலகணி (oval window)

) அரைவட்டக் குழல்கள்

விடை: ) நீள் வட்டப் பலகணி (oval window)


2. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு

) உணர்வு நரம்பு - உட்செல்லுதல் 

) இயக்க நரம்பு - உட்செல்லுதல் 

) உணர்வு நரம்பு - வயிற்றுப்புறம் 

) இயக்கு நரம்பு - முதுகுப்புறம்

விடை: ) உணர்வு நரம்பு - உட்செல்லுதல் 


3. நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன. சரியான விடையைத் தேர்ந்தெடு.

) P= அசிட்டைல் கோலைன் Q=Ca++ 

) P= அசிட்டைல் கோலைன் Q= Na+

) P= GABA Q= Na+

) P= கோலைன்எஸ்ட்ரேஸ் Q= Ca++

விடை: ) P= அசிட்டைல் கோலைன் Q=Ca++ 


4. A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.


) செல் A என்பது குச்சி செல். இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது.

) செல் A என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.

) செல் B யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது

) செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது.

விடை: ) செல் B யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது. 


5. கூற்று : Na+ K+ மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வுநிலை மின்னழுத்ததை (Resting potential) உண்டாக்குகிறது.

காரணம்: Na+ K+ சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று காரணம் இரண்டும் தவறு

விடை: ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது


6. மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது?

) சிறுமூளை 

) பெருமூளை

) முகுளம்

) ஹைப்போதலாமஸ்

விடை: ) ஹைப்போதலாமஸ்


7. சுவாச மையம் காணப்படுமிடம் 

) முகுளம்

) ஹைப்போதலாமஸ்

) சிறுமூளை 

) தலாமஸ்

விடை: ) முகுளம்


8. கீழ்க்கண்டவற்றுள் தொகுதி I ல் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட நரம்புகளையும் தொகுதி II ல் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த எண்ணிக்கையையும் பொருத்துக.

P. கழுத்துப் பகுதி நாம்புகள் - i.5 இணை

Q. மார்புப்பகுதி நரம்புகள் - ii.1 இணை

R. இடுப்புப்பகுதி நரம்புகள்- iii 12 இணை

S. வால் பகுதி நரம்புகள் - .iv 8 இணை


விடை: ) P - IV Q - III R - I S - ii


9. செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது?

) H

) K+ 

) Na+

.) Ca++

விடை: ) K+ 


10. கீழ்க்கண்ட நரம்புத்தூண்டல் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?

() ஓய்வு நிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது. Na+ அயனிகளை ஊடுருவ விடுவதில்லை

() ஓய்வுநிலை நியூரானில் உள்ள ஆக்ஸானின் வெளிப்புறத்தில் Na+ அயனிகளின் செறிவு அதிகமாகவும் K+ அயனிகளின் செறிவு குறைவாகவும் உள்ளது.

() ஓய்வு நிலையிலுள்ள ஆக்ஸான் படலங்களுக்கிடையே Na+ மற்றும் K+ உந்தம் மூலம் அயனிகளின் வேறுபாடு பராமரிக்கப்படுகிறது. இது வெளியேறும் 3Na+ அயனிகளுக்கு பதிலாக 2K+ அயனிகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது

() ஆக்ஸான் படலத்தின் வெளிப்பரப்பு எதிர்மின் தன்மையுடனும் உட்பரப்பு நேர்மின் தன்மையுடனும் இருக்கும் போது மட்டுமே ஒரு நியூரான் மின் முனைப்பியக்கத்தைப் பெறும்.

விடை: () ஓய்வு நிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது. Na+ அயனிகளை ஊடுருவ விடுவதில்லை


11. கீழ்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மீதி மயலின் உறையுடன் தொடர்புடையது. அந்த ஒன்று எது?

() நரம்புத் தூண்டல் விரைவாகக் கடத்தப்படும்

() ரான்வியர் கணு ஆக்ஸான்களில் ஆங்காங்கே இடைவெளிகளை ஏற்படுத்துகின்றன

() நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல்

() செயல் மின்னழுத்தம் தாவுதல் வழி கடத்தப்படுகிறது

விடை: () நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல்


12. கூம்பு செல்கள் தொடர்பான பல கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கூம்பு செல்கள் பற்றிய சரியான கூற்றுகள் யாவை? கூற்றுகள்:

I. அதிக ஒளியில் குச்சி செல்களை விட கூம்பு செல்கள் குறைந்த உணர்திறன் கொண்டுள்ளன.

II. இவை நிறங்களை உணரப் பயன்படுகின்றன.

III. எரித்ராய்சின் என்னும் ஒளி நிறமி சிவப்பு வண்ண ஒளியை உணர்கிறது.

IV. விழித்திரையின் ஃபோவியா பகுதியில் காணப்படுகிறது.

() (iii), (ii) மற்றும் (i)

() (ii), (iii) மற்றும் (iv)

() (i), (iii) மற்றும் (iv) 

() (i), (ii) மற்றும் (iv) 

விடை: () (ii), (iii) மற்றும் (iv)


13. கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது?

() எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன.

() இதன் வழித்தொடர் பொதுவாக விருப்ப இயக்கமாகும்.

() இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.

() இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.

விடை: () இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.


14. ஆக்ஸான் படலத்திற்கிடையேயான மின்னழுத்தம் ஓய்வு நிலை மின்னழுத்தத்தைவிட அதிக எதிர் மின்தன்மையுடையதாகக் காணப்பட்டால் நியூரான் எந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும்?.

() மின்முனைப்பியக்க நீக்கம் 

() உச்ச மின்முனைப்பியக்கம்

() மின்முனைப்பியக்க மீட்சி

() குறை மின்முனைப்பியக்கம்

விடை: () மின்முனைப்பியக்க மீட்சி

Tags : Neural Control and Coordination | Zoology நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Choose the Correct Answers Neural Control and Coordination | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : சரியான விடையை தெரிவு செய்க - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு