நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination

   Posted On :  09.01.2024 07:12 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : கலைச்சொற்கள்

முக்கிய கலைச்சொற்கள்


கலைச் சொற்கள்   :   விளக்கம்

1. ஆம்புல்லா (Ampulla) - உணர்ச்சி நரம்புகளைக் கொண்ட ஒவ்வொரு அரைவட்டக் கால்வாயின் அகன்ற திறப்பு.

2. மின்முனைப்பியக்க நீக்கம் (Depolarization) - ஒரு நியூரானின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றிற்கிடையே சோடியம் அயனிகளின் ஊடுருவல் மற்றும் நகர்வில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக மின்னழுத்த வேறுபாட்டை இழத்தல்.

3. நரம்புணர்வுக் கடத்திகள் (Neurotransmitters) - வேதிய தூதுவர்கள் என்றும் அழைக்கப்படும். இவை நியூரானிலிருந்து மற்றொரு இலக்கு நியூரானுக்கும், தசை நரம்பு சந்திப்பு, தசைச் செல் அல்லது சுரப்பு செல்கள் ஆகியவற்றிற்கும் தூண்டல்களைக் கடத்துகின்றன.

4. நிஸ்ஸில் துகள் (Nissl's granules) - இவை நியூரானின் செல் உடலின் சைட்டோபிளாசத்தில் உள்ள தனி ரைபோசோம்களைக் கொண்ட அகப்பிளாச வலைப் பின்னலில் காணப்படுகின்றன. ஆனால், ஆக்ஸான்களில் இவை இல்லை. இத்துகள் புரத உற்பத்திக்களம் ஆகும்.

5. ரான்வியர் கணு (Nodes of Ranvier) - இவை சில நியூரான்களின் ஆக்ஸான் பகுதியைச் சூழ்ந்துள்ள மயலின் உறையில் குறிப்பிட்ட தூரத்தில் ஆங்காங்கே அமைந்துள்ள இடவெளிகளாகும். இவை நரம்புத் தூண்டல் துரிதமாக கடத்தப்பட உதவுகின்றன.

6. தன்னக உணர்வேற்பு (Proprioception) - உடலின் நிலை, இயக்கம் மற்றும் சமநிலை போன்ற உடலின் உட்புறத்திலிருந்து தோன்றும் தூண்டல்களை உணரும் தன்மை.

7. ஷிவான் செல்கள் (Schwann cells) - நியூரிலெம்மா செல் எனவும் அழைக்கப்படுகிற இச்செல்கள்| புறநரம்பு மண்டலத்தைச் சேர்ந்த நியூரான்களின் ஆக்ஸானைச் சுற்றி மயலின் உறையை உரவாக்குகின்றன. 19ம் நூற்றாண்டில் இச்செல்களைக் கண்டுபிடித்த ஜெர்மானிய உடற் செயலியலாளரான தியோடர் ஷிவான் என்பவரின் பெயரால் இச்செல்கள் அழைக்கப்படுகின்றன.

8. பெல்லுசிடம் இடைச்சுவர் (Septum pellucidum) - மூளையின் நடுக்கோட்டில் பெரு ளை அரைக்கோளங்களுக்கிடையில் அமைந்துள்ளது. இது பக்க வென்ட்ரிக்கிள்கள் I மற்றும் II ஐப் பிரிக்கின்றது.

9. உச்ச அளவுத் தூண்டல் (Threshold stimules) - ஒரு செயல்நிலை மின்னழுத்தத்தை ஏற்படுத்தத் தேவையான குறைந்தபட்ச தூண்டல்.


Tags : Neural Control and Coordination | Zoology நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Glossary Neural Control and Coordination | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : கலைச்சொற்கள் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு