Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination

   Posted On :  10.01.2024 01:05 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

15. குருட்டுப்புள்ளி எனப்படுவது எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

கண்ணின் பின் முனையின் மையப்பகுதிக்குச் சற்று கீழ் இரத்தக் குழாய்களும் பார்வை நரம்பும் கண்ணிற்குள் நுழைகின்றன.

இப்பகுதியில் ஒளியுணர் செல்கள் கிடையாது.

இந்த பகுதிக்கு குருட்டுப்புள்ளி என்று (Blind spot) அழைக்கப்படுகின்றன.


16. ஒருவரின் கண்பரிசோதகர் அவருடைய கண் உள்ளழுத்தம் அதிகளவில் உள்ளதாகக் கூறுகிறார். இந்நிலையின் பெயரென்ன? அதற்குக் காரணமான திரவம் எது?

கண் உள்அழுத்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்க்கு கிளாக்கோமா (Glaucoma) என்று பெயர்.

முன்கண் திரவம் (Aqueous humor) அதிகமானால் ஏற்படும்.

ஸ்க்லைம் கால்வாயில் ஏற்படும் அடைப்பால் கண் உள் அழுத்தம் அதிகரித்து விழித்திரையையும், பார்வை நரம்புகளையும் நெருங்கி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


17. தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும். ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது. இக்கோட்பாட்டின் பெயர் என்ன?

உச்ச அளவை விடக் குறைந்த மின்னழுத்தத்தில் நரம்பு செல்கள் எந்தவொரு மின்தூண்டலையும் கடத்த முடிவதில்லை இவ்வாறு ஏற்படும் செயல்களுக்கு உண்டு அல்லது இல்லை கொள்கை (All (or) None principle) பெயர்.


18. நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது. இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?

ஹைப்போதலாமஸில் உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு என்று பெயர்.

இந்த உறுப்பு வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் பங்கேற்கிறது.

இவை பசி, தாகம் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் மையமாகவும் செயல்படுகிறது.


19. மனிதரில் கார்னியா மாற்று சிகிச்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை ஏன்?

ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்கு குறைந்த நிராகரித்தல் அல்லது நிராகரித்தல் இல்லாத உடல் உறுப்பு மாற்றம் செய்யக் கூடிய ஒரே திசு கார்னியாவாகும்.

ஏனென்றால் இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்கு காரணம் ஆகும்.


20. முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyperpolarised) பெறுகிறது ஏன்?

மின் முனைப்பியக்கமீட்சி (Repolarisation) பிறகு மின்னழுத்தம் இயல்பான அளவான -70mV அளவையும் தாண்டி -90mV அளவிற்குச் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மை உடையதாக மாறுகிறது. இதனால் உச்ச மின் முனைப்பியக்கம் (Hyperpolarised) ஏற்படுகிறது.


21. கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது. அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.

மைய நரம்பு மண்டலப்பகுதிகளுக்கு மிதத்தல் தன்மையை இத்திரவம் அளிக்கிறது.

மூளை மற்றும் தண்டுவடத்திற்குப் பாதுகாப்பாக அதிர்ச்சி தாங்கியதாகவும் பயன்படுகிறது,

மூளை செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து கடத்துகிறது

மூளையின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை இரத்தத்திற்கு அனுப்பும் வேலையும் செய்கிறது

மூளை நாளங்களின் உள் அழுத்தம் நிலையாக பராமரிக்கும் வேலையும் மூளை தண்டு வடத்திரவம் செய்கிறது.


22. பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன ? அதன் பகுதிகளை விளக்குக.

கட்டுப்பாடு மையம் :

தானியங்கு நரம்பு மண்டலம்

கட்டுப்படுத்தும் உறுப்புகள்:

1.கண்கள் 

2. உமிழ்நீர் சுரப்பி 

3. இதயம்

4. நுரையீரல்

5. இரைப்பை

6. கல்லீரல்

7. சிறு நீரகம்

8. சிறு குடல்

9. சிறுநீர் பை


23. லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது அதன் பகுதிகளைக் கூறுக.

லிம்பிக் மண்டலம் இன்பம், வலி, கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கிறது.

லிம்பிக் மண்டல  உறுப்புகள்.

நுகர்ச்சி குமிழ்

சிங்குலேட் கைரஸ்

மாமில்லரி உறுப்பு

அமிக்தலா

ஹிப்போ காம்பஸ்

ஹைப்போதலாமஸ்


24. தூண்டுதல் அடிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்துக?




25. குச்சி மற்றும் கூம்பு செல்களை வேறுபடுத்துக.



26. அனைத்து உணர்வு உறுப்புகளிலும் சுவை உணர்வு உறுப்பு மகிழ்வூட்டக் கூடியது (Pleasurable). இதனுடன் தொடர்புடைய உணர்வியை படத்துடன் விளக்குக.

சுவை உணர்விகள் (Gustatory Receptor) 

எல்லா உணர்வுகளுக்கும் மேலான மகிழ்வூட்டும் உணர்வாகச் சுவை உணர்வு உள்ளது. நாவில் காணப்படும் சிறிய புடைப்புகள் பாப்பிலாக்கள் (papillae) எனப்படுகின்றன. இவை நாக்குக்குச் சொரசொரப்புத் தன்மையைத் தருகிறது. நாக்கு முழுவதும் பரவிக் காணப்படும் பாப்பில்லாக்களில் சுவை மொட்டுக்கள் அதிகம் காணப்படுகின்றன. எனினும் மேலண்ணத்தின் மென்மையான பகுதி, கன்னத்தின் உள்பரப்பு, தொண்டை பகுதி, குரல்வளை மூடி போன்ற பகுதிகளிலும் சுவை மொட்டுகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

சுவை மொட்டுகள் குடுவை வடிவமுடையவை. இவற்றில் 50-100 வரையிலான எபிதீலியல் செல்கள் காணப்படுகின்றன. இரண்டுவகை எபிதீலியல் செல்கள் உள்ளன. அவை 1) சுவை எபிதீலியல் செல்கள் (சுவை உணர்விகள்) (Gustatory cells) 2) அடிப்படை அல்லது பேசல் எபிதீலியல் செல்கள் (புதுப்பிக்கும் செல்கள்) (basal cells) ஆகியவையாகும். சுவை எபிதீலிய செல்களிலிருந்துவெளிவரும்சுவைநுண்இழைகள் (Gustatory hair cells) சுவைத் துளைகளின் வழியாக (taste pore) வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இவை உமிழ்நீரில் அமிழ்ந்து காணப்படுகின்றன. சுவை உணர் செல்களில் உள்ள சுவை நுண் இழைகளே சுவையை உணரும் பகுதியாகும். இச்செல்களில் உணர்தன்மை கொண்ட டென்ட்ரைட்டுகள் (Dendrite) சுவைக்கேற்பக் குறிப்புகளை (signal) மூளைக்கு அனுப்புகின்றன.பேசல் செல்கள், மூலச்செல்களாக செயல்பட்டு, புதிய சுவை எப்பிதீலியல் செல்களை உருவாக்குகின்றன.


27. தோலில் காணப்படும் உணர் வேற்பிகளை விளக்குக.

தோல்- தொடு உணர் உறுப்பு (Skin - Sense of Touch)

தோல் ஒரு மிகப்பெரிய தொடு உணர்வு உறுப்பாகும். தோல் பரப்பு முழுவதும் பரவியுள்ள மில்லியன் கணக்கான நுண்உணர்வேற்பிகள், தொடுதல், அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி, வலி ஆகிய உணர்வுகளை அறிய உதவுகின்றன. விரல் நுனிகளில் இவ்வுணர்வேற்பிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் அப்பகுதி அதிக உணர்வுகளை கண்டறிகிறது.தோலில் உள்ள உணர்வேற்பிகளில் சில (படம். 10.21) கீழே தரப்பட்டுள்ளன.


எபிடெர்மிஸ் அடுக்கில் ஆழ்பகுதியிலுள்ள, மென்மையான தொடுதல்களை உணரக்கூடியவை மெர்கெல் வட்டுகள் (Merkel disc) ஆகும்.

மயிர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்பைகளில் உள்ள உணர்வேற்பிகளும். மெல்லிய தொடுதலை உணரக்கூடியவை.

மீஸ்னரின் துகள்கள் (Meissner's corpuscles): தோல் பாப்பில்லாக்களில், எபிடெர்மல் அடுக்கின் கீழ் அமைந்துள்ள இவை, மென்மையான அழுத்தங்களை உணரக்கூடியவை. முடிகளற்ற தோல் பகுதிகளான விரல்முனைகள் மற்றும் பாதங்களில் இவை அதிகமுள்ளன.

* பாசினியன் துகள்கள் (Pacinian corpuscles): முட்டை வடிவம் கொண்ட இவை, டெர்மிஸ் பகுதியின் ஆழ்பகுதியில் பரவலாக உள்ளன. அழுத்தத்தால் ஏற்படும் அதிர்வுகளை இவை உணர்கின்றன. மேலும் வலி, கடினத்தன்மை, வெப்பம் மற்றும் வேறுபட்ட தொடுபரப்புகளை உணரும் தன்மையைத் தருகின்றன.

* ரஃபினி முனைகள் (Ruffini endings): தொடர் அழுத்தத்தை உணரும் இவை டெர்மிஸ் அடுக்கில் உள்ளன.

* கிராஸ் முனைக்குமிழ்கள் (Krause end bulbs): இவை வெப்பத்தை உணரும் வெப்ப உணர்வேற்பிகள் ஆகும்.


Tags : Neural Control and Coordination : Zoology நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Answer the following questions Neural Control and Coordination : Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு