Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வரிசையாக அடுக்குதல்

தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வரிசையாக அடுக்குதல் | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing

   Posted On :  24.11.2023 01:00 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வரிசையாக அடுக்குதல்

நம் அன்றாட வாழ்க்கையில் அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்தல், காலணிகளைச் சட்டத்தில் வரிசையாக வைத்தல், தட்டில் உள்ள காய்கறிகளைப் பிரித்து வைத்தல், அலமாரியில் வீட்டு பயன்பாட்டுப் பொருள்களை அடுக்கி வைத்தல். மளிகைப் பொருள்களை அடுக்களையில் வைத்தல், செலவுகளைப் பட்டியலிடுதல் போன்ற சூழ்நிலைகளில் வகைப்படுத்துவது தவிர்க்க இயலாததாகிறது.

பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வரிசையாக அடுக்குதல்

நம் அன்றாட வாழ்க்கையில் அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்தல், காலணிகளைச் சட்டத்தில் வரிசையாக வைத்தல், தட்டில் உள்ள காய்கறிகளைப் பிரித்து வைத்தல், அலமாரியில் வீட்டு பயன்பாட்டுப் பொருள்களை அடுக்கி வைத்தல். மளிகைப் பொருள்களை அடுக்களையில் வைத்தல், செலவுகளைப் பட்டியலிடுதல் போன்ற சூழ்நிலைகளில் வகைப்படுத்துவது தவிர்க்க இயலாததாகிறது. இந்தச் செயல்பாடுகள் பொருள்கள் வைத்த இடத்தை எளிதில் நினைவுபடுத்தவும், பொருள்களை உடனடியாக எடுக்கவும் அப்பொருள்களைச் சேதாரம் இல்லாமல் பயன்படுத்தவும் உதவுகின்றன. எண்களிலும் இதே போன்ற வரிசைப்படுத்துதல்கள் உள்ளன. எடுத்துக்காட்டு: நாள்காட்டி.


கீழ்க்கண்ட சூழ்நிலைகளைக் குழுவாக அமர்ந்து விவாதிக்க.


சூழ்நிலை 1

100 புத்தகங்களை ஓர் அலமாரியில் நீங்கள் அடுக்க வேண்டும் எனக் கொள்க. அந்த அலமாரியில் 10 வரிசைகளும், ஒவ்வொரு வரிசையிலும் 10 புத்தகங்களை வைக்க இடமுள்ளது. மேலும் ஒவ்வொரு புத்தகத்தின் மீது அடையாள எண் எழுதப்பட்டுள்ளது, அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்களை எவ்வாறு அடுக்கி வைப்பீர்கள்? மிகச்சிறிய அடையாள எண் உள்ள புத்தகத்தை மேல் வரிசையின் இடது பக்கத்திலும், மேலும் பெரிய அடையாள எண் உள்ள புத்தகத்தை கீழ் வரிசையின் வலது பக்கத்திலும் வரிசைப்படுத்துவோம்.

கீழே உள்ள வினாக்களை விவாதிக்க

i) புத்தகங்களை வேறு ஏதேனும் வழிகளில் அடுக்க இயலுமா?

ii) ஒரு வழியில் அடுக்குவதைவிட வேறு வழியில் அடுக்குவது சிறப்பானது என்று எவ்வாறு அறிவாய்?

iii) இரண்டு பேர் புத்தகங்களைச் சேர்ந்து அடுக்கினால், அவ்விருவரும் எப்படி இந்தப் பணியினைப் பகிர்ந்துகொள்வார்கள்?

iv) புத்தகத்தின் மீது அடையாள எண் இல்லை என்றால், எவ்வாறு நீங்கள் அடுக்குவீர்கள்

v) அடையாள எண்ணை வைத்து அடுக்குவதை விட அவற்றின் அளவை வைத்து அடுக்குவது சிறந்ததா? ஏன் ?


சூழ்நிலை 2

நீங்கள் உங்களது உண்டியலில் சில்லறைக் காசுகளைச் சேமித்து வைப்பதாகக் கொள்வோம். உண்டியலில் எவ்வளவு பணம் சேமித்து வைத்துள்ளோம் என நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள் ?

i) எந்தெந்த வழிகளில் சில்லறைகளை எண்ணுவீர்கள்?

ii) அவற்றுள் எந்த வழி எளிமையானது?

iii) சில்லறையை அவற்றின் மதிப்புகளுக்கு ஏற்ப அடுக்க இயலுமா?



சூழ்நிலை 3

தெருக்களில் குப்பைகளை வகைப்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? சில குப்பைகள் எளிதில் மக்கக் கூடியவை. வேறு சில குப்பைகள் எளிதில் மக்காதவையாகும்.


மருத்துவமனைக் கழிவுகள், நெகிழிகள், கண்ணாடிப் பொருட்கள் போன்றவை மக்காத குப்பைகளாகும்.

இது போன்ற குப்பைகள் எவ்வாறு தரம் பிரித்தெடுக்கப்படுகின்றன?

குறிப்பு

மாணவர்களிடம் குப்பைகளைப் பிரித்தெடுத்தல் பற்றி மேலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்கள் விவாதிக்க வேண்டும்.


எடுத்துக்காட்டு

2019 ஆம் ஆண்டு சனவரி மாத நாள்காட்டி அட்டையை உற்றுநோக்கிக் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.


i) நாள்காட்டியில் இருந்து பகா எண்கள் மற்றும் பகு எண்களை  வகைப்படுத்துக.

ii) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைப் வகைப்படுத்துக.

iii) 6 மற்றும் 4 இன் மடங்குகளையும் அவற்றின் பொது மடங்குகளையும் அவ்விரு எண்களின் மீ.சி.வையும் வகைப்படுத்துக.

iv) திங்கட்கிழமை வரும் தேதிகளை வகைப்படுத்துக.

தீர்வு

i) பகா எண்கள் = 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31

பகு எண்கள் = 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30

ii) ஒற்றை எண்கள் = 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31

இரட்டை எண்கள் = 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30

iii) 6 இன் மடங்குகள் = 6, 12, 18, 24, 30,

4 இன் மடங்குகள் = 4, 8, 12, 16, 20, 24, 28

பொது மடங்குகள் = 12, 24

மீ.சி. (L.C.M) = 12

iv) திங்கள் கிழமை வரும் நாட்கள் = 7,14,21,28

Tags : Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 5 : Information Processing : Arranging things and putting them in order Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வரிசையாக அடுக்குதல் - தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்