Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | காரமண் உலோகங்களின் வேதிப்பண்புகள்
   Posted On :  25.12.2023 03:49 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

காரமண் உலோகங்களின் வேதிப்பண்புகள்

கார உலோகங்களைக் காட்டிலும், காரமண் உலோகங்கள் குறைவான வினைத்திறனைப் பெற்றுள்ளன.

காரமண் உலோகங்களின் வேதிப்பண்புகள்

கார உலோகங்களைக் காட்டிலும், காரமண் உலோகங்கள் குறைவான வினைத்திறனைப் பெற்றுள்ளன. தொகுதியில் கீழே வரும் போது இவற்றின் வினைத்திறன் அதிகரிக்கின்றது.

ஹாலஜன்களுடன் வினை

அதிக வெப்ப நிலையில், அனைத்து காரமண் உலோகங்களும், ஹாலஜன்களுடன் இணைந்து, அவைகளின் ஹாலைடுகளை உருவாக்குகின்றன.

M + X2 MX2

(M = Be, Mg, Ca, Sr, Ba, Ra, 

X = F, Cl, Br, l )

(NH4)2 BeF4 வெப்பச் சிதைவடையச் செய்தல் வினையானது BeF2 தயாரிக்க சிறந்த முறையாகும். BeCl2 வை அதன் ஆக்சைடிலிருந்து எளிதாக தயாரிக்கலாம்.


ஹைட்ரஜனுடன் வினை

பெரிலியத்தினைத் தவிர்த்து பிற தனிமங்கள் வெப்பப்படுத்தும் போது, ஹைட்ரஜனுடன் இணைந்து MH2 என்ற பொது வாய்ப்பாடுடைய ஹைட்ரைடுகளைத் தருகிறது. BeCl2 மற்றும் LiAlH4 ஆகியவற்றை வினைப்படுத்துவதன் மூலம் BeH2 ஐத் தயாரிக்கலாம்.

2 BeCl2 + LiAlH4 2 BeH2 + LiCl + AlCl3

11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Chemical properties of alkaline earth metals in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : காரமண் உலோகங்களின் வேதிப்பண்புகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்