Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு )

பயன்கள் - சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு ) | 11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு )

கடல்நீரை ஆவியாக்கி சோடியம் குளோரைடு தனியாக பிரிக்கப்படுகிறது, கடல் நீரின் எடையில் 2.7 - 2.9% வரை சோடியம் குளோரைடு உப்பு உள்ளது.

சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு )

கடல்நீரை ஆவியாக்கி சோடியம் குளோரைடு தனியாக பிரிக்கப்படுகிறது, கடல் நீரின் எடையில் 2.7 - 2.9% வரை சோடியம் குளோரைடு உப்பு உள்ளது. இந்தியாவில், ஒரு ஆண்டில் தோராயமாக 50 லட்சம் டன் உப்பு, சூரிய ஆவியாக்கல் முறையில் பெறப்படுகிறது. உப்புநீரை படிகமாக்குவதன் மூலம் பண்படாத சோடியம் குளோரைடு பெறப்படுகிறது, இதில் சோடியம் சல்பேட், கால்சியம் சல்பேட், கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீசியம் குளோரைடு ஆகியவை மாசுக்களாக உள்ளன. பண்படாத உப்பிலிருந்து தூய சோடியம் குளோரைடை பின்வருமாறு பெற முடியும் முதலில் பண்படாத உப்பை குறைந்த அளவு நீருடன் சேர்த்து, வடிகட்டி கரையாத மாசுகள் நீக்கப்படுகின்றன. இக்கரைசலினுள் HCl வாயுவினை செலுத்தி சோடியம் குளோரைடு படிகமாக்கப்படுகின்றது. சோடியம் குளோரைடை விட கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு அதிகமாகக் கரைவதால் கரைசலிலேயே தங்கி விடுகின்றன.

சோடியம் குளோரைடு 1081K வெப்பநிலையில் உருகுகிறது. இது 273K வெப்பநிலையில் 100g நீரில் 36.0g கரைதிறனைக் கொண்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்து, கரைதிறன் கனிசமாக அதிகரிப்பதில்லை.

 

பயன்கள்

i) வீட்டு உபயோகத்திற்காக சாதாரண உப்பு (சமையல் உப்பு) பயன்படுகிறது.

ii) NaOH மற்றும் Na2CO3 போன்ற பல கனிம சேர்மங்களின் தயாரிப்பில் பயன்படுகிறது


Tags : Uses பயன்கள்.
11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Sodium chloride NaCl (Cooking salt or Table salt) Uses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : சோடியம் குளோரைடு NaCl ( சமையல் உப்பு ) - பயன்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்