Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையை தெரிவு செய்க

கேள்விகளுக்கான பதில்கள் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals

   Posted On :  25.12.2023 06:02 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : சரியான விடையை தெரிவு செய்க

மதிப்பீடு


I. சரியான விடையை தெரிவு செய்க.

1. கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது

. நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb

. அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb

. அடர்த்தி Li < Na < K < Rb

. அணு உருவளவு : Li < Na < K < Rb

[விடை: ) அடர்த்தி : Li < Na < K < Rb]

தீர்வு: 

பொட்டாசியமானது சோடியத்தை விட இலேசானது.

(அட்டவணை 5.3 ஐப் பார்க்க

அடர்த்தியின் சராசரி வரிசை

Li < K Na < Rb < Cs

0.54 < 0.86 < 0.97 < 1.53 < 1.90 (in g cm−3)


2. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

. கார உலோக நேரயனிகளில், Li+ அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு.

. KO2 ல் K ன் ஆக்ஸிஜனேற்ற எண் +1.

. Na / Pb உலோக கலவையை உருவாக்க சோடியம் பயன்படுகிறது.

. MgSO4 நீரில் எளிதில் கரையும்

[விடை) கார உலோக நேரயனிகளில் Li+ அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு. ]

தீர்வு: 

கார உலோக நேர் அயனிகளுள் Li+ அயனியானது அதிக நீரேற்று தன்மையை பெற்றுள்ளது.

Li+ > Na+ > K+ > Rb+ > Cs+


3. பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?

. எத்தனாயிக் அமிலம்

. எத்தனால்

. பீனால்

. இவற்றில் ஏதுமில்லை

[விடை) இவற்றில் ஏதுமில்லை]

தீர்வு: 

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சேர்மங்களும் கார உலோகங்களுடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. எனவே இவற்றில் ஏதுமில்லை என்பதே சரியான விடையாகும்.


4. கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.


. Na

. Li

. Rb

. K

[விடை) Li]

தீர்வு: 

Li+ ன் நீரேற்ற ஆற்றல் அதிகம். எனவே Li+ ஆனது நீர் ஊடகத்தில் நிலைப்புத் தன்மை அடைகிறது.


5. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

. ஆல்கஹால்

. நீர்

. மண்ணெண்ணெய்

. இவற்றில் ஏதுமில்லை

[விடை) மண்ணெண்ணெய்]


6. RbO2 சேர்மம் ஒரு

. சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது.

. பெராக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது.

. சூப்பர் ஆக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது.

. பெராக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது.

[விடை) சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது.]

தீர்வு: 

RbO2 ஆனது ஒரு சூப்பர் ஆக்ஸைடு ஆகும். இது Rb+ மற்றும் O2 அயனிகளைக் கொண்டுள்ளது. மேலும் O2 அயனியானது ஒரு தனித்த எலக்ட்ரானைக் கொண்டுள்ளது. எனவே இது பாரா காந்தத் தன்மையுடையது.


7. தவறான கூற்றைக் கண்டறியவும்.

. கரிம பண்பறி பகுப்பாய்வில் உலோக சோடியம் பயன்படுத்தப்படுகிறது.

. சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

. சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்.

. பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு

[விடை: ) சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்.]

தீர்வு: 

சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க இயலாது. பொட்டாசியம் பை கார்பனேட் நீரில் குறிப்பிடத்தக்க அளவில் கரையக் கூடியது. எனவே வீழ்ப்படிவாவதில்லை.


8. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

. சோடியம்

. மெக்னீசியம்

. கால்சியம்

. அலுமினியம்

[விடை: ) மெக்னீசியம்]

தீர்வு: 



9. கார உலோக ஹேலைடுகளின், அயனித் தன்மையின் ஏறுவரிசை

) MF < MCI < MBr < MI

) MI < MBr < MCl < MF

) MI < MBr < MF < MCI

) இவற்றில் ஏதுமில்லை

[விடை: ) MI < MBr < MCl< MF ]

தீர்வு: 

அயனிப் பண்பு (எலக்ட்ரான் கவர்தன்மையில் வேறுபாடு)

MI < M Br <  MCl < MF


10. எம்முறையில், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது?

. காஸ்ட்னர் முறை

. சயனைடு முறை

. டௌன் முறை

இவை அனைத்தும்

[விடை: ) காஸ்ட்னர் முறை

தீர்வு: 

காஸ்ட்னர் முறை NaOH Na+ + OH

எதிர்மின்வாய்: Na+ + e → Na

நேர்மின்வாய் : 2OH → H2O + ½  O2 + e


11. நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

) Ca(CN)3

) CaN2

) Ca(CN)2

) Ca3N2

[விடை) Ca(CN)2 ]

தீர்வு: 



12. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

) MgCl2

) CaCl2

) BaCl2

) SrCl2

[விடை) MgCl2 ]

தீர்வு: 

கார மண் உலோகங்களின் நீரேற்ற ஆற்றலின் வரிசை Be2+ > Mg2+ > Ca2+ > Sr2+ > Ba2+


13. புன்சன் சுடரில் கார மற்றும் கார மண் உலோக உப்புகள் காட்டும் நிறங்களைப் பொருத்துக.

(p) சோடியம் (1) செங்கல் சிவப்பு

(q) கால்சியம் (2) மஞ்சள்

(r) பேரியம்             (3) லைலாக் (ஊதா)

(s) ஸ்ட்ரான்சியம் (4) ஆப்பிள் பச்சை

(t) சீசியம் (5) கிரிம்சன் சிவப்பு

(u) பொட்டாசியம் (6) நீலம்

) p - 2, q - 1, r - 4, s - 5, t - 6, u - 3

) p - 1, q - 2, r - 4, s - 5, t - 6, u - 3

) p - 4, q - 1, r - 2, s - 3, t - 5, u - 6

) p - 6, q - 5, r - 4, s - 3, t - 1, u - 2

[விடை: ) p − 2, q − 1, r − 4, s − 5, t − 6, u – 3]

தீர்வு: 

p) சோடியம்மஞ்சள் (2)

q) கால்சியம்செங்கல் சிவப்பு (1)

r) பேரியம்ஆப்பிள் பச்சை (4) 

s) ஸ்ட்ரான்சியம்கிரிம்சன் சிவப்பு (5)

t) சீசியம்நீலம் (6) 

u) பொட்டாசியம்ஊதா (3) 


14. கூற்று : பொதுவாக கார மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன.

காரணம் : சூப்பர் ஆக்சைடுகளில் O மற்றும் O அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

[விடை) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.]

தீர்வு: 

கார மற்றும் காரமண் உலோகங்களில், K, Rb மற்றும் Cs ஆகியன மட்டுமே சூப்பர் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. சூப்பர் ஆக்ஸைடில் O2  ஆனது 3 எலக்ட்ரான் பிணைப்பினைக் கொண்டுள்ளது


15. கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BaSO4 நீரில் கரைவதில்லை.  

காரணம் : தொகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது, மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.

. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

[விடை: ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ]


16. கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின், கரைதிறன்களின் சரியான வரிசை

) BaCO3 > SrCO3 > CaCO3 > MgCO3

) MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3

) CaCO3 > BaCO3 > SrCO3 > MgCO3

) BaCO3 > CaCO3 > SrCO3 > MgCO3

[விடை: ) MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3 ]

தீர்வு: 

ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்பொழுது கார்பனேட்டுகளின் கரையும் திறன் குறைகிறது. எனவே சரியான கரைதிறன் வரிசை 

MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3


17. பெரிலியத்தினை பொருத்து, பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

. நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது.

. Be2C உருவாக்குகிறது.

. இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்படுகின்றன.

. இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது, மற்றும் பலபடி அமைப்புடையது.

[விடை: ) இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்படுகின்றன ]

தீர்வு: 

சரியான கூற்று : பெரிலியத்தின் உப்புகள் எளிதில் நீராற்பகுக்கப்படுகின்றன.


18. நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் __________ என அறியப்படுகிறது?

. சுண்ணாம்பு நீர்

. சுட்ட சுண்ணாம்பு

. சுண்ணாம்பு பால்

. நீற்ற சுண்ணாம்புக் கரைசல்

[விடை) சுண்ணாம்பு பால்]

தீர்வு: 

நீற்றுச் சுண்ணாம்பு Ca(OH)2

தொங்கலானது சுண்ணாம்புப் பால் (Milk of Lime) என்றழைக்கப்படுகிறது. மேலும் தெளிவான கரைசல் சுண்ணாம்பு நீர் (Lime Water) என்றழைக்கப்படுகிறது.


19. ஒரு நிறமற்ற திண்மம் (A) வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 தருகிறது. எனில் அந்த திண்மப்பொருள் A

) Na2CO3

) NaHCO3

) CaCO3

) Ca(HCO3)2

[விடை: ) NaHCO3]

தீர்வு: 



20. சேர்மம் (X) வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C) உருவாகிறது. (C) வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது

) CaCO3

) Ca(OH)2

) Na2CO3

) NaHCO3

[விடை: ) Ca(OH)2]

தீர்வு: 



21. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

. சீரான இதயத் துடிப்பை பராமரிப்பதில் Ca2+ அயனிகளின் பங்களிப்பு ஏதுமில்லை.

. தாவரங்களின் பச்சையத்தில் Mg2+ அயனிகள் முக்கியமானவை.

. Mg2+ அயனிகள் ATP மூலக்கூறுகளுடன் அணைவுகளை உண்டாக்குகின்றன.

. Ca2+ அயனிகள் இரத்தம் உறைதலில் முக்கியமானவை.

[விடை. சீரான இதயத் துடிப்பை பராமரிப்பதில் Ca2+ அயனிகளின் பங்களிப்பு ஏதுமில்லை.]

தீர்வு: 

Ca2+அயனியானது சீரான இதயத்துடிப்பை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.


22. பின்வரும் சேர்மங்களில் எதற்கு "Blue John" எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?

. CaH2

. CaF2

. Ca3(PO4)2

. CaO

[விடை) CaF2 ]

தீர்வு: 

‘Bluejohn′ − CaF2 (ஃபுளூரைட்டின் ஒரு வகை)


23. ஜிப்சத்தின் வாய்ப்பாடு

) CaSO4. 2H2O

) CaSO4. 1/2 H2O

) 3 CaSO4. H2O

) 2 CaSO4; 2H2O

[விடை) CaSO4.2H2O ]


24. CaC2 வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.

) Ca(CN)2

) CaNCN

) CaC2N2

) CaNC2

[விடை) CaNCN ]

தீர்வு: 



25. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

) K2CO3

) Na2CO3

) BaCO3

) Li2CO3

[விடை: ) Li2CO3]

 தீர்வு: 

Li2CO3 ஆனது குறைவான நிலைப்புத் தன்மை உடையது

Tags : with Answers and Solution கேள்விகளுக்கான பதில்கள்.
11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Choose the best Answer: Alkali and Alkaline Earth Metals (Chemistry) with Answers and Solution in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : சரியான விடையை தெரிவு செய்க - கேள்விகளுக்கான பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்