Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள்

கதிர் ஒளியியல் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் | 12th Physics : UNIT 6 : Ray Optics

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்

கருத்துரு வினாக்கள்

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : கருத்துரு வினாக்கள், பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

IV. கருத்துரு வினாக்கள்


1. தட்டு வடிவ விண்ணலைக் கம்பிகள் (Dish antennas) ஏன் உட்குழிந்து காணப்படுகின்றன

ஒரே திசையில் பயணிக்கும் இணையான சைகை அலைகளை ஏற்பி வைக்கும் புள்ளியில் குவிப்பதற்காகவே தட்டுவடிவ விண்ணலைக் கம்பிகள் உட்குழிந்து காணப்படுகிறது


2. தண்ணீரின் உள்ளே தோன்றும் நீர்க்குமிழிகள் எவ்வகையான லென்ஸ்களை உருவாக்கும்

நீர்க்குமிழி, அதிக ஒளிவிலகல் எண்ணை கொண்ட நீரினால் மூடப்பட்ட ஒரு கோள பரப்பு. ஒளி நீரிலிருந்து காற்று நோக்கி செல்லும் போது அவை விலகும். எனவே அவை குழிலென்ஸ்களாக செயல்படுகிறது


3. இரண்டு லென்ஸ்களைக் கொண்டு, சுழிதிறன் கொண்ட லென்ஸ் அமைப்பை உருவாக்க முடியுமா

முடியும். இரு குழி பரப்பின் வளைவுகள் சமமாக இருந்தால் R1 = R2


P = 0


4. குவியத்தூரம் f கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்றின் வழியே I செறிவு கொண்ட ஒளி ஊடுருவிச் செல்கிறது. படத்தில் உள்ளவாறு லென்சை செங்குத்தாகவும் பக்கவாட்டிலும் வெட்டினால் லென்சின் குவியத்தூரம் மற்றும் ஒளிச்செறிவில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?


விடை: லென்ஸை பக்கவாட்டில் இரண்டு பகுதிகளாக வெட்டும்போது:

(i) வளைவு ஆரத்தில் எந்த பாதிப்பு இல்லை என்பதால் குவியத்தூரத்திலும் எவ்வித மாற்றமும் இருக்காது, எனவே குவியம் அதே அளவினதாகவே இருக்கும்.

(ii) உருவான பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும். ஒவ்வொரு புள்ளியின் துளையும், முழு லென்ஸ் துளையின் 1/√2 மடங்காக இருக்கும்.

லென்ஸை செங்குத்தாக வெட்டுதல் :

லென்சானது ஒளியியல் அச்சுடன் முதன்மை அச்சுக்கு செங்குத்தாக வெட்டப்படுகிறபோது, குவியத்தூரம் இரு மடங்கு ஆகும். ஏனெனில், லென்ஸானது இரு புற குவிலென்ஸ் ஆக இருப்பதால்,

R1 = R2 = R

ஆகவேf = R / (n-1)

இப்போது அது தட்டை-குவிலென்ஸ் ஆகிறது. லென்ஸின் துளை குறைவதில்லை. ஆகவே செறிவில் எந்த மாற்றமும் இல்லை.


5. மூடுபனி உள்ள இடங்களில் மஞ்சள் நிற ஒளிவிளக்குகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது ஏன்

வெள்ளை நிற ஒளியின் கூறுகளான பச்சை, நீலம் அல்லது ஊதா நிற கதிர்களை காட்டிலும் மஞ்சள் நிற ஒளியின் அலைநீளம் அதிகம்

ராலே சிதறல் விதியின் படி, மஞ்சள் நிறம் குறைவாக சிதறல் அடையும். எனவே அவ்வகை ஒளிவிளக்குகள் போதுமான வெளிச்சத்தை ஏற்படுத்தும்

Tags : with solution and answers | Ray Optics | Physics கதிர் ஒளியியல் | இயற்பியல்.
12th Physics : UNIT 6 : Ray Optics : Conceptual Questions with solution and answers | Ray Optics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : கருத்துரு வினாக்கள் - கதிர் ஒளியியல் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்