Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயற்பியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Physics : UNIT 6 : Ray Optics

   Posted On :  27.11.2023 10:32 pm

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

அலகு − 6

கதிர் ஒளியியல்


மதிப்பீடு 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 


1. திசையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic) ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது

(a) அதன் ஒளிச்செறிவு 

(b) அதன் அலைநீளம் 

(c) பரவும் தன்மை

(d) ஊடகத்தைப் பொருத்து ஒளிமூலத்தின் இயக்கம் 

விடை: b) அதன் அலைநீளம் 


2. 10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்தூரம் கொண்ட குழி அடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளது. தண்டின் ஒரு முனை குழி ஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால், கிடைக்கும் பிம்பத்தின் நீளம் என்ன

(a) 2.5 cm

(b) 5cm 

(c) 10 cm

(d) 15cm 

விடை: (b) 5cm 



3. குவியத்தூரம் f கொண்ட குவி ஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில், குவி ஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறுமத் தொலைவுகள் யாவை?

(a) 2f மற்றும் c

(b) c மற்றும்

(c) f மற்றும் O

(d) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை: (d) மேற்கண்ட எதுவுமில்லை 


4. காற்றிலிருந்து, ஒளிவிலகல் எண் 2 கொண்ட கண்ணாடிப் பட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில், சாத்தியமான பெரும விலகுகோணத்தின் மதிப்பு என்ன

(a) 30°

(b) 45°

(c) 60o

(d) 90° 

விடை: (a) 30°

தீர்வு:

μ = sin i / sin r

sin r = sin i / μ

sin r = ½

r = sin−1[ 1/2]

r = 30°


5. காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே Va மற்றும் λa. இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λw எனில், தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?

a) Vw / Va

b) Va / Vw

c) λw / λ a

d) Vaλa / Vwλw

விடை: b) Va / Vw

தீர்வு:

μ = Va / Vw


6. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

(a) ஒளி எதிரொளிப்பு 

(b) முழு அக எதிரொளிப்பு 

(c) ஒளி விலகல்

(d) தளவிளைவு 

விடை: (c) ஒளி விலகல்


7. ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் எவ்வாறு இருக்க வேண்டும்

(a) ஒன்றைவிடக் குறைவு 

(b) கண்ணாடியைவிடக் குறைவாக 

(C) கண்ணாடியைவிட அதிகமாக

(d) கண்ணாடிக்குச் சமமாக 

விடை: (d) கண்ணாடிக்குச் சமமாக 

தீர்வு:


சமதள தகடு ஒன்றின்

f = α

1 / f = 0

μ1 – μg


8. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல் எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்

(a) 5 cm

(b) 10 cm 

(c) 15 cm

(d) 20 cm 

விடை: (b) 10 cm 



9. ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று உள்ளது. (செங்குத்துப் படுகதிர்நிலைக்கு அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது, காற்றுக் குமிழ் 5 cm ஆழத்திலும், மற்றொரு பக்கம் வழியாக பார்க்கும்போது 3 cm ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன?

(a) 8 cm

(b) 10 cm

(c) 12 cm

(d) 16 cm

விடை: (c) 12 cm

தீர்வு:

மொத்த தோற்ற ஆழம் = 5 + 3 = 8 cm

உண்மையான ஆழம் = கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் 

μ = உண்மையான ஆழம் / தோற்ற ஆழம்

1.5 = தடிமன் / 8

தடிமன் = 1.5 × 8 = 12 cm


10. ஒளிவிலகல் எண் n கொண்ட ஒளிபுகும் ஊடகத்தின் வழியே செல்லும் ஒளிக்கதிர், காற்றிலிருந்து இந்த ஊடகத்தைப் பிரிக்கும் தளத்தின் மீது 45° கோணத்தில் விழுந்து முழு அக எதிரொளிப்பு அடைகிறது எனில், n இன் மதிப்பு என்ன

(a) n = 1.25

(b) n = 1.33

(c) n = 1.4

(d) n = 1.5 

விடை: (d) n = 1.5 

தீர்வு:

முழு அக எதிரொளிப்பில் i > iC.

sin i > sin iC

sin 45° > 1/μ 

1/√2 > 1/μ 


μ > √2

μ >1.414

μ = 1.50

Tags : Ray Optics | Physics இயற்பியல்.
12th Physics : UNIT 6 : Ray Optics : Multiple choice questions Ray Optics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்