Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கண்ணாடிப்பட்டகத்தின் வழியே ஒளி விலகல்
   Posted On :  22.11.2022 01:43 am

12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்

கண்ணாடிப்பட்டகத்தின் வழியே ஒளி விலகல்

கண்ணாடிப்பட்டகம் என்பது, கனசதுரக்கண்ணாடி ஆகும். இதன்வழியே ஒளி செல்லும்போது கண்ணாடிப்பட்டகத்தின் இரண்டு ஒளிவிலகு பரப்புகளிலும் ஒளிவிலகல் ஏற்படுகின்றது.

கண்ணாடிப்பட்டகத்தின் (glass slab) வழியே ஒளி விலகல்

கண்ணாடிப்பட்டகம் என்பது, கனசதுரக்கண்ணாடி ஆகும். இதன்வழியே ஒளி செல்லும்போது கண்ணாடிப்பட்டகத்தின் இரண்டு ஒளிவிலகு பரப்புகளிலும் ஒளிவிலகல் ஏற்படுகின்றது. கண்ணாடிப்பட்டகத்தின் உள்ளே ஒளி செல்லும்போது, அடர் குறை ஊடகத்தில் இருந்து (காற்று) அடர்மிகு ஊடகத்திற்கு (கண்ணாடி) ஒளி செல்கிறது. எனவே, ஒளி செங்குத்துக்கோட்டை நோக்கி விலகும். கண்ணாடிப்பட்டகத்திலிருந்து ஒளி வெளியேறும்போது, அது அடர்மிகு ஊடகத்திலிருந்து, அடர்குறை ஊடகத்திற்கு வருகிறது. எனவே, ஒளி செங்குத்துக்கோட்டைவிட்டு விலகிச்செல்லும். இரண்டு ஒளி விலகல்களும் நிறைவுபெற்றபின் கண்ணாடிப்பட்டகத்திலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர் பக்கவாட்டு இடப்பெயர்ச்சி (L) அடைந்து படுகதிரின் திசையிலேயே பயணிக்கும். அதாவது, ஒளிக்கதிரின் திசையில் எவ்வித மாற்றமும் இல்லை . ஆனால், படுகதிர் மற்றும் விலகுகதிர் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாக வெவ்வேறு பாதைகளில் செல்கின்றன. பக்கவாட்டு இடப்பெயர்ச்சியைக் கணக்கிட படம் 6.30 இல் காட்டியுள்ளவாறு படுகதிர் மற்றும் விலகுகதிரின் பாதைகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு வரைய வேண்டும்.


கண்ணாடிப்பட்டகம் ஒன்றைக் கருதுக. அதன் தடிமன் (t), ஒளிவிலகல் எண்(n) ஆகும். இப்பட்டகம் காற்று ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் பாதையை ABCD எனக் கருதுக. படுகோணம் (i) மற்றும் விலகுகோணம் (r) இரண்டும் செங்குத்துக் கோடுகள் N1 மற்றும் N2,ஐ பொருத்துக் கண்ணாடிப்பட்டகத்தின் B மற்றும் C புள்ளிகளில் கணக்கிடப்படுகின்றன. C புள்ளியில் விலகுகதிர் மற்றும் திசைமாறா படுகதிர் இவற்றிற்கிடையே வரையப்பட்ட செங்குத்துக்கோடு (CE) பக்கவாட்டு இடப்பெயர்ச்சி (L) ஐ கொடுக்கும்.

செங்கோண முக்கோணம் ΔBCE-யில்


சமன்பாடுகள் 6.48 மற்றும் 6.49 இரண்டையும் ஒப்பிடும்போது


சமன்பாட்டினை மாற்றி அமைக்கும்போது,


பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, கண்ணாடிப் பட்டகத்தின் தடிமனைச் சார்ந்துள்ளது, தடிமன் அதிகமெனில் பக்கவாட்டு இடப்பெயர்ச்சியும் அதிகமாகும். மேலும் பக்கவாட்டு இடப்பெயர்ச்சி படுகோணத்தையும் சார்ந்துள்ளது. அதிக படுகோணமதிப்பிற்கு பக்கவாட்டு இடப்பெயர்ச்சி அதிகம்.

 

எடுத்துக்காட்டு 6.11

0.25 m தடிமன் கொண்ட கண்ணாடிப்பட்டகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 ஆகும். ஒளிக்கதிர் ஒன்று கண்ணாடிப்பட்டகத்தின் ஒரு பக்கத்தின் மீது 60° கோணத்தில் விழுந்து அடுத்த பக்கம் வழியாக வெளிவருகிறது எனில், ஒளி அடைந்த பக்கவாட்டு இடப்பெயர்ச்சி என்ன?

தீர்வு

கொடுக்கப்பட்டவை : கண்ணாடிப்பட்டகத்தின் தடிமன் t = 0.25 m, ஒளிவிலகல் எண் n = 1.5. படுகோணம் i = 60°.

ஸ்னெல் விதியைப்பயன்படுத்தும்போது, 1 x sini

= n sin r


பக்கவாட்டு இடப்பெயர்ச்சி, L = 12.81 cm

12th Physics : UNIT 6 : Ray Optics : Refraction in glass slab in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : கண்ணாடிப்பட்டகத்தின் வழியே ஒளி விலகல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்