Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 1.1 (செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு)

வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 (செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு) | 5th Maths : Term 3 Unit 1 : Geometry

   Posted On :  25.10.2023 05:57 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.1 (செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்: பயிற்சி 1.1 (செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.1


1. 6 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் உள்ள செவ்வகத்தை உருவாக்கத் தேவையான கம்பியின் நீளம் எவ்வளவு?

தீர்வு

நீளம் = 6 செ.மீ

அகலம் = 3 செ.மீ

தேவையான கம்பியின் நீளம் = செவ்வகத்தின் சுற்றளவு

= 2 (நீளம் + அகலம்

= 2 (6 + 3)

= 2 (9) = 18 செ.மீ 


2. ஒரு செவ்வகத்தின் நீளம் 14 மீ மற்றும் அகலம் 10 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.

தீர்வு

நீளம் = 14 மீ

அகலம் = 10 மீ

செவ்வகத்தின் சுற்றளவு = 2 (நீளம் + அகலம்)

= 2 (14+10) 

= 2 (24) 

= 48 மீ


3. ஒரு சதுரத்தின் பக்கம் 6 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.

தீர்வு

சதுரத்தின் பக்கம் = 6 மீ 

சதுரத்தின் சுற்றளவு = 4 × பக்கத்தின் நீளம்

= 4 ×

= 24 மீ


4. 340 மீ நீளமும் 160 மீ அகலமும் கொண்ட ஒரு நிலத்தை 2 முறை சுற்றி வருகிறோம் எனில், நாம் கடக்கும் தூரத்தைக் கிலோமீட்டரில் காண்க.

தீர்வு

நீளம் = 340 மீ

அகலம் = 160 மீ 

நிலத்தின் சுற்றளவு = 2 (நீளம் + அகலம்)

= 2 (340 + 160) = 2 (500)

= 1000 மீ 

2 முறை சுற்றும்போது கடக்கும் தூரம் = 2 × 1000 மீ 

= 2000 மீ (1000 மீ = 1 கி.மீ)

= 2 கி.மீ.


5. சஞ்சு என்பவர் நாள்தோறும் ஒரு சதுரவடிவப் பூங்காவை 10 முறை சுற்றி வருகிறார். பூங்காவின் பக்க அளவு 110 மீ எனில், ஒரு நாளில் சஞ்சு கடக்கும் தூரத்தைக் கிலோமீட்டரிலும், மீட்டரிலும் காண்க.

தீர்வு:

 பூங்காவின் பக்க அளவு = 110 மீ 

ஒருமுறை சுற்றி வருவது = சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு

= 4 × பக்கம் 

= 4 × 110

= 440 மீ

10 முறை சுற்றி வரும்போது கடக்கும் தூரம் = 10 × 440 மீ

= 4400 மீ 

= 4.4 கி.மீ.

குறிப்பு

1. செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம் 

2. சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

Tags : Geometry | Term 3 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 1 : Geometry : Exercise 1.1 (Perimeter of the rectangle and square) Geometry | Term 3 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.1 (செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு) - வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்