Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 1.2 (செவ்வக மற்றும் சதுரத்தின் பரப்பளவு)

வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 (செவ்வக மற்றும் சதுரத்தின் பரப்பளவு) | 5th Maths : Term 3 Unit 1 : Geometry

   Posted On :  25.10.2023 06:03 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.2 (செவ்வக மற்றும் சதுரத்தின் பரப்பளவு)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.2 (செவ்வக மற்றும் சதுரத்தின் பரப்பளவு) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. சதுரத்தின் பக்க அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரப்பளவைக் காண்க.

(i) 10 மீட்டர்

(ii) 5 செ.மீ 

(iii) 15 மீட்டர்

(iv) 16 செ.மீ

(i) 10 மீட்டர்

தீர்வு :

 பக்கம் = 10 மீ 

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

= 10 × 10

= 100 .மீ

(ii) 5 செ.மீ

தீர்வு

பக்கம் = 5 செ.மீ

 சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

= 5 ×

= 25 .செ.மீ

(iii) 15 மீட்டர்

தீர்வு

பக்கம் = 15 மீ 

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

= 15 × 15

= 225 .மீ 

(iv) 16 செ.மீ

தீர்வு

பக்கம் = 16 செ.மீ 

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

= 16 × 16

= 256 .செ.மீ 



2. பின்வரும் செவ்வகங்களின் பரப்பளவைக் காண்க.

(i) நீளம் = 6 செ.மீ மற்றும் அகலம் = 3 செ.மீ

(ii) நீளம் = 7 மீ மற்றும் அகலம் = 4 மீ

(iii) நீளம் = 8 செ.மீ மற்றும் அகலம் = 5 செ.மீ

(iv) நீளம் = 9 மீ மற்றும் அகலம் = 6 மீ

(i) நீளம் = 6 செ.மீ மற்றும் அகலம் = 3 செ.மீ

தீர்வு

நீளம் = 6 செ.மீ

அகலம் = 3 செ.மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 6 × 3

= 18 .செ.மீ 

(ii) நீளம் = 7 மீ மற்றும் அகலம் = 4 மீ

தீர்வு

நீளம் = 7 மீ

அகலம் = 4 மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 7 × 4 

= 28 .மீ

(iii) நீளம் = 8 செ.மீ மற்றும் அகலம் = 5 செ.மீ

தீர்வு : 

நீளம் = 8 செ.மீ

அகலம் = 5 செ.மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 8 × 5 

= 40 .செ.மீ

(iv) நீளம் = 9 மீ மற்றும் அகலம் = 6 மீ

தீர்வு

நீளம் = 9 மீ

அகலம் = 6 மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 9 × 6 

= 54 .மீ


3. ஒரு மனையின் விலையானது 1 .மீட்டருக்கு ₹ 800 எனில், 15 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட மனையின் மொத்த விலை என்ன?

தீர்வு

நீளம் = 15 மீ

அகலம் = 10 மீ 

மனையின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 15 × 10 

= 150 .மீ 

1 சதுர மீட்டர் மனையின் விலை = ₹ 800 

150 சதுர மீட்டர் மனையின் விலை = 150 × 800

= ₹ 1,20,000


4. ஒரு சதுரத்தின் பக்கம் 6 செ.மீ ஆகும். ஒரு செவ்வகத்தின் நீளம் 10 செ.மீ மற்றும் அகலம் 4 செ.மீ ஆகும். சதுரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சுற்றளவையும்  பரப்பளவையும் காண்க.

தீர்வு

சதுரத்தின் பக்கம் = 6 செ.மீ 

சதுரத்தின் சுற்றளவு = 4 × பக்கத்தின் நீளம்

= 4 × 6

= 24 செ.மீ 

சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்

= 6 × 6

= 36 .செ.மீ 

நீளம் = 10 செ.மீ 

அகலம் = 4 செ.மீ 

செவ்வகத்தின் சுற்றளவு = 2 (நீளம் + அகலம்)

= 2 (10 + 4)

= 2 × 14

= 28 செ.மீ 

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 10 × 4

= 40 .செ.மீ


5. 14 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட கூட்டரங்கத்திற்கு தரைப்பூச்சு செய்ய சதுரமீட்டருக்கு ₹ 60 வீதம் ஆகும் மொத்த உழைப்பூதியம் எவ்வளவு?

தீர்வு

நீளம் = 14 மீ

அகலம் = 10 மீ 

கூட்டரங்கத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 14 × 10 

= 140 .மீ 

1 சதுர மீட்டருக்கு தரைப்பூச்சு செய்ய ஆகும் செலவு = ₹60 

140 சதுர மீட்டருக்கு தரைப்பூச்சு செய்ய ஆகும் செலவு = 60 × 140

= ₹ 8400



செயல்பாடு 2

கட்டகத்தாளைப் பயன்படுத்தி, செவ்வகங்கள், சதுரங்களின் பரப்பளவைக் காண்க. ஒவ்வொரு சதுரத்தின் பரப்பளவு 1 .செ.மீ ஆகும்.


தீர்வு:

i) பக்கத்தின் நீளம் = 2 செ.மீ

சிறிய சதுரத்தின் பரப்பளவு = 2 × 2 = 4 .செ.மீ

 ii) நீளம் = 5 செ.மீ

அகலம் = 2 செ.மீ 

சிறிய செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 5 × 2 =10 .செ.மீ 

iii) பக்கத்தின் நீளம் = 3 செ.மீ 

பெரிய சதுரத்தின் பரப்பளவு = 3 × 3

= 9 .செ.மீ 

iv) நீளம் = 5 செ.மீ

அகலம் = 3 செ.மீ

 பெரிய செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் × அகலம்

= 5 × 3 = 15 .செ.மீ  

Tags : Geometry | Term 3 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 1 : Geometry : Exercise 1.2 (Area of the rectangle and square) Geometry | Term 3 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.2 (செவ்வக மற்றும் சதுரத்தின் பரப்பளவு) - வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : வடிவியல்