Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஆல்கைன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்
   Posted On :  03.01.2024 10:18 pm

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

ஆல்கைன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்

ஆல்கைன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்

ஆல்கைன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்


1. ஆல்கைன்களை ஆல்கீன்களிலிருந்து தயாரித்தல்:

இந்த செயல்முறையில் இரண்டு படிகள் உள்ளன.

(i) ஆல்கீன்களை ஹாலஜனேற்றம் செய்து விசினைல் டைஹாலைடுகளைத் தயாரித்தல்.

(ii) விசினைல் டைஹாலைடுகளை ஹாலஜன் நீக்கம் செய்து, ஆல்கைன்களை உருவாக்குதல்.



2. ஜெம் டைஹாலைடுகளிலிருந்து ஆல்கைன்களை தயாரித்தல்:

ஒரே கார்பன் அணுவில் இரண்டு ஹாலஜன் அணுக்கள் இருப்பின், அச்சேர்மம் ஜெம் டை ஹாலைடு எனப்படும். (லத்தீன் - 'jemini' என்பது 'இரட்டை' எனப்படும்]. ஆல்கஹால் கலந்த KOH-உடன், ஜெம் டைஹாலைடுகளை வெப்பப்படுத்தும்போது ஆல்கைன்கள் கிடைக்கின்றன.



3. நிறைவுறா டைகார்பாக்சிலிக் அமிலங்களின் உப்புகளை மின்னாற்பகுத்தலின் மூலம் ஆல்கைன்கள் தயாரித்தல் (கோல்ப் மின்னாற்பகுப்பு முறை)

மெலியிக் அல்லது பியுமரிக் அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பினை மின்னாற்பகுக்கும் போது ஆல்கைன்கள் உருவாகின்றன.



4. தொழிற்சாலையில் ஈத்தைன் தயாரிப்பு

கால்சியம் கார்பைடுடன், நீரை வினை புரிய செய்து பெருமளவில் ஈத்தைன் தயாரிக்கப்படுகின்றது கல்கரி மற்றும் சுட்ட சுண்ணாம்பினை, 3273K வெப்பநிலையில் மின் உலையில் வெப்பப்படுத்தி இம்முறைக்கு தேவையான கால்சியம் கார்பைடை தயாரிக்கலாம்.

11th Chemistry : UNIT 13 : Hydrocarbons : General Methods of Preparation of Alkynes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : ஆல்கைன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்