பொதுவான தயாரிப்புகள், இயற் மற்றும் வேதிப்பண்புகள், சேர்க்கை வினைகள், பயன்கள் - ஆல்கீன்கள் | 11th Chemistry : UNIT 13 : Hydrocarbons
ஆல்கீன்கள்:
கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பை கொண்டுள்ள நிறைவுறா ஹைட்ரோகார்பன்கள், ஆல்கீன்கள் எனப்படும். இவை CnH2n எனும் பொதுவாய்ப்பாட்டினால் குறிப்பிடப்படுகின்றன. இங்கு 'n' என்பது மூலக்கூறில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையாகும். ஆல்கீன்கள் 'ஒலிஃபீன்கள்' (இலத்தீன் மொழியில் எண்ணை உருவாக்கி) என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் முதல் சேர்மமான ஈத்தீன், குளோரின் வாயுடன் சேர்ந்து ஒரு எண்ணையைப் போன்ற ஒரு திரவ விளைப்பொருளைத் தருகின்றது.
(I) ஆல்கீன்களின் பெயரிடும் முறை :
அலகு 11-ல் கற்ற IUPAC பெயரிடும் முறைக்கான பொதுவான விதிகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு IUPAC பெயர்களை எழுதலாம்.
அட்டவணை 13.4 - ஆல்கீன்களின் IUPAC பெயர்
தன் மதிப்பீடு
9. கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு IUPAC பெயர்களை எழுதுக.
விடை :
10. கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு அமைப்பு வாய்ப்பாட்டினை வரைக.
i) 6 - புரோமோ - 2,3 - டைமெத்தில் - 2 - ஹெக்சீன்
ii) 5 - புரோமோ – 4 - குளோரோ- 1- ஹெப்டீன்
iii) 2,5 - டைமெத்தில் - 4 - ஆக்டீன்
iv) 4 – மெத்தில் - 2 பென்டீன்
விடை :
(ii) மாற்றியம்:
ஆல்கீன்களில் இரட்டை பிணைப்பு இருப்பதால், அவைகளில் அமைப்பு மற்றும் வடிவ மாற்றியம் அமைய வாய்ப்புள்ளது.
அமைப்பு மாற்றியம்:
முதல் இரண்டு சேர்மங்களான ஈத்தீன் (C2H4) மற்றும் புரப்பீன் (C3H6), எந்த ஒரு மாற்றியத்தையும் பெற்றிருப்பதில்லை. ஏனெனில் இம்மூலக்கூறுகளில் கார்பன் அணுக்களை, ஒரே ஒரு முறையில் தான் அமைக்க முடியும். எனினும் ஆல்கீன் குடும்பத்தில் உள்ள மூன்றாவது சேர்மமான பியூட்டீன் முதல் (C4H8), கட்டமைப்பு மாற்றியம் காணப்படுகிறது.
அமைப்புகள் (i) & (ii) இடமாற்றியங்களாகும். (i) & (iii) மற்றும் (ii) & (iii) ஆகியன சங்கிலிதொடர் மாற்றியங்களாகும்.
தன் மதிப்பீடு
11) கீழ்கண்ட மூலக்கூறு வாய்ப்பாட்டுடைய சேர்மங்களுக்கு, அமைப்பு வாய்ப்பாடுகளை வரைக. மேலும், மாற்றியங்களை கண்டறிந்து, அவைகளுக்கு அமைப்பு வாய்ப்பாடு வரைந்து, IUPAC முறையில் பெயரிடுக:
(i) C5H10 - பென்டீன் (3 மாற்றியங்கள்)
(ii) C6H12 - ஹெக்சீன் (5 மாற்றியங்கள்)
தீர்வு
வடிவ மாற்றியம்:
இது புறவெளி மாற்றியத்தின் ஒரு வகையாகும். இதனை சிஸ்-டிரான்ஸ் மாற்றியம் எனவும் அழைக்கலாம். கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள இரட்டைப் பிணைப்பின் வழியே சுழற்சிக்கு தடையிருப்பதால் இம்மாற்றியம் ஏற்படுகின்றது.
ஒத்த தொகுதிகள் ஒரே புறத்தில் அமைந்தால், அத்தகைய வடிவமாற்றியம் சிஸ் மாற்றியம் என்றும் ஒத்த தொகுதிகள் எதிரெதிர் புறங்களில் அமைந்தால், அது டிரான்ஸ்- மாற்றியம் எனவும் அழைக்கப்படுகின்றது.
உதாரணமாக 2-பியூட்டீனில் வடிவமாற்றிங்களை கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.
தன் மதிப்பீடு
12) கீழ்கண்ட ஆல்கீன்கள் சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தினை பெற்றிருக்குமா என தீர்மானிக்கவும்?
(a) 1 - குளோரோ புரப்பீன்
(b) 2 - குளோரோ புரப்பீன்
விடை :
13) கீழ்கண்ட சேர்மங்களுக்கு சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தை வரைக
(a) 2-குளோரோ-2-பியூட்டீன்
(b) CH3 – CH = CH – CH2CH3
விடை :
(1) ஆல்கஹாலை நீர் நீக்கம் செய்து ஆல்கீன்களைத் தயாரித்தல் :
அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில், சுமார் 430-440K வெப்பநிலையில், ஆல்கஹாலை வெப்பப்படுத்தும்போது, ஒரு நீர் மூலக்கூறு நீக்கப்பட்டு, ஆல்கீன்கள் உருவாகின்றன. இத்தகைய வினையானது, நீக்க வினை எனப்படுகின்றது.
சோதனைக் கூடத்தில், வினையூக்கி முன்னிலையில் ஆல்கஹாலை நீர் நீக்கம் செய்வதன் மூலம், ஆல்கீன்கள் தயாரிக்கப்படுகின்றன.
(2) ஆல்கீன்களை ஆல்கைன்களிலிருந்து தயாரித்தல்:
வினையூக்கி முன்னிலையில் ஆல்கைன்களை, சிஸ்-ஆல்கீன்களாக ஒடுக்கலாம் [லிண்ட்லர் வினையூக்கி என்பது கந்தகம் அல்லது பெட்ரோலால் பகுதி கிளர்வு நீக்கம் செய்யப்பட்ட பெலேடியத்தில் வைக்கப்பட்டுள்ள CaCO3] இவ்வினையானது குறித்த புறவெளி மாற்றியத்தினை தரும் வினையாகும். [stereo specific reaction] இவ்வினையில் சிஸ் ஆல்கீன்கள் மட்டுமே உருவாகின்றன.
நீர்ம அம்மோனியாவில் உள்ள சோடியம் முன்னிலையில் ஆல்கைன்களை, டிரான்ஸ்-ஆல்கீன்களாக ஓடுக்கலாம். இவ்வினையும் ஒரு குறித்த புறவெளி மாற்றியத்தினை தரும் வினையாகும். இவ்வினையில் டிரான்ஸ் ஆல்கீன்கள் மட்டுமே உருவாகின்றன.
(3) ஹேலோஆல்கேன்களை, ஹைட்ரோ ஹாலஜன் நீக்கம் செய்து ஆல்கீன்களைத் தயாரித்தல்.
ஆல்கஹால் கலந்த KOH உடன் ஹேலோ ஆல்கேன்கள் வினைபட்டு, ஹைட்ரோ ஹேலைடு நீக்கப்பட்டு, ஆல்கீன்கள் உருவாகின்றன.
(4) விசினைல் டைஹாலைடுகள் அல்லது விசினைல் டைஹாலைடுகளின் பெறுதிகளிலிருந்து ஆல்கீன்கள் தயாரித்தல்
அடுத்தடுத்து அமைந்துள்ள கார்பன் அணுக்களுடன் இரண்டு ஹாலஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ள சேர்மங்கள், விசினைல் டை ஹாலைடுகள் எனப்படுகின்றன. மெத்தனாலில் உள்ள தூளாக்கப்பட்ட ஜிங்க் உடன், விசினைல் டைஹாலைடுகளை வெப்பப்படுத்தும்போது, ஒரு மூலக்கூறு ZnX2 இழந்து, ஒரு ஆல்கீன் உருவாகின்றது.
தன் மதிப்பீடு
14) 1,2-டைகுளோரோ புரப்பேனிலிருந்து புரப்பீன் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
விடை :
1,2-டைகுளோரோ புரப்பேன் – விசினல்டை ஹாலைடு.
எனவே, இது Zn/ஆல்கஹாலுடன் ஹாலஜன் நீக்க வினைக்கு உட்பட்டு புரப்பீனை தருகிறது.
(5) கோல்ப் மின்னாற்பகுப்பு முறையின் மூலம் ஈத்தீன் தயாரித்தல்:
பிளாட்டின மின்வாய்களுக்கிடையே நீரிய பொட்டாசியம் சக்சினேட் கரைசலை மின்னாற்பகுக்கும் போது, ஈத்தீன் நேர்மின் வாயில் வெளியிடப்படுகின்றது.
முதல் மூன்று சேர்மங்களான ஈத்தீன், புரப்பீன் மற்றும் பியூட்டீன் ஆகியன வாயு நிலைமையிலும், அடுத்துவருகின்ற பதினான்கு ஆல்கீன்கள் நீர்மங்களாகவும் மற்ற உயர் ஆல்கீன்கள் திண்மநிலை மெழுகுகளாகவும் காணப்படுகின்றன. ஈத்தீனைத் தவிர்த்து இவையனைத்தும் நிறம் மற்றும் மணமற்றவை.
1. படிவரிசையில், ஆல்கீன்களின் உருகுநிலை மற்றும் கொதிநிலை அதிகரிக்கும். ஆல்கேன்களை போல, கிளைதொடர் ஆல்கீன்களின் கொதிநிலை நீண்ட சங்கிலித் தொடர் ஆல்கீன்களை விட குறைவாகும்.
2. ஆல்கீன்கள் நீரில் சிறிதளவும் கரிமக் கரைப்பான்களில் அதிக அளவிலும் கரைகின்றன.
இரட்டைப் பிணைப்பை பெற்றிருப்பதால், ஆல்கேன்களை காட்டிலும், ஆல்கீன்கள் வினைத்திறன் மிக்கவை. ஏனெனில் σ-பிணைப்பு வலிமை மிகுந்தும், π பிணைப்பு வலிமை குறைந்தும் இருக்கும். ஆல்கீன்களின் தனித்த முக்கியமான வினையானது அயனி வினை வழிமுறையினைப் பின்பற்றி இரட்டை பிணைப்பின் குறுக்கே நிகழும் எலக்ட்ரான் கவர்பொருள் சேர்க்கை வினையை உள்ளடக்கியது. எனினும், இச்சேர்க்கை வினையானது தனி-உறுப்பு வினைவழிமுறை மூலமாகவும் நடைபெறலாம். ஓசோனேற்றம் மற்றும் பலபடியாக்கல் போன்ற வினைகள், ஆல்கீன்களின் தனித்துவமிக்க வினைகளாகும்.
சேர்க்கை வினைகள்
(i) ஹைட்ரஜன் சேர்க்கை வினை (ஆல்கீன்களின் ஹைட்ரஜனேற்றம்)
உலோக வினையூக்கி முன்னிலையில் (Ni, Pd or Pt) ஆல்கீன்களில் ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெற்று இணையான ஆல்கேன்கள் உருவாகின்றன. இவ்வினை வினையூக்கி முன்னிலையில் நிகழும் ஹைட்ரஜனேற்றம் எனப்படும். இம்முறையானது தாவர எண்ணையிலிருந்து வனஸ்பதி உற்பத்தி செய்யும் செயல்முறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தாவர எண்ணெய் கெட்டுப்போகாமல் தடுப்பதற்கு இது உதவுகின்றது.
(ii) ஹாலஜன்களை சேர்த்தல்: (ஆல்கீன்களின் ஹாலஜனேற்றம்)
ஹாலஜன்களான குளோரின் அல்லது புரோமின், ஆல்கீன்களுடன் மிகவிரைவாக சேர்க்கை வினைக்கு உட்டுபட்டு, 1,2-டை ஹேலோ ஆல்கேன்கள் அல்லது விசினல் டைஹாலைடுகளைத் தருகின்றன.
அயோடின் மிக மெதுவாக வினைபட்டு, நிலைப்புத்தன்மையற்ற 1,2-டை அயோடோ ஆல்கேனைத் தருகின்றது. இது நிலைப்புத் தன்மையற்றதால் நீக்க வினைக்கு உட்பட்டு மீண்டும் ஆல்கீனைத் தருகின்றது.
ஆல்கீன்களுக்கான சோதனை:
புரோமின் நீர் செம்பழுப்பு நிறத்தை உடையது. ஆல்கின்களுடன் சிறிதளவு புரோமின் நீர் சேர்க்கப்படும்போது, டைபுரோமோ சேர்மம் உருவாவதால் கரைசல் நிறமற்றதாகிறது. இது நிறைவுறா சேர்மங்களுக்கான முக்கியமான சோதனையாகும்.
மார்கோனிகாஃப் விதி:
“ஓர் சீர்மையற்ற ஆல்கீனுடன் ஹைட்ரஜன் ஹாலைடு வினைபுரியும் போது, அதிலுள்ள ஹைட்ரஜனானது, அதிக ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடமும் ஹாலஜனானது, குறைந்த ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடமும் சேர்க்கின்றன. இவ்விதியை பின்வருமாறும் கூறலாம்.
ஆல்கீன் மற்றும் மற்றும் ஆல்கைன்களின் சேர்க்கை வினைகளில், வினைக்காரணியின் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய பகுதியானது இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பன்களில் குறைவான ஹைட்ரஜனைக் கொண்டுள்ள கார்பனில் சென்று சேரும்.
(iii) நீரினை சேர்த்தல்: [ஆல்கீன்களின் நீரேற்ற வினை]
பொதுவாக, ஆல்கீன்கள் நீருடன் வினைபுரிவதில்லை. அடர் கந்தக அமில முன்னிலையில், ஆல்கீன்கள் நீருடன் வினைபட்டு ஆல்கஹாலைத் தருகின்றன. இவ்வினையானது கார்பன் நேர் அயனி வினைவழிமுறை மற்றும் மார்கோனிகாஃப் விதியினை பின்பற்றுகின்றது.
(iv) ஹைட்ரோ ஹாலைடுகளைச் சேர்த்தல் (ஆல்கீன்களின் ஹைட்ரோ ஹாலஜனேற்றம்)
ஆல்கீன்களுடன் ஹைட்ரஜன் ஹாலைடுகள் (HCl, HBr மற்றும் HI) சேர்க்கை வினைக்கு உட்பட்டு ஆல்கைல் ஹாலைடுகளைத் தருகின்றன. ஹைட்ரஜன் ஹாலைடுகளின் வினைத்திறனானது HI > HBr > HCl > HF என அமைகின்றது. இவ்வினையானது எலக்ட்ரான் கவர்பொருள் சேர்க்கை வினைக்கு உதாரணமாகும்.
(அ) சீர்மையான ஆல்கீன்களுடன் HBr சேர்த்தல்:
சீர்மையான ஆல்கீன்களுடன் (இரட்டைப் பிணைப்பிற்கு இருபுறம் ஒத்த தொகுதிகளைக் கொண்டவை) HBr-யை சேர்க்கும்போது ஆல்கைல் ஹாலைடுகள் (ஹாலோ ஆல்கேன்கள்) கிடைக்கின்றன
(ஆ) சீர்மையற்ற ஆல்கீன்களுடன் HBr சேர்த்தல் :
சீர்மையற்ற ஆல்கீன்களுடன் HBr சேர்க்கை வினைபுரியும்போது, இரண்டு வினைவிளைப் பொருட்கள் கிடைக்கின்றன.
வினைவழி முறை: HBr புரோப்பீனுடன் வினைபுரியும் சேர்க்கை வினையைக் கருதுக
படி: 1 எலக்ட்ரான் கவர் காரணி உருவாதல்:
H-Br மூலக்கூறில், Br-மிகுந்த எலக்ட்ரான் கவர் தன்மை கொண்டதாகும். பிணைப்பு எலக்ட்ரான்கள் Br-யை நோக்கி நகரும் போது, முனைவாதல் ஏற்படுகிறது. மேலும், எலக்ட்ரான் கவர்பொருள் H+ உருவாகிறது. இது இரட்டைப் பிணைப்பினைத் தாக்கி கார்பன் நேர் அயனியை கீழ்கண்டவாறு உருவாக்குகின்றது.
படி:2 ஈரிணைய கார்பன் நேர் அயனி ஆனது ஓரிணைய கார்பன் நேர் அயனியைக் காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடையது. எனவே இது வினைத்திறனில் ஓரிணைய கார்பன் நேர் அயனியினை விஞ்சுகிறது.
படி: 3 Br- அயனியானது, 20 கார்பன் நேர் அயனியைத் தாக்கி, 2-புரோமோ புரப்பேனைத் தருகிறது. இது அதிக அளவு உருவாகும் விளைப்பொருளாகும்.
3-மெத்தில்-1-பியூட்டீனுடன் HBr இன் சேர்க்கை வினையைக் கருத்தில் கொள்வோம், மார்கோனிகாஃப் விதிபடி, எதிர்பார்த்த விளைப்பொருள் 2-புரோமோ- 3- மெத்தில் பியூட்டேன் ஆகும். ஆனால் அதிக அளவு விளைப்பொருளாக 2-புரோமோ- 2-மெத்தில் பியூட்டேன் உருவாகின்றது. ஏனெனில், இவ்வினையில் உருவாகும் ஈரிணைய கார்பன் நேர் அயனியானது அமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டு அதிக நிலைப்புத் தன்மையுடைய மூவிணைய கார்பன் நேர் அயனியைத் தருகின்றது. இந்த மூவிணைய கார்பன் நேர் அயனியை Br- தாக்குவதால், அதிக அளவு விளைப்பொருளாக 2-புரோமோ-2-மெத்தில் பியூட்டேன் உருவாகிறது.
கார்பன் நேர் அயனி இடமாற்றம்:
எதிர் - மார்கோனிகாஃப் விதி: (அல்லது) பெராக்சைடு விளைவு (அல்லது) கேராஸ் விதி
கரிம பெராக்சைடு முன்னிலையில், ஆல்கீன்கள் HBr-உடன் சேர்க்கை வினைப் புரியும்போது, மார்கோனிகாஃ விதிக்கு எதிரான விளைப் பொருட்களைத் தருகின்றன.
வினைவழி முறை:
இவ்வினையானது தனி உறுப்பு வினை வழி முறையினைப் பின்பற்றுகின்றது.
படி: 1
பெராக்சைடில் உள்ள, வலிமை குறைந்த O-O ஒற்றைப் பிணைப்பு சீர்மையான பிளப்பிற்கு உட்பட்டு தனி உறுப்புக்களை உண்டாக்குகின்றது.
படி: 2
பீனைல் தனி உறுப்பானது, HBr-யில் உள்ள ஹைட்ரஜனை கவர்ந்து புரோமின் தனி உறுப்பினைத் தருகின்றது.
படி: 3
வலிமை மிகுந்த ஆல்கைல் தனி உறுப்பினை உருவாக்கும் வகையில் புரோமின் தனி உறுப்பானது கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் சேர்கின்றது.
படி: 4
ஈரிணைய தனி உறுப்புடன் HBr சேர்த்தல்
H-Cl பிணைப்பானது (430.5 kJ/ மோல்) H-Br பிணைப்பை விட (363.7 kJ / மோல்) அதிக வலிமை மிகுந்தது. எனவே H-Cl பிணைப்பானது தனி உறுப்புகளால் பிளவு படுவதில்லை. H-I பிணைப்பானது, (296.8 kJ / மோல்) H-Cl-ஐ விட வலிமை குறைந்தது. எனவே H-I பிணைப்பு எளிதாக பிளக்கப்பட்டு அயோடின் தனி உறுப்புகள் உருவானாலும், அவை இரட்டை பிணைப்புடன் சேராமல், தமக்குள்ளேயே இணைந்து ஐயோடின் மூலக்கூறுகளைத் தருகின்றன. எனவே HCl மற்றும் HI-யில், பெராக்சைடு விளைவினைக் காண முடியாது.
கேராஸ் சேர்க்கை
CXCl3 யானது உலோக வினையூக்கி முன்னிலையில் ஆல்கீன்களுடன் புரியும் தனி உறுப்பு சேர்க்கை வினை கேராஸ் சேர்க்கை வினை எனப்படும்.
(v) ஆல்கீன்களுடன் கந்தக அமிலத்தின் சேர்க்கை வினை
ஆல்கீன்களுடன் குளிர்ந்த நிலையில் உள்ள அடர் கந்தக அமிலம் மார்கோனிகாப் விதியின்படி வினைப்பட்டு, ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டைத் தருகின்றன. இவை மேலும் நீராற் பகுப்படைந்து ஆல்கஹாலைத் தருகின்றது.
(2) ஆக்சிஜனேற்றம்:
(i) குளிர்ந்த நீர்த்த காரம் கலந்த KMnO4 (பேயர் காரணி) கரைசலுடன் வினை
பேயரின் காரணியுடன் அல்கீன்கள் வினைபட்டு விசினல் டையால்கனைத் தருகின்றன. இவ்வினையில், ஊதா நிற கரைசல் (Mn7+) அடர் பச்சை நிறமாக மாறி (Mn6+) பின்பு அடர் பழுப்பு நிற (Mn4+) வீழ்படிவாக மாறுகின்றது.
(ii) அமிலம் கலந்த KMnO4 கரைசலுடன் வினை:
ஒலிபீன் கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதிகளைப் பொறுத்து, ஆல்கீன்கள் அமிலம் கலந்த KMnO4 கரைசலுடன், ஆக்சிஜனேற்றம் அடைந்து, கீட்டோன்கள் அல்லது கார்பாக்சலிக் அமிலங்களைத் தருகின்றன. இவ்வினையில், ஊதா நிறக்கரைசல், நிறமற்றதாக மாறுகிறது. எனவே, இவ்வினையானது, நிறைவுறா தன்மையை அறிய உதவும் ஒரு சோதனையாகும் செயல்படுகின்றது.
(iii) ஓசோனேற்றம்;
ஓசோனைப் பயன்படுத்தி ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்களை, ஆக்சிஜனேற்ற பிளவிற்கு உட்படுத்தும், வினைகள் ஓசோனேற்ற வினைகள் எனப்படும். ஆல்கீன்கள் ஓசோனுடன் வினைபட்டு ஓசோனைடைத் தருகின்றது. பின்னர் இவை Zn/H2O முன்னிலையில் பிளவடைந்து சிறிய மூலக்கூறுகளாக மாறுகின்றன. இவ்வினையானது ஆல்கீன் மற்றும் ஆல்கைன்களில் உள்ள இரட்டை மற்றும் முப்பிணைப்புகள் காணப்படும் இடங்களை அறிய உதவுகின்றது.
தன் மதிப்பீடு
15) ஓசோன், 2-மெத்தில் புரப்பீனுடன் எவ்வாறு வினைபடுகின்றது?
தீர்வு:
2-மெத்தில் புரப்பீனுடன் ஓசோன் வினைபுரிந்து ஓசோனைடு உறுவாகின்றது. பின்னர் Zn/H2O முன்னிலையில் பிளவடைந்து அசிட்டோன் மற்றும் ஃபார்மால்டிஹைடு தருகிறது.
16) (A) என்ற கரிமச் சேர்மம் ஓசோனேற்றத்தின் போது அசிட்டால்டிஹைடை மட்டும் தருகிறது. (A) Br2 /CCl4 உடன் வினைபட்டு சேர்மம் (B)ஐ தருகிறது. (A) மற்றும் (B) சேர்மங்களைக் கண்டறிக. அவைகளின் IUPAC பெயர்களை எழுதுக. (A)ன் வடிவ மாற்றியங்களை எழுதுக.
தீர்வு:
சேர்மம் (A) ஓசோனேற்றமடைந்து அசிட்டால்டிஹைடை தருவதால் – சேர்மம் (A) ஒரு சீர்மையுள்ள ஆல்கீன் ஆகும். எனவே A-2 – பீயூட்டீன் ஆகும்.
17) C2H4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (A) என்ற சேர்மம் புரோமின் நீரை நிறமிழக்கச் செய்கிறது. (A) ஆனது குளோரினுடன் வினைபட்டு (B) யை தருகிறது. (A) ஆனது H Br வினைபுரியும் போது (C) உருவாகிறது. (A), (B), (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.
தீர்வு:
சேர்மம் (A) புரோமின் நீரை நிறமிழக்கச் செய்வதால் மற்றும் மூலக்கூறு வாய்பாடுபடி ஒரு ஆல்கீன் தான் இருக்க முடியும். எனவே A – எத்திலீன் ஆகும்.
(iv) பல படியாக்கல்:
அதிக அளவில் சிறிய மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் மிக பெரிய மூலக்கூறானது பலபடி எனப்படுகிறது. இச்செயல்முறை பலபடியாக்கல் எனப்படும். வினையூக்கி முன்னிலையில், அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், ஆல்கீன்களின் பலபடியாக்கல் நடைபெறுகின்றன.
எடுத்துக்காட்டு
நெகிழி மறுசுழற்சி
அதிக அளவில் பலபடிகளை பயன்படுத்துவதால் நிலங்களில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றுசூழல் மாசுபடுகின்றது. நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களில் பலபடிகள் அதிக பயன்பாட்டில் இருப்பதால், அதனை தக்க முறையில் மறுசுழற்சி செய்தல் வேண்டும், மறுசூழற்சி செய்ய பலபடிகளை உப-வகைகளாக பிரிக்கப்பட்டு, சின்னங்கள் மற்றும் குறியீடுகள் மூலம் அடையாளமிடப்பட்டு பின்பு அவைகளை தனித்தனியாக மறுசுழற்சி செய்யவேண்டும்.
ஈத்தீன் அடிப்படையில் அமைந்த சேர்க்கை பலபடிகளை மறுசுழற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் சின்னம் மற்றும் குறியீடுகளை பின்வரும் அட்டவணை குறிப்பிடுகிறது.
(எண் குறைவாக இருப்பின், அப்பொருளை மிக எளிதாக மறுசுழற்சி செய்ய இயலும்)
(1) தொழிற்சாலைகளில், ஆல்கீன்கள் பல்வேறு பயன்பாடுகளை பெற்றுள்ளன. ஆல்கஹால்கள், நெகிழிகள், வடிநீர்மங்கள் சலவை தூள்கள் மற்றும் எரிபொருள்களின் ஆகியவற்றின் தொகுப்பு முறை தயாரித்தலின் வினை துவங்கும் பொருளாக இவைகள் பயன்படுகின்றன.
(2) பலபடி தொழிற்துறையில், ஈத்தீன் ஒரு மிக முக்கியமான மூலப்பொருளாகும் உதாரணமாக PVC, மற்றும் பாலி எத்திலீனைக் குறிப்பிடலாம். இந்த பலபடிகள் தரை ஓடுகள், காலணி அடிப்பாகம், தொகுப்பு இழைகள், மழைக்கால மேலங்கி, குழாய்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுகின்றன.