இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 1 : Constitution of India

   Posted On :  31.03.2022 10:36 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : இந்திய அரசமைப்பு : அருஞ்சொற்பொருள்

அருஞ்சொற்பொருள்


v சட்டம்: ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறும் போது சட்டம் எனப்படுகிறது.


v உட்பிரிவு: ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி.


v தீர்மானம்: நாடாளுமன்றத்தின் தீர்வு, நடவடிக்கை, கருத்து கோரி நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது தீர்மானம் எனப்படும்


v பதவி பிராமணம்: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தமது உறுதிப்பாட்டினைத் தெரிவித்து கடவுள் பெயராலோ, பகுத்தறிவின் பெயராலோ உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும்.


v நிலைக்குழு: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அல்லது அவ்வப்போது அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது அவைத் தலைவரால் நியமிக்கப்படும் குழு நிலைக்குழு எனப்படும்.


v அரசு: மத்திய அரசாங்கம், இந்திய நாடாளுமன்றம், மாநில அரசாங்கங்கள், மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள், இந்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது அரசு ஆகும்.



Tags : Constitution of India | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 1 : Constitution of India : Glossary Constitution of India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு : அருஞ்சொற்பொருள் - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு