வணிக விலங்கியலின்போக்குகள் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology
முக்கிய கலைச்சொற்கள்
கலைச் சொற்கள் : விளக்கம்
1. உயிரிய அடையாளங்காட்டிகள் (Biological Indicator) - சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க நிலைமைகள் நிலவுவதை தம்முடைய பண்பின் மூலம் வெளிப்படுத்தும் உயிரினங்கள், சிற்றினங்கள் அல்லது இனத்தொகை.
2. என்டெமிசம் (Endomism) - ஒரு குறிப்பிட்ட புவியியல் சார்ந்த இடத்தில் மட்டுமே காணப்படும். ஒரு சிற்றினத்தின் சூழலியல் நிலை.
3. டிரிலோஸ்ஃபியர் (Drilosphere) - மண்புழுவின் சுரப்புகள், வளைதோண்டுதல் மற்றும் நாங்கூழ் கட்டிகள் வெளியேற்றம் போன்ற இயக்கங்களால் மண்ணில் ஏற்படும் துளைகள்.
4. ஓரடைக் குஞ்சுகள் (Brood) - ஒரு முறை அடைக்காத்தலுக்குப் பிறகு வெளிவரும் பறவைக் குஞ்சுகளைக் கொண்ட குடும்பம்.
5. ஹாப்பா (Hapa) - இவை வலையால் சூழப்பட்ட செவ்வக அல்லது சதுர வடிவ கூண்டு போன்ற அமைப்பாகும். இவை மீன் வளர்த்தலின் பல்வேறு நிலைகளில் மீன்களை நீரில் விட்டு வளர்க்க பயன்படுகின்றன. இவை மிகச்சிறிய வலைக்கண்களையுடைய வலைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன.