Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | விலங்குலகம்: அறிமுகம்
   Posted On :  05.01.2024 09:48 am

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்

விலங்குலகம்: அறிமுகம்

விலங்குலகம் பல மில்லியன் கணக்கான விலங்கினங்களை கொண்டுள்ளது. விலங்குகளை வகைப்படுத்தாமல் அவற்றைப்பற்றி அறிந்துகொள்வது குழப்பத்தை ஏற்படுத்தும்.

அலகு – I

பாடம் - 2

விலங்குலகம்



பாடஉள்ளடக்கம்

2.1. வகைப்பாட்டின் அடிப்படைகள்

2.2. விலங்குலக வகைப்பாடு

2.3. முதுகுநாணற்றவை

2.4. முதுகுநாணுடையவை

சிட்டு குருவிகள் அழிந்து வரும் விலங்கினப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 20 உலகச் சிட்டுக்குருவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. (வீட்டு சிட்டு குருவி - Passer domesticus)



கற்றலின் நோக்கம்:

வகைப்பாட்டின் தேவையை உணர்ந்து கொள்ளச் செய்தல் 

விலங்கினத் தொகுதியின் முக்கியப் பண்புகளைப் புரிந்துகொள்ளச் செய்தல்


விலங்குலகம் பல மில்லியன் கணக்கான விலங்கினங்களை கொண்டுள்ளது. விலங்குகளை வகைப்படுத்தாமல் அவற்றைப்பற்றி அறிந்துகொள்வது குழப்பத்தை ஏற்படுத்தும். நாள்தோறும் புதுப்புது  விலங்கினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.அவற்றை அடையாளங்காணவும், அவற்றுக்குப் பெயரிடவும், அதற்குரிய முறையான இருப்பிட நிலையை (Systematic Position) தேர்ந்தெடுத்து ஒதுக்கவும் வகைப்பாட்டியல் தேவையானதாகும். நெருங்கிய தொடர்புடைய பண்புகளின் அடிப்படையிலேயே விலங்குலகம் வகைப்படுத்தப்படுகின்றது. விலங்குகள் யூகேரியோட், பலசெல் அமைப்பு, சார்ந்துண்ணும் உணவூட்ட முறை கொண்ட உயிரிகள் போன்றவற்றை விலங்குலகம் கொண்டுள்ளது. ஏறத்தாழ 35 தொகுதிகளைக் கொண்ட விலங்குலகத்தில் 11 தொகுதிகள் முதன்மைத் தொகுதிகள் ஆகும். இதில் ஏறத்தாழ 99% உயிரிகள் முதுகெலும்பற்றவைகளாகும். மற்றவை முதுகெலும்புடையவை. முதுகுநாணைப் பெற்றிருத்தல் அல்லது பெறாதிருத்தலின் அடிப்படையில் முதுகுநாணுடையவை மற்றும் முதுகு நாணற்றவை என இரு பெரும் பிரிவுகளாக விலங்குகள் பிரிக்கப்பட்டுள்ளன.


11th Zoology : Chapter 2 : Kingdom Animalia : Kingdom Animalia: Introduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : விலங்குலகம்: அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்