விலங்குலகம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 2 : Kingdom Animalia
22. ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
1. ஸ்பாஞ்சில் உள்ள ஸ்பான்ஞ்சோசீல் மற்றும் கால் வாய் பகுதிகளில், கோயனோசைட் என்ற சிறப்பு கசையிழை செல்கள் உள்ளது
2. இது கால்சியம் மற்றும் சிலிக்கான் முட்களால் அல்லது இரண்டும் கலந்தது
3. இது ஸ்பாஞ்சின் உடலுக்கு சட்டகமாக அமைந்து உடலுக்கு உறுதியைத் தருகிறது
23. பெரும்பாலான விலங்குகளில் கணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக் குறிப்பிடுக.
1. செல்லடுக்கமைவு
2. உடற்குழி தன்மை
3. முதுகு நாண்
4. கண்டங்கள் பெற்றுள்ளமை அல்லது இல்லாமை.
24. தங்களது கருவளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பிகருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகளை பட்டியலிடுக.
கருமூலப்படை
III உறுப்புக்கள் உருவாதல்
1- புறப்படை:- தோல், முடி, நரம்புகள், பல், நகம்
2 - அகப்படை: - குடல், நுரையீரல், கல்லீரல்
3 - நடுப்படை: - தசை, எலும்புகள், இதயம்.
25. மூடிய மற்றும் திறந்த வகை இரத்த ஓட்டத்தை ஒப்பிடுக.
திறந்த வகை இரத்த ஓட்டம்
1. இரத்த நாளம் உண்டு
2. இரத்தம் இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்
3. எ.கா. மண்புழு, தலைநாணிகள், முதுகு நாணிகள்
மூடிய வகை இரத்த ஓட்டம்
இரத்த நாளம் கிடையாது
இரத்தம் திசு இடைவெளியில் நிரம்பியிருக்கும்
எகா. கணுக்காலிகள்; மெல்லுடலிகள்; முட்தோலிகள்
26. பிளவு உடற்குழி (Schizocoelom) உணவுப் பாதை உடற்குழியுடன் (Enterocoelom) ஒப்பிடுக.
பிளவு உடற்குழி
1. நடுப்படை பிளவினால் உருவாகிறது.
2. எகா. வளைதசை புழுக்கள் ; கணுக்காலிகள்
உணவுப் பாதை உடற்குழி
1. மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகுகிறது.
2. எகா. முட்தோலிகள் ; முதுகு நாணிகள்
27. கரு வளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது.
கரு வளர் நிலையில் உள்ள மூலக்குடலிலிருந்து என்டிரோசீல் என்ற உண்மையான உடற்குழி தோன்றுகிறது.
28. கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கி. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
வினாக்கள்:
அ. விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு
ஆ. இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
இ. இவ்வுயிரியில் தலை காணப்படுகிறதா?
ஈ. இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
உ. இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்.
ஊ. இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?
விடை:-
அ. கடல் சாமந்தி (ஆடம்சியா).
ஆ. இருபக்க சமச்சீர்.
இ. தலை கிடையாது.
ஈ. ஈரடுக்கு.
உ. ஒன்று.
ஊ.உள்ளது.
29. கீழ்க்காணும் சொல் தொகுப்பில் (பண்புகளில்) தொடர்பில்லாத வார்த்தையைப் (பண்பை) கண்டுபிடித்து காரணத்தைக் கூறு.
முதுகு நாண், தலையாக்கம், முதுகுப்புற நரம்பு வடம், மற்றும் ஆரச்சமச்சீர்
விடை:-
தொடர்பில்லாத பண்பு: - ஆரச்சமச்சீர்.
1. முதுகு நாண், தலையாக்கம், முதுகுப்புற நரம்பு வடம், ஆகிய பண்புகள் முதுகு நாணுடைய பண்புகள்
2. ஆரச்சமச்சீர்:- முதுகு நாணற்ற உயிரில் காணப்படும் சமச்சீர் அமைப்பு
30. ஏன் தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகிறது.
• நடுப்படையிலிருந்து உருவாகும் உடற்குழியே உண்மையான உடற்குழியாகும் ஆனால்,
• தட்டைபுழுவில் நடுப்படை செல்களிலிருந்து, உடற் சுவர் உருவாகிறது எனவே இது உடற்குழியற்றவை என அழைக்கப்படுகிறது.
31. சுடர் செல்கள் என்றால் என்ன?
• சுடர் செல்கள் தட்டைப் புழுக்களில் காணப்படும் சிறப்பு தன்மை கொண்ட செல்களாகும்
• இது கழிவு நீக்கம், மற்றும் ஊடுகலப்பு பணியைச் செய்கிறது.
32. கருத்து வரைப்படம் தொகுதி நெமட்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக.
உருளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியூட்டிகள், ஒட்டுண்ணி, பால் வேறுபாட்டுத் தன்மை.,
33. டிரக்கோஃபோர் லார்வா காணப்படும் தொகுதி யாது?
தொகுதி அன்னலிடா வில் டிரக்கோஃபோர் (Trochophore) லார்வா காணப்படுகிறது.
34. முதிர் உயிரி டியூனிக்கேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
1. நரம்பு வடத்திற்குக் கீழ், உணவு பாதைக்கு மேல் அமைந்துள்ள முதுகு நாண்.
2. முதுகு நாணுக்கு மேல், முதுகுப் புற உட்சுவருக்கு கீழ் உள்ள நரம்பு வடம்.
3. முதுகு நாணுடைய வாழ்க்கைச் சுழற்சியில் காணப்படும் தொண்டை செவுள் பிளவுகள்.
35. தற்போது வாழும் தாடைகளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக.
தாடைகளற்ற மீன்
1. சில உயிரிகள் மீன்களின் மேல் புறத்தில் ஒட்டுண்ணியாக வாழும்.
2. உடல் நீண்டு விலாங்கு போன்றுள்ளது.
3. 5-15 இணை செவுள் பிளவுகள் உண்டு.
4. வாய் வட்டமாகவும், உறிஞ்சும் தன்மையுடன் காணப்படும்.
5. இனப்பெருக்கத்திற்காக நன்னீரை நோக்கி வலசை போகும்.
6. இனப்பெருக்கத்திற்கு பின் இறந்துவிடும்.
7. முட்டையிடுபவை.
குருத்தெலும்பு மீன்
1. தனித்தே வாழும்.
2. உடல் குட்டையாகவும், உடல் முழுவதும் பிளக்காய்டு செதில்களால் மூடப்பட்டிருக்கும்.
3. இழை வடிவ செவுள்களைப் பெற்றுள்ளது.
4. மேல் தாடை, கீழ் தாடை உண்டு.
5. இனப்பெருக்கத்திற்காக வலசை போவதில்லை.
6. இனப்பெருக்கத்திற்கு பின் இறப்பதில்லை.
7. குட்டி போடுபவை.
36. எலும்பு மீன்களின் மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுக.
1.கதிர்வடிவ உடலையும். உடல் முழுவதும் கேனாய்டு, சைக்ளாடு, டீனாய்டு வகை செதில்களால் மூடப்பட்டுள்ளது.
2.செவுள் மூடியால் மூடப்பட்ட 4இணை இழை வடிவ செவுள்களை பெற்றுள்ளது.
3. சுவாசிக்க அல்லது மிதக்க காற்றுப் பைகளை பெற்றுள்ளது.
4. ஆண் மற்றும் பெண் தனித் தனியானவை, முட்டையிடுபவை.
5. பக்க கோடு உணர்வுறுப்பு, மற்றும் மீசோநெப்ரிக் சிறுநீரகத்தை பெற்றுள்ளது.
37. மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
• உணவு பையுடன் இணைந்த அல்லது இணையாத காற்றுப்பைகள் உள்ளன.
• இப்பைகள் சுவாசத்திற்கு உதவுகிறது.
• திருக்கை மீன்கள் மிதக்க உதவுகிறது.
38. ஊர்வன உயிரிகள் நில வாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது ?
1. இதன் உடல் உலர்ந்த, செதில்களைக் கொண்ட உறுதியான தோலால் மூடப்பட்டுள்ளது.
2. இதன் உடல் மாறுபடும் வெப்ப நிலையைக் கொண்டது.
3.பெரும்பாலான விலங்குகள் ஓடுடைய முட்டைகளையிடுகிறது.
4. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்ற மெட்டாநெஃப்ரிக் சிறு நீரகத்தை பெற்றுள்ளது.
5. ஆண் மற்றும் பெண் தனித்தனியானவை, கருவுறுதல் உட்கருவுறுதல் மூலம் நடைபெறும்.
39. பறவைகளின் அகச்சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.
1. பறவைகளின் அகச்சட்டம் (எலும்புகள்) பறப்பதற்கேற்றவாறு இலகுவாக உள்ளது.
2. பறவைகளின் எலும்புகள் அனைத்திலும் காற்றறைகள் உள்ளன.
3. இதனால் குறைந்த எடையுடன் பறக்க உதவுகிறது.
40. முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்.
விடை : சமமாக இருக்காது.
காரணம்: I. முட்டையிடும் பெண் உயிரியின் முட்டைகள் புறக்காரணிகளால் அழிய நேரிடும் (அ) வெளிக்கருவுறுதல் மூலம், இளம் உயிரிகளிலிருந்து முதிர் உயிர் உருவாகும் வாய்ப்பு குறைவு. இதனால், முட்டையிலிருந்து வெளிவரும் உயிர்கள் முட்டைகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும்.
II. குட்டிபோடும் விலங்குகளின் கருவுறுதல் பெண் விலங்குகள் உடலுக்குள்ளேயே நடக்கும். (உள்கருவுறுதல்) புறக்காரணிகளால் இது அழியநேரிடும் வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் ஒரு சில காரணிகளால் இளம் உயிரிகள் இறக்க வாய்ப்பு உண்டு. எனவே பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் சம எண்ணிக்கையில் இருக்க வாய்ப்பில்லை, மேலும் குட்டிபோடும் பெண் விலங்குகளில் உருவாகும் முட்டைகள் அனைத்திலிருந்தும் உயிர்கள் உருவாகுவதில்லை.