Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | அரக்குப் பூச்சி வளர்ப்பு (Lac Culture)
   Posted On :  10.01.2024 08:44 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

அரக்குப் பூச்சி வளர்ப்பு (Lac Culture)

அரக்குப்பூச்சிகளை வளர்த்து அதிகளவில் அரக்கினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அரக்கு வளர்ப்பு எனப்படும்.

அரக்குப் பூச்சி வளர்ப்பு (Lac Culture) 

அரக்குப்பூச்சிகளை வளர்த்து அதிகளவில் அரக்கினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அரக்கு வளர்ப்பு எனப்படும். டக்கார்டியா லேக்கா (Tachardia lacca) எனும் பூச்சியிலிருந்து அரக்கு தயாரிக்கப்படுகிறது. இப்பூச்சி முன்னர் லேக்சிஃபர் லேக்கா (Laccifer lacca) என்று அழைக்கப்பட்டது. இப்பூச்சி மிகச்சிறிய பிசுபிசுப்பான ஊர்ந்து செல்லும் செதில் பூச்சி வகையை சார்ந்தது. இது தன்னுடைய நீண்ட உறிஞ்சுகுழலை தாவரத்தின் திசுக்களினுள் நுழைத்து தேவையான உணவை உறிஞ்சி வளரும். இது தன் உடலின் பின் முனையிலிருந்து சுரக்கும் அரக்கால் தனது உடலை மூடி பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

கருங்காலி (Acacia catechu), கருவேலை (Acacia nilotica) மற்றும் கும்பாதிரி (Schleicchera oleosa) ஆகியவை அரக்குப் பூச்சிகளின் ஓம்புயிரி தாவரங்களாகும். அரக்கின் தரமானது ஓம்புயிரி தாவரத்தின் தரத்தை சார்ந்தது. பெண் அரக்குப் பூச்சிகள் ஆண் பூச்சிகள் விட பெரியவை. பெண் பூச்சிகள் அதிகளவில் அரக்கு உற்பத்தி செய்கின்றன.


அரக்கின் பொருளாதார முக்கியத்துவம் 

) முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.

) காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.

) புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

) தங்க நகைகளின் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.


உங்களுக்குத்தெரியுமா?

ஒட்டுண்ணியாக வாழும் ஒரு உயிரியின்மீதுமற்றொரு ஒட்டுண்ணி (இரண்டாம்நிலைஒட்டுண்ணி) வாழுதல் அல்லது ஒட்டுண்ணிமேல் ஒட்டுண்ணியாக வாழும் தன்மை ஹைபர் பாரசைட்டிசம் எனப்படும்.


11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Lac Culture in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : அரக்குப் பூச்சி வளர்ப்பு (Lac Culture) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்