12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்

Lists,Tuples

தரவு அருவமாக்கினை ஸ்திரமுடன் செயல்படுத்த, பைதான் போன்ற மொழிகள் பேர்ஸ் எனும் கூட்டு அமைப்பை வழங்குகிறது.இவை லிஸ்ட் மற்றும் டூபுல்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.

Lists,Tuples

தரவு அருவமாக்கினை ஸ்திரமுடன் செயல்படுத்த, பைதான் போன்ற மொழிகள் பேர்ஸ் எனும் கூட்டு அமைப்பை வழங்குகிறது. இவை லிஸ்ட் மற்றும் டூபுல்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பேர்ஸ்சை , லிஸ்ட் கொண்டு எளிதாக செயல்படுத்தலாம்.

List

List அமைப்பு கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும். இவ்கோவைகளை List literal என்று அழைக்கப்படுகிறது. List பல மதிப்புகளை சேமிக்கும் இம்மதிப்புகள் எவ்வகையாகவும் இருக்கலாம் அல்லது மற்றொரு லிஸ்டாகவும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டு List is [10, 20).

list-ன் உறுப்புகளை இரு வழியில் அணுகலாம். முதல்வழி, அதிகம்பயன்படுத்தப்படும் பன்மடங்கு மதிப்பிருத்தல். இம்முறையில், list-ன் உறுப்புகள் பிரிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் வேறு பெயர்களுடன் இணைக்கப்படுகிறது.

lst := [10, 20]

x, y := Ist

மேலே காணும் எடுத்துக்காட்டில், Xயின் மதிப்பு 10 என்றும், Y யின் மதிப்பு 20 என மதிப்பிருத்தப்படும்.

இரண்டாம் முறையில் லிஸ்டின் உறுப்புகள், உறுப்புகள் தேர்வு மூலம் அணுகப்படுகிறது. செயற்குறிகள் சதுர அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். லிஸ்ட் லிட்டரல்ஸ் போல் அல்லாது கோவையில் ஒரு சதுர அடைப்புக்குறியை தொடர்ந்து வரும் மற்றொரு சதுர அடைப்புக்குறி லிஸ்டின் மதிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மற்றாக முந்தய கோவையின் உறுப்பை மதிப்பாக தேர்வு செய்யும்.

lst[0]

10

Ist[1]

20

மேலே காணும் எடுத்துக்காட்டினை கணித முறையில் set போன்று அமைக்கலாம்.


இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறையை Pairs என்று அழைக்கிறோம். List அதிகமாக பயன்படுத்தப்படும் முறையாகும். எனவே, List, Pairs என்று அழைக்கப்படுகிறது.

List கொண்டு விகிதமுறு எண்களை உருவமைப்பு.

போலிக் குறிமுறையில், தொகுதி, பகுதி ஆகிய இரு முழு எண்களின் Pairs கொண்டு விகிதமுறு எண்களை உருவமைக்கலாம்.

rational(n, d):

return [n, d]

numer(x):

return x[0]

denom(x):

return x[1]


Tuple

Pairs என்பது இரு தரவு பகுதிகளை சேமிக்கும் கலவை தரவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவரை இருவேறு முறைகளில் pairs தரவு வகை உருவமைப்பை பார்த்தோம். முதல் வழி , List கொண்டு உருவமைத்தல் மற்றும் இரண்டாம் வழி pairs கொண்டு வடிவமைத்தல் ஆகும்.

tuple என்பது அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்புகளை காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும். tuple என்பது List போன்றதாகும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் tuple-ல் கொடுக்கப்பட்ட உறுப்புகளை மாற்ற முடியாது, ஆனால் List-ல் இடம்பெற்றுள்ள உறுப்புகளை மாற்றலாம்.

எடுத்துக்காட்டு colour= ('red', 'blue', 'Green')

Tuple-சை Pair உருவமைத்தல்

nums := (1, 2)

nums[0]

nums[1]

2

சதுர அடைப்புக்குறி குறியீடு, பேர்ஸில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவதற்கு பயன்படுத்துகிறது என்பதை கவனிக்கவும். தரவுகள் பூஜ்யம் சுட்டு வரிசைப்பட்டுள்ளதால், முதல் உறுப்பு nums[0] என்றும் இரண்டாம் உறுப்பு nums[1] என்று அணுகப்படும்.

12th Computer Science : Chapter 2 : Data Abstraction : Lists, Tuples in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம் : Lists,Tuples - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்