தரவு அருவமாக்கின் வகைகள்
அருவமாக்க தரவு வகை (Abstract Data type (ADT)) என்பது பொருள்களுக்கான
வகை (அல்லது இனக்குழு) ஆகும், இதன் செயல் மதிப்பின் தொகுப்பு மற்றும் செயல்பாடுகளின்
தொகுப்பால் வரையறுக்கப்படுகிறது.
ADT யின் வரையறுப்பு என்ன வகையான செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும்
என்று குறிப்பிடுகின்றது, அவை எப்படி செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவதில்லை.
இவை தரவுகள் நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்றோ அல்லது எந்த நெறிமுறைகள்
செய்யப்பட வேண்டும் என்ற வழிமுறையோ குறிப்பிடப்படுவதில்லை. சுயமாக இவை செயல்படுத்தப்படுவதில்லை
எனவே, இதை அருவமாக்கம் என்று அழைக்கிறோம். விவரங்களை மறைத்து அவசியமானவற்றை மட்டும்
வழங்கும் செயல்முறையை அருவமாக்கம் என்கிறோம்.
இவ்வகை வரையறைகள், ADTS எவ்வாறு உருவமைக்கப்படுகின்றன என்றோ
அல்லது எவ்வாறு செயல்பாடுகள் கையாளப்படுகிறதோ என்று குறிப்பிடப்படுவதில்லை என்பதை நீங்கள்
காணலாம். ADT யை பல்வேறு வகையில் செயல்படுத்தலாம், உதாரணமாக List ADT ஒற்றை இணைக்கப்பட்ட
பட்டியல் அல்லது இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படலாம். இதுபோன்றே
அடுக்கு (Stack) ADT மற்றும் வரிசை ADT, List பயன்படுத்தி செயல்படுத்தப்படலாம்.
தரவு அருவமாக்கம் நாம் இந்த உலகை பற்றி நினைப்பதை பிரிதிப்பலிக்கிறது.
உதாரணமாக, ஒருவர் மகிழுந்தை ஓட்டி செல்வதற்கு, அதன் பொறி இயந்திரம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது
என்றோ டயர்கள் எவ்வகையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிந்து வைத்திருக்க
வேண்டியதில்லை மகிழுந்து எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்ற பயிற்சி இருந்தால் போதும்,
தரவு அருவமாக்கினை செயல்படுத்த, ஆக்கிகள் (Constructor) மற்றும் செலக்டர்
(Selectors) என்ற இரண்டு செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.