நினைவில் கொள்க
• ஒரு பொருளின் இயக்கம் அருவமாக்கம் தரவு வகையின் (ADT) அல்லது
இனக்குழு தொடர் மதிப்பு மற்றும் தொடர் செயல்பாடுகள் மூலம் வரையறுக்கப்படுகிறது.
• ADT வரையறை, எத்தகைய செயல்பாடுகள் செயப்பட வேண்டும் என்பதை
குறிக்கும், ஆனால் இச்செயல்பாடுகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படுவதில்லை.
• ADT தரவுகள் நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்றோ
செயல்பாடுகளை நிறைவேற்றும் வழிமுறைகளை குறிப்பிடுவதில்லை.
• கண்ஸ்டரக்டர் செயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை உருவாக்குகின்றது.
• செலக்டர்ஸ் செயற்கூறுகள் தரவு வகையிலிருந்து தகவல்களை மீட்டெடுக்க
பயன்படுகிறது.
• கான்கீரிட் தரவு வகை (CDT's) அல்லது ஸ்டக்சர்ஸ் எளிய கருத்தினை
செயல்படுத்த உதவுகிறது.
• அருவமாக்கம் தரவு வகை (ADT's) ஒரு கருத்து எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது
என்பதை தவிர்த்து, அக்கருத்து பற்றிய உயர் நிலை பார்வை (மற்றும் பயன்பாடு) வழங்குகிறது.
• காண்கீரிட் தரவு வகையின் உருவமைப்பு அறியப்பட்டது, ஆனால் அருவமாக்கம்
தரவு வகையின் உருவமைப்பு அறியப்படாது.
• Pairs எனும் கலவை அமைப்பு, List அல்லது Tuples கொண்டு உருவாக்கப்படுகிறது.
• List கோவை, சதுர அடைப்புக்குறிக்குள் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு
உருவமைக்கப்படும்.
• List-ல் உள்ள உருப்புகளை இருவழியில் அணுகலாம். முதல் வழிமுறை,
பல்வேறு மதிப்பிருத்தல் முறை மற்றும் இரண்டாம் வழிமுறை உறுப்பு தேர்ந்தெடுப்பு செயற்கூறி
ஆகும்.
• இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பது பேர்ஸ் என்று கருதப்படுகிறது.
• பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட List அனுமதிப்பதில்லை
.