பருவம் 1 அலகு 1 - 6 ஆம் வகுப்பு அறிவியல் - அளவீடுகள் | 6th Science : Term 1 Unit 1 : Measurements

   Posted On :  14.09.2023 12:42 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்

அளவீடுகள்

கற்றல் நோக்கங்கள் ❖ அன்றாட வாழ்வில் அளவீடுகளின் அவசியம் பற்றி புரிந்து கொள்ளல். ❖ நீளம், நிறை மற்றும் காலம் ஆகியவற்றை வரையறுக்கல். ❖ இயற்பியல் அளவுகள் சிலவற்றை அவற்றின் அலகுகள் மற்றும் துணை அலகுகள் கொண்டு மதிப்பிடுதல் ❖ சுழிப்பிழை மற்றும் இடமாறு தோற்றப் பிழையைக் கண்டறிதல். ❖ அன்றாடம் பயன்படுத்தப்படும் அளவிடும் கருவிகளின் மாதிரிகளை உருவாக்குதல். ❖ அலகுகளை மாற்றுவதன் அடிப்படையில் கணக்குகளைத் தீர்த்தல்.

அலகு 1

அளவீடுகள்


 

கற்றல் நோக்கங்கள்

அன்றாட வாழ்வில் அளவீடுகளின் அவசியம் பற்றி புரிந்து கொள்ளல்.

நீளம், நிறை மற்றும் காலம் ஆகியவற்றை வரையறுக்கல்.

இயற்பியல் அளவுகள் சிலவற்றை அவற்றின் அலகுகள் மற்றும் துணை அலகுகள் கொண்டு மதிப்பிடுதல்

சுழிப்பிழை மற்றும் இடமாறு தோற்றப் பிழையைக் கண்டறிதல்.

அன்றாடம் பயன்படுத்தப்படும் அளவிடும் கருவிகளின் மாதிரிகளை உருவாக்குதல்.

அலகுகளை மாற்றுவதன் அடிப்படையில் கணக்குகளைத் தீர்த்தல்,

 

 

அறிமுகம்

உன் சகோதரன் உனது உயரம் எவ்வளவு என்று கேட்கிறான். அதை எவ்வாறு அளந்து கூறுவாய்?

உன் நண்பர்களில் சிலர் கபடி விளையாட முடிவு செய்கின்றனர். கபடி விளையாடுவதற்கான எல்லைக் கோடுகளை எவ்வாறு அளந்து வரைவாய்?

உன் அப்பா உன்னிடம் ஒரு பையைக் கொடுத்து உருளைக்கிழங்கு வாங்கி வரச் சொல்கிறார். நீ எவ்வாறு கடைக்காரரிடம் கேட்பாய்?

உன் அம்மா தினமும் பால்காரரிடம் பால் வாங்குகிறார். தினமும் எவ்வளவு பால் வாங்குகிறார்?

உன் வீட்டிலிருந்து, நீ பள்ளிக்குச் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு?

மண்ணெண்ணெய் விற்பனை செய்பவர், அதனை எவ்வாறு அளந்து விற்கிறார்?

மேற்கண்ட அளவீடுகளைப் செயல்களைச் செய்வதற்கு பற்றி அறிந்துகொள்வது அவசியம். தெரிந்த ஒரு அளவுடன், தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது 'அளவீடு' எனப்படும். அளவீடு என்பது எண் மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

அளவுகளை அளவிடுவதற்கு நமக்கு அளவிடும் கருவிகள் தேவை. உனக்குத் தெரிந்த அளவிடும் கருவிகள் யாவை? மேற்கூறப்பட்ட செயல்களைச் செய்வதற்கு எத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவாய்?

நாம் ஏற்கனவே எடை, கிலோகிராம், லிட்டர், மில்லிலிட்டர், கிலோமீட்டர், நீளம், தொலைவு போன்ற சொற்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தப் பாடத்தில் நீளம், எடை, பருமன் மற்றும் காலம் போன்றவற்றைக் குறித்தும், அவற்றை அளவிடுவதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.




Tags : Term 1 Unit 1 - 6th Science பருவம் 1 அலகு 1 - 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 1 : Measurements : Measurements Term 1 Unit 1 - 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : அளவீடுகள் - பருவம் 1 அலகு 1 - 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்