Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | பயன்பாட்டு வினாக்கள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் - பயன்பாட்டு வினாக்கள் | 6th Science : Term 1 Unit 1 : Measurements

   Posted On :  14.09.2023 03:04 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்

பயன்பாட்டு வினாக்கள்

உனது பள்ளி விளையாட்டு விழாவிற்கு ஒரு சிறுதூர மராத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்த்திட முடிவு செய்யப்படுகிறது. அதற்கு 2 கிலோமீட்டர் தூர ஓடுதளம் தேவைப்படுகிறது. பள்ளி வளாகத்தினுள் இவ்வகை ஓட்டப்பந்தயத்தை நடத்திட இயலுமா? 2 கி.மீ சுற்றளவு கொண்ட ஓடுதளம் பள்ளி வளாகத்தினுள் கிடைக்குமா? அதற்கு பள்ளி வளாகம் எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் என்பதை நண்பர்களுடன் கலந்துரையாடுக. அவ்வளவு பெரிய வளாகம் இல்லையெனில் மாற்று வழி என்ன?

பயன்பாட்டு வினாக்கள்

உனது பள்ளி விளையாட்டு விழாவிற்கு ஒரு சிறுதூர மராத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்த்திட முடிவு செய்யப்படுகிறது. அதற்கு 2 கிலோமீட்டர் தூர ஓடுதளம் தேவைப்படுகிறது. பள்ளி வளாகத்தினுள் இவ்வகை ஓட்டப்பந்தயத்தை நடத்திட இயலுமா? 2 கி.மீ சுற்றளவு கொண்ட ஓடுதளம் பள்ளி வளாகத்தினுள் கிடைக்குமா? அதற்கு பள்ளி வளாகம் எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் என்பதை நண்பர்களுடன் கலந்துரையாடுக. அவ்வளவு பெரிய வளாகம் இல்லையெனில் மாற்று வழி என்ன?

கடலில் பயணிக்கும்போது, நீளத்தை கிலோமீட்டரில்தான் கணக்கிடுகிறோமா? கடலில் நீளத்தை எவ்வாறு கணக்கிட முடியும்? ஆய்ந்தறிக.

வானியல் பொருள்களுக்கிடையே உள்ள தொலைவை ஒளி ஆண்டில் கணக்கிடுவோம் என்பது நாம் அறிந்ததே. ஒளி ஆண்டு என்பது, ஒரு ஆண்டில் ஒளியானது கடந்துசெல்லும் தொலைவு ஆகும். கணக்கிடும் கருவியைப் பயன்படுத்தாமல், ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவை கிலோமீட்டரில் கணக்கிடவும் (ஒளியின் வேகத்தை உனது ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்).

சென்னைக்கும், மதுரைக்கும் இடையே உள்ள தொலைவு 462 கி.மீ என் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தத் தொலைவு குறிப்பிட்ட எந்த இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு? அறிவியல் மாணவர்களாகிய நமக்கு துல்லியமான விடை தெரியவேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் தொலைவானது இரு பேருந்து நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவா? அல்லது இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தொலைவா? கலந்துரையாடி இக்கேள்விக்கான விடையைக் கண்டறியவும். கண்டறிந்த விடையை உனது ஆசிரியரிடம் சரிபார்க்கவும்.

நாள் ஒன்றுக்கு, ஒருவர் இரண்டு லிட்டர் நீர் பருக வேண்டியது அவசியம். நீங்கள் தினந்தோறும் எவ்வளவு நீர் பருகுகிறீர்கள் என்பதைக் கணக்கிடவும். உங்களுக்குத் தேவையான அளவு நீரை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா?


இணையச் செயல்பாடு

வழிஅளவுகளை அளத்தல் (பரப்பளவு & சுற்றளவு)

படிநிலைகள்:

விளையாடி பார்ப்போமா.


• Google தேடு பொறியில்/ உலாவியில் சென்று BODHAGURU என்று PLAY STORE- ல் தட்டச்சு செய்யவும். (அலை பேசி மற்றும் கணினி இரண்டிலும் உண்டு). செயலியை தரவிறக்கம் செய்து INSTALL செய்து கொள்ளவும். பின் அலைபேசியில் அதை OPEN எனும் பச்சைநிற பொத்தானை அழுத்தி செயல் முறையைத் தொடங்கவும்.

•  START & HELP என்று திரையில் தோன்றும். அதில் START ஐக்கானைத் தொட்டு அதைத் தேர்வு செய்யவும்.

•  பரப்பளவு காண வேண்டிய இடம் திரையில் தோன்றும். கொடுக்கப் பட்டுள்ள 1 சதுரடி ஓடுகளை இழுத்துக் கொண்டு வந்து அருகில் கொடுக்கப்பட்டு உள்ள வரைபடத்தில் வைக்க வேண்டும்.

•  அதன் பிறகு அதற்கான மதிப்பை + சொடுக்கி கண்டு பிடிக்க வேண்டும். சரியான மதிப்பு வந்த உடன் CHECK பொத்தானை அழுத்த வேண்டும்.


உரலி:

https://play.google.com/store/apps/details?id=com.bodhaguru.AreaNPerimeter

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

Tags : Measurements | Term 1 Unit 1 | 6th Science 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்.
6th Science : Term 1 Unit 1 : Measurements : Some open ended questions Measurements | Term 1 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : பயன்பாட்டு வினாக்கள் - 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்