அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 1 : Measurements
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒரு
மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது
அ) மீட்டர் அளவு கோல்
ஆ) மீட்டர் கம்பி
இ) பிளாஸ்டிக் அளவுகோல்
ஈ) அளவு நாடா
விடை: ஈ) அளவு நாடா
2. 7
மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது
அ) 70 செ.மீ
ஆ) 7 செ.மீ
இ) 700 செ.மீ
ஈ) 7000 செ.மீ
விடை : இ) 700 செ.மீ
3. அளவிடப்படக்கூடிய
அளவிற்கு --------------- என்று பெயர்
அ) இயல் அளவீடு
இ) அலகு
ஆ )அளவீடு
ஈ) இயக்கம்
விடை: ஆ) அளவீடு
4. சரியானதைத்
தேர்ந்தெடு.
அ) கி.மீ > I.மீ > செ.மீ > மீ
ஆ) கி.மீ > I.மீ > செ.மீ > கி.மீ
இ) கி.மீ > மீ > செ.மீ> மி.மீ
ஈ) கி.மீ > செ.மீ > மீ > 101.18
விடை : இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
5. அளவுகோலைப்
பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, உனது கண்ணின் நிலை இருக்க வேண்டும்.
அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
இ) புள்ளிக்கு வலது புறமாக
ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்
விடை: ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக.
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. SI அலகு முறையில் நீளத்தின் அலகு மீட்டர்
2. 500 கிராம் = 0.5 கிலோகிராம்.
3. டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள
தொலைவு கிலோ
மீட்டர் என்ற அலகால் அளவிடப்படுகிறது.
4. 1மீ = 100 செ.மீ.
5. 5கி.மீ = 5000
மீ.
III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின்
சரியான கூற்றை எழுதுக.
1. ஒரு பொருளின் நிறையை 126 கிகி எனக் கூறலாம். சரி
2. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவு கோலைப்
பயன்படுத்தி அளவிட முடியும். தவறு
3. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும். சரி
4. முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான
முறை ஆகும். தவறு
5. SI அலகு முறை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சரி
IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.
1. சர்க்கரை : பொதுத்தராசு :: எலுமிச்சைச் சாறு : அளவுசாடி.
2. மனிதனின் உயரம் : செ.மீ :: கூர்மையான பென்சில்
முனையின் நீளம் : மி.மீட்டர்
3. பால் : பருமன் :: காய்கறிகள் : எடை (நிறை)
V. பொருத்துக.
1. முன்கையின் நீளம் - அ. மீட்டர்
2. நீளத்தின் SI அலகு - ஆ. விநாடி
3. நானோ - இ.103
4. காலத்தின் SI அலகு - ஈ. 10-9
5.கிலோ - உ.முழம்
விடைகள்
1. முன்கையின் நீளம் - அ. முழம்
2. நீளத்தின் SI அலகு - ஆ. மீட்டர்
3. நானோ - இ. 10-9
4. காலத்தின் SI அலகு - ஈ. விநாடி
5.கிலோ - உ. .103
VI. பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர்,
1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
விடை: 1 மில்லிமீட்டர், 1 சென்டிமீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்.
VII. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக.
1. SI
என்பதன் விரிவாக்கம் என்ன?
பன்னாட்டு அலகு முறை
[International System of units]
2. நிறையை
அளவிடப் பயன்படும். கருவியைக் கூறு.
பொதுத்தராசு
3. பொருந்தாததைத்
தேர்ந்தெடு.
கிலோகிராம்,
மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நானோ மீட்டர்
கிலோகிராம்
4. நிறையின்
SI அலகு என்ன?
கிலோகிராம்.
5. ஒரு
அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் யாவை?
(1) எண்மதிப்பு மற்றும்
(2) அலகு
VIII. சுருக்கமாக விடையளி:
1. அளவீடு
- வரையறு.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத
அளவை ஒப்பிடுவது 'அளவீடு' எனப்படும்.
2. நிறை
- வரையறு.
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள
பருப்பொருளின் அளவே ஆகும்.
3. இரு
இடங்களுக்கிடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ. இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும்
மாற்றுக.
தொலைவு = 43.65 கி.மீ (1 கி.மீ
= 1000 மீட்டர்)
தொலைவு = 43650 மீட்டர் (1 மீட்டர்
= 100 செ.மீ)
தொலைவு = 4365000 செ.மீ
4. அளவுகோளைக்கொண்டு
அளவிடும்போது, துல்லியமான அளவீட்டைப் பெறுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் யாவை?
(i) இடமாறு தோற்றப் பிழையைத்
தவிர்க்கவும்.
(ii) அளவீட்டை கீழ்நோக்கி செங்குத்தாகப்
பார்ப்பதன் மூலம் துல்லியமான அளவீட்டை பெறலாம்.
IX. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள்
தேடுக.
1.
10−3 என்பது
மில்லிமீட்டர்
2. காலத்தின்
அலகு
விநாடி
3. சாய்வாக
அளவிடுவதால் ஏற்படுவது
பிழை
4. கடிகாரம்
காட்டுவது
நேரம்
5. ஒரு
பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
நிறை
6. பல
மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற்கு எடுக்கப்படுவது.
சராசரி
7. ஒரு
அடிப்படை அளவு
நீளம்
8. வாகனங்கள்
கடக்கும் தொலைவைக் காட்டுவது
ஒடோமீட்டர்
9. தையல்காரர்
துணியை அளவிடப் பயன்படுத்துவது
நாடா
10. நீர்மங்களை
அளவிட உதவும் அளவீடு.
லிட்டர்
X. கீழ்க்காண்பவற்றைத் தீர்க்க.
1. உனது
வீட்டிற்கும் உனது பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு 2250மீ. இந்தத் தொலைவினை கிலோமீட்டரில்
குறிப்பிடுக.
வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே
உள்ள தொலைவு = 2250 மீ
தொலைவு = 2.250 கிலோமீட்டர்.
2. கூர்மையான
ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது ஒரு முனையின் அளவு 2.0 செ.மீ எனவும், மறு முனையின்
அளவு 12:1 செ.மீ எனவும் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?
அளவு கோலின் ஒரு முனை = 2.0
செ.மீ
அடுத்த முனை = 12.1 செ.மீ
பென்சிலின் நீளம் = 10.1 செ.மீ (அல்லது) 10 செ.மீ
மற்றும் 1 மி.மீ
XI. விரிவாக விடையளி
1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
1 ஆவது முறை :
• ஒரு வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்
• கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை
உறுதி செய்ய வேண்டும்.
• வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும் முடிவுப் புள்ளியையும்
கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
• கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும்,
முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.
• இதுவே வளைகோட்டின் நீளமாகும்.
2 ஆவது முறை :
• கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி
உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
• வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து
தொடங்கவும். மறுமுனை வரை அளந்து குறிக்க வேண்டும்.
• வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரிக்கவும்.
குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
• வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை X ஒரு
பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.
2. கீழ்க்காணும்
அட்டவணையை நிரப்புக.