அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீளம் | 6th Science : Term 1 Unit 1 : Measurements

   Posted On :  14.09.2023 03:05 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்

நீளம்

நீளம் என்றால் என்ன? ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். இது ஒரு புத்தகத்தின் இரு விளிம்புகளுக்குஇடைப்பட்ட தூரமாகவோ அல்லது ஒரு கால்பந்து விளையாட்டுத் திடலின் இரு மூலைகளுக்கு இடைப்பட்ட தூரமாகவோ அல்லது உனது வீட்டிற்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட தூரமாகவோ இருக்கலாம்.

நீளம்

நீளம் என்றால் என்ன? ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். இது ஒரு புத்தகத்தின் இரு விளிம்புகளுக்குஇடைப்பட்ட தூரமாகவோ அல்லது ஒரு கால்பந்து விளையாட்டுத் திடலின் இரு மூலைகளுக்கு இடைப்பட்ட தூரமாகவோ அல்லது உனது வீட்டிற்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட தூரமாகவோ இருக்கலாம்.


நீளத்தின் அலகு மீட்டர். அதன் குறியீடு ‘m’ எனக் குறிக்கப்படுகிறது. சிறிய அளவீடுகள் மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டரிலும், கட்டிடத்தின் உயரம், விளம்பரப் பலகையின் நீளம் மற்றும் மின்விளக்குக் கம்பத்தின் உயரம் போன்ற பெரிய அளவுகள் மீட்டரிலும் அளவிடப்படுகின்றன. இரு நகரங்கள் அல்லது கிராமங்களுக்கு இடையே உள்ள தொலைவு, உனது பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவு போன்றவை எவ்வாறு அளவிடப்படுகின்றன. அவை கிலோமீட்டரில் அளவிடப்படுகின்றன.


நீளத்தின் கொள்வோம். அலகுகளை நாம் தெரிந்து

1 சென்டி மீட்டர் (செ.மீ) = 10 மில்லிமீட்டர் (மி.மீ)

1 மீட்டர் (மீ) =100 சென்டி மீட்டர் (செ.மீ)

1கிலோமீட்டர் (கி.மீ) = 1000 மீட்டர் (மீ)


சிந்திக்க:

1 கிலோமீட்டரை சென்டி மீட்டரில் கூறமுடியுமா?

நாம் ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடுவோமா?

1. ஒரு அளவு கோலை எடுத்துக் கொள்க.

2. அளவுகோலில், தெளிவான பிரிவுகளில் 1,2,3,4.15 வரை (சிறிய அளவுகோல்) அல்லது 1,2,3, 30 வரை (பெரிய அளவு கோல்) எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அளவுகோளில் இரு எண்களுக்கு இடைப்பட்ட (உதாரணமாக 1 மற்றும் 2க்கு இடையே) தொலைவு ஒரு சென்டி மீட்டரைக் குறிக்கிறது (இது செ.மீ என எழுதப்படுகிறது).

3. 1 மற்றும் 2 எண்களுக்கிடையே இருப்பதைக் உள்ள சிறிய கோடுகள் கவனிக்க. ஒன்பது கோடுகள் இரு கோடுகளுக்கிடையே இருக்கும். இரு சிறிய அடுத்தடுத்த பிரிவுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது மி.மீ என எழுதப்படுகிறது.


ஏன் பன்னாட்டு அலகு முறை தேவை?


செயல்பாடு 1

ஐந்து மாணவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கவும். அதிலுள்ள உயரத்தை ஒருவரின் மற்ற நான்கு பேர், சாண் (அ) முழம் என்ற அளவு முறையில் அளவிடவும்  உங்கள் அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். நீங்கள் கண்டறிவது என்ன? ஏன்?

இப்பொழுது நீங்கள் அனைவரும் சுவரின் அருகில் நின்றுகொண்டு உங்கள் உயரத்தைக் குறிக்கவும். அளவுகோலால் அதை அளக்கவும். என்ன வேறுபாடு ஏற்படுகிறது என ஆய்வு செய்யவும்.

மேற்கூறப்பட்ட செயல்பாட்டிலிருந்து உன்னுடைய அளவீடானது உனது நண்பர்களின் அளவீட்டிலிருந்து மாறுபடுகிறது என்பதைக் காணமுடியும். இதைப்போலவே, வெவ்வேறு நாடுகளில் நாடுகளில் பயன்படுத்தப்படும் அளவீடுகளும் வேறுபட்டிருந்துன.

ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் அளவுகளை அறிவியல் அளப்பதற்கு பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர். இந்த முறையானது பன்னாட்டு அலகு முறை (International System of Units) அல்லது SI அலகு முறை எனப்படுகிறது.

நீளத்தின் SI அலகு மீட்டர்

நிறையின் SI அலகு கிலோகிராம்

காலத்தின் SI அலகு வினாடி

பரப்பளவின் அலகு மீ

பருமனின் அலகு மீ


முன்னொட்டுகள்

SI அலகுகளின் பன்மடங்கு மற்றும் துணைப் பன்மடங்குகள் முன்னொட்டுகளாகப் பயம்படுத்தப்படுகின்றன. SI அலகுகளில் பயன்படுத்தப்படும் முன்னொட்டுகள் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன.



அளவீடுகளைத் துல்லியமாக அளவிடல்.

அளவிடுதல் என்பது எப்பொழுதும் துல்லியமாகவும், அதை அளவிடும் முறை சரியானதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய அன்றாட பயன்பாட்டில் 'தோராயமாக வாழ்வியல் அளவிடுதல்' என்பது அளவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அறிவியல் கணக்கீடுகளில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, சாவியினுடைய (பூட்டு மற்றும் சாவி) வளைவை ஒரு மில்லிமீட்டர் மாற்றினால்கூட பூட்டு திறக்காது. எனவே, அறிவியல் கணக்கீடுகளில், அளவீடுகள் துல்லியமாக இருத்தல் அவசியம். அளவுகோலைப் பயன்படுத்தி அளக்கும்போது ஏற்படும் சில பொதுவான தவறுகளை இப்பொழுது நாம் பார்ப்போம்.


ஒரு குண்டூசியின் நீளத்தை அளவுகோலைப் பயன்படுத்தி அளத்தல்.

குண்டூசியின் தலைப்பகுதியை அளவுகோலின் சுழியில் (O) பொருந்துமாறு வைக்கவும்.


முழுமையான சென்டிமீட்டர் பிரிவுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவும். பிறகு மிகச்சிறிய பிரிவுகளை மில்லிமீட்டர் அளவில் கணக்கிடவும்.

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள 2செ.மீ. குண்டூசியின் நீளமானது 2 மற்றும் 6 மி.மீ. அளவைக் கொண்டுள்ளது. சரியான துணைப் பன்மடங்குகளைக் குறிக்கவும்.


குறிப்பு

எப்போதும் பொருளை (குண்டூசி), அளவுகோலுக்கு இணையாக வைத்துக் கணக்கிடவும்.

அளவீட்டை சுழியில் இருந்து ஆரம்பிக்கவும்.

 

செயல்பாடு 2

நோக்கம்: வளைகோட்டின் நீளத்தைக் காணல்.

தேவையான பொருள்கள்: அளவுகோல், அளவிடும் நாடா, ஒரு கம்பி மற்றும் பேனா.

செய்முறை:

* ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைக. அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்.

* கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்யவும்.

* வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்கவும்.

* இப்பொழுது கம்பியை நேராக நீட்டவும். குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப்புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.

* இதுவே வளைகோட்டின் நீளமாகும்.


ஒரு  வாழைப்பழத்தின் நீளத்தைக் கண்டறிக.



 

செயல்பாடு 3

வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்.


ஒரு தாளின் மீது AB என்ற வரை. கவையின் வளைகோட்டினை இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்குக. அவ்வாறு மறுமுனை வரை அளந்து குறித்திடுக. வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்திடுக. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிடுக.

வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை x ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசிப் பாகத்தின் நீளம்.



Tags : Measurements | Term 1 Unit 1 | 6th Science அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 1 : Measurements : Length Measurements | Term 1 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் : நீளம் - அளவீடுகள் | பருவம் 1 | அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள்