Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பணமும் நிதித்துறைச் சீர்திருத்தங்களும்

இந்தியப் பொருளாதாரம் - பணமும் நிதித்துறைச் சீர்திருத்தங்களும் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India

   Posted On :  06.10.2023 11:04 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

பணமும் நிதித்துறைச் சீர்திருத்தங்களும்

இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன. வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பணமும் நிதித்துறைச் சீர்திருத்தங்களும்

இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன. வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


அவற்றுள் சில

) ரொக்க இருப்பு வீதம்

1991 ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்ட ரீதியான நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio SLR) மற்றும் ரொக்க இருப்பு வீதம் (Cash Reserve Ratio) குறைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டின் மத்தியில் SLR மற்றும் CRR விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன, மூன்றாண்டு கால அளவில் SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று, CRR விகிதத்தையும் நான்கு ஆண்டுகளில், 3 முதல் 5% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


) வட்டி விகிதத் தளர்வு:

முன்னர், 1) வைப்புகளுக்கான வட்டி வீதம் மற்றும் 2) வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதம் போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்படுத்தி வந்தது. தற்போது தளர்த்தப்பட்டடுள்ளன.


) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.


) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பைப் பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் வழங்குதல் தளர்த்தப்பட்டது


) புதிய கிளைகளைக் கண்டறிய மற்றும் சிறப்புக் கிளைகளைத் திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது


) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்காக வழிமுறைகள் வழங்கப்பட்டன


) நரசிம்மம் குழு அறிக்கையின்படி வராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினைக் கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன





தொகுப்புரை

புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குப்பின், இந்தியப் பொருளாதாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் அளவே அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை நிர்ணயிக்கும் எனில், இந்தியா 1991 முதல் உண்மையாக வளர்ந்துள்ளது. இந்திய GDP 2015-16 ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது. GDP ஐப் பொறுத்து நமது நாடு தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒரு முறை Dr.இராஜ்கிருஷ்ணா அவர்களால் பயன்படுத்தப்பட்ட "இந்து வளர்ச்சி வீதம்" என்பதன் அடிப்படையில் குறைவான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி கணக்கியல் அமைப்பு மாற்றங்கள் காரணமாக உள்ளது. அதனால்தான் அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பொதுமக்களின் துன்பங்களைத் தணிக்கதவறிவிட்டது. சமூக, பொருளாதார மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் சமனற்ற நிலை ஏற்பட்டது. வேலையின்மை, வறுமை, உடல்நலக்குறைவு போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன.



சொற்களஞ்சியம்

தாராளமயமாதல் 

சமூக மற்றும் அரசியல் கொள்கைகளின் அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்துதல்.

தனியார்மயமாதல் 

தனியாருக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பது மற்றும் பொதுத்துறைகளை விற்பது.

உலகமயமாதல்

உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பது; வாணிபத்தின் மீதான வரிகளை குறைப்பது

முதலீட்டு குறைப்பு

அரசு தனது சொத்தை விற்பது.

தொழில் உரிமம் விலக்கு

அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் உரிமம் பெறுதலை நீக்குதல்

வெளிநாட்டு நேரடி முதலீடு

வெளிநாட்டார்கள் செய்யும் முதலீடு.

வெளிநாட்டு தனியார் முதலீடு 

வெளிநாட்டுத் தொகுப்பு முதலீடு.

குளிர்பதன சேமிப்புக் கிடங்கு 

வேளாண் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான குளிர்மைப்படுத்தப்பட்ட கிடங்கு

SEZ (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

இது ஏனைய பகுதி தொழில்களிலிருந்து வேறுபட்டது. இது வணிகம், மூதலீடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

SLR (சட்டபூர்வ இருப்பு வீதம்)

வடிக்கையாளருக்கு கடன் வழங்குவதற்கு முன் வணிக வங்கிகள் ரொக்கமாக / தங்கமாக / அரசு பத்திரங்களாக வைத்திருக்க வேண்டிய இருப்பாகும்

Tags : India | Economics இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 9 : Development Experiences in India : Monetary and Financial Sector Reforms India | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் : பணமும் நிதித்துறைச் சீர்திருத்தங்களும் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்