Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
   Posted On :  09.01.2024 07:14 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

நம் உடல் எவ்வாறு வேலைச் செய்கிறதென்று எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா?

அலகு - IV

பாடம் - 10

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு



பாட உள்ளடக்கம்

10.1. நரம்பு மண்டலம்

10.2. மனித நரம்பு மண்டலம்

10.3. நியூரான்நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு

10.4. மைய நரம்பு மண்டலம்

10.5. அனிச்சை செயல் மற்றும் அனிச்சை வில்

10.6. உணர்வைப் பெறுதல் மற்றும் செயல் முறையாக்கம்


மூளையின் மிக முக்கியமான தடைசெய்யும் நரம்புணர்வு கடத்தி காமா அமைனோ பியூட்டைரிக் அமிலம் (GABA) ஆகும். நரம்பின் கிளர்ச்சித் தன்மையை இது குறைக்கிறது.



கற்றலின் நோக்கம்:

நியூரானின் அமைப்பு மற்றும் மனித நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல்.

•  உணர்வு நரம்புகள் மற்றும் இயக்கு நரம்புகளின் பணிகளை வேறுபடுத்தி அறிதல்

நரம்பு தூண்டல் கடத்தப்படுவதைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் மயலின் உறையின் முக்கியத்துவம் மற்றும் தாவல் முறை கடத்தல் ஆகியவற்றைக் கற்றல்

•  நரம்பு சந்திப்பு மற்றும் நரம்புதசை சந்திப்பு ஆகியவற்றின் பங்கினை அறிதல்

•  மைய நரம்பு மண்டலத்தின் அமைப்பையும் பணிகளையும் அறிதல்

கண், காது, நுகர்ச்சி மற்றும் சுவை உணர்விகள் மற்றும் தோல் ஆகியவற்றின் உணர்வு உள்வாங்குதல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றைப் புரிந்துணர்தல்

நம் உடல் எவ்வாறு வேலைச் செய்கிறதென்று எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டேயுள்ளது. எத்தனையோ புறச்சூழல் காரணிகள் மாறினால் கூட நிலைத்து நின்று, அப்பணிகளைச் சிறப்பாகச் செய்கிறது. கண்கள் நம்மைச்சுற்றியுள்ள பொருட்களைக் காண உதவுகிறது. பல்வேறு ஒலிகளைக் கேட்க நமது காதுகள் உதவுகின்றன. இதயம் ஒரு ஒழுங்கமைவோடு விடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நுரையீரல் காற்றை வாங்குவதும் வெளியேற்றுவதுமாய் உள்ளது. உடலில் காயம் படும்போது கண்கள் கண்ணீர் விடுகின்றன. உடலின் ஒவ்வொரு செல்லும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. இச்செயல்கள் எல்லாம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது தெரியுமா?

நரம்பு மண்டலமானது உடல் முழுவதுமுள்ள பல்வேறு மண்டலங்களையும் ஒருங்கிணைத்து, சிறப்பாகவும் தடையின்றியும் செயல்படச் செய்கிறது. ஒவ்வொரு நொடியிலும் நடைபெறும் உடற்செயல்பாடுகளில் பங்கேற்பது நரம்பு மண்டலமே ஆகும். இரவு பகலாக, நரம்பு செல்களின் ஊடே செல்லும் மில்லியன் கணக்கான தூண்டல்களே இதயத்தைத் துடிக்கச் செய்யவும், சிறுநீரகம் கழிவை வெளியேற்றவும், சுவை மிகு உணவை வாய் அறிவதுமாகிய பல நிகழ்வுகளுக்குக் காரணங்களாய் அமைகின்றன. இசைக் கருவியை வாசித்துக் கொண்டே பாடுவது, பாடலை ரசித்தவாறே வீட்டு வேலைகளைச் செய்வது என, ஒரே நேரத்தில் பெறப்படும் பலவகைத் தூண்டல்களுக்கும் ஏற்றவாறு தொடர்ந்து வினையாற்றுவது நரம்பு மண்டலத்தின் சிறப்பாகும். கூட்டு செயல்களான, மிதிவண்டி ஓட்டுதல் அல்லது பிற வாகனங்களை இயக்குதல் போன்ற வழக்கமான வேலைகளானாலும் அல்லது பயிற்சிபெற்றுத் தேர்ந்த நுண்திறப் பணியானாலும் அதில் நரம்பு மண்டலத்தின் ஒருங்கிணைப்பு ஆற்றல் பெரும் பங்கு இருக்கும்.

இப்பாடத்தின் வழி, நரம்பு மண்டலம் அமைந்துள்ள விதம், எவ்வாறு அது அனைத்து மண்டலங்களையும் ஒருங்கிணைக்கிறது? மற்றும் இப்பணிகளின் பின்புலமாக உள்ள செல் உள் நிகழ்வுகள் என்ன? ஆகியவற்றை அறியலாம்

11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Neural Control and Coordination: Introduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு