Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஆல்கீன்களின் பெயரிடும் முறை
   Posted On :  03.01.2024 10:10 am

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

ஆல்கீன்களின் பெயரிடும் முறை

அலகு 11-ல் கற்ற IUPAC பெயரிடும் முறைக்கான பொதுவான விதிகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு IUPAC பெயர்களை எழுதலாம்.

(I) ஆல்கீன்களின் பெயரிடும் முறை :

அலகு 11-ல் கற்ற IUPAC பெயரிடும் முறைக்கான பொதுவான விதிகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு IUPAC பெயர்களை எழுதலாம்.

அட்டவணை 13.4 - ஆல்கீன்களின் IUPAC பெயர்



தன் மதிப்பீடு

9. கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு IUPAC பெயர்களை எழுதுக.


விடை :



10. கீழ்கண்ட ஆல்கீன்களுக்கு அமைப்பு வாய்ப்பாட்டினை வரைக.

i) 6 - புரோமோ - 2,3 - டைமெத்தில் - 2 - ஹெக்சீன்

ii) 5 - புரோமோ – 4 - குளோரோ- 1- ஹெப்டீன்

iii) 2,5 - டைமெத்தில் - 4 - ஆக்டீன்

iv) 4 – மெத்தில் - 2 பென்டீன்

விடை :



(ii) மாற்றியம்:

ஆல்கீன்களில் இரட்டை பிணைப்பு இருப்பதால், அவைகளில் அமைப்பு மற்றும் வடிவ மாற்றியம் அமைய வாய்ப்புள்ளது

அமைப்பு மாற்றியம்:

முதல் இரண்டு சேர்மங்களான ஈத்தீன் (C2H4) மற்றும் புரப்பீன் (C3H6), எந்த ஒரு மாற்றியத்தையும் பெற்றிருப்பதில்லை. ஏனெனில் இம்மூலக்கூறுகளில் கார்பன் அணுக்களை, ஒரே ஒரு முறையில் தான் அமைக்க முடியும். எனினும் ஆல்கீன் குடும்பத்தில் உள்ள மூன்றாவது சேர்மமான பியூட்டீன் முதல் (C4H8), கட்டமைப்பு மாற்றியம் காணப்படுகிறது.


அமைப்புகள் (i) & (ii) இடமாற்றியங்களாகும். (i) & (iii) மற்றும் (ii) & (iii) ஆகியன சங்கிலிதொடர் மாற்றியங்களாகும்.


தன் மதிப்பீடு

11) கீழ்கண்ட மூலக்கூறு வாய்ப்பாட்டுடைய சேர்மங்களுக்கு, அமைப்பு வாய்ப்பாடுகளை வரைக. மேலும், மாற்றியங்களை கண்டறிந்து, அவைகளுக்கு அமைப்பு வாய்ப்பாடு வரைந்து, IUPAC முறையில் பெயரிடுக:

(i) C5H10 - பென்டீன் (3 மாற்றியங்கள்)

(ii) C6H12 - ஹெக்சீன் (5 மாற்றியங்கள்)

தீர்வு 


வடிவ மாற்றியம்:

இது புறவெளி மாற்றியத்தின் ஒரு வகையாகும். இதனை சிஸ்-டிரான்ஸ் மாற்றியம் எனவும் அழைக்கலாம். கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள இரட்டைப் பிணைப்பின் வழியே சுழற்சிக்கு தடையிருப்பதால் இம்மாற்றியம் ஏற்படுகின்றது.

ஒத்த தொகுதிகள் ஒரே புறத்தில் அமைந்தால், அத்தகைய வடிவமாற்றியம் சிஸ் மாற்றியம் என்றும் ஒத்த தொகுதிகள் எதிரெதிர் புறங்களில் அமைந்தால், அது டிரான்ஸ்- மாற்றியம் எனவும் அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக 2-பியூட்டீனில் வடிவமாற்றிங்களை கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.



தன் மதிப்பீடு

12) கீழ்கண்ட ஆல்கீன்கள் சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தினை பெற்றிருக்குமா என தீர்மானிக்கவும்?

 (a) 1 - குளோரோ புரப்பீன்

(b) 2 - குளோரோ புரப்பீன்

விடை :



13) கீழ்கண்ட சேர்மங்களுக்கு சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தை வரைக

(a) 2-குளோரோ-2-பியூட்டீன்

(b) CH3 – CH = CH – CH2CH3

விடை :



11th Chemistry : UNIT 13 : Hydrocarbons : Nomenclature and Isomerism of Alkenes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : ஆல்கீன்களின் பெயரிடும் முறை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்