Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும்

காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

   Posted On :  21.09.2023 12:47 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும்

காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N, N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன.

காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும்

இரண்டு சட்டக்காந்தங்களை எடுத்துக்கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு முறைகளிலும் வைத்துப் பார்க்கவும். நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

எப்பொழுது காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன?

----------------------------------------------------------------

----------------------------------------------------------------

எப்பொழுது காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன?


காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் (S-N, N-S) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N-N, S-S) ஒன்றையொன்று விலக்குகின்றன.

 

(செயல்பாடு 2 : காந்தங்களை உருவாக்குவோமா?

செயற்கைக் காந்தங்கள் தயாரிக்கப் பல முறைகள் உள்ளன. அதில் ஓர் எளிய முறையை பற்றிப் பார்ப்போம்.

ஓர் ஆணி அல்லது சிறிய இரும்புத் துண்டை மேஜையின் மீது வைக்கவும். ஒரு சட்டகாந்தத்தின் ஒரு முனையை ஆணி/ சிறிய இரும்புத்துண்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒரே திசையில் தேய்க்கவும். தேய்க்கும்போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும். 30 அல்லது 40 முறை இதேபோல் செய்யவும்.


ஆணி / இரும்பு த்துண்டு காந்தமாக மாறி உள்ளதா என்பதைக் கண்டறிய அதன் அருகில் சில குண்டுசிகள் அல்லது இரும்புத்தூள்களைக் கொண்டு செல்லவும். அவை காந்தமாக்கப்பட்ட ஆணி இரும்புத்துண்டால் ஈர்க்கப்படுகின்றனவா? என்பதைக் கவனிக்கவும். இல்லையெனில் இதே முறையைப் பின்பற்றி மறுபடியும் செய்து பார்க்கவும். 

Tags : Magnetism | Term 3 Unit 1 | 6th Science காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 1 : Magnetism : Properties of Magnets Magnetism | Term 3 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல் : காந்தங்களின் ஈர்ப்பும், விலக்கமும் - காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்