Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சோடியம் கார்பனேட் (சலவை சோடா)
   Posted On :  25.12.2023 03:26 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

சோடியம் கார்பனேட் (சலவை சோடா)

தொழிற்சாலைகளில் பயன்படும் கனிம சேர்மங்களில் சோடியம் கார்பனேட்டும் முக்கியமான ஒன்றாகும்.

சோடியம் கார்பனேட் Na2 CO3.10H2O (சலவை சோடா)

தொழிற்சாலைகளில் பயன்படும் கனிம சேர்மங்களில் சோடியம் கார்பனேட்டும் முக்கியமான ஒன்றாகும். இது சால்வே முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில், அம்மோனியாவானது அம்மோனியம் கார்பனேட்டாக மாற்றப்படுகிறது, அது பின்னர் அம்மோனியாவால் தெவிட்டிய நிலையில் உள்ள சோடியம் குளோரைடு கரைசலின் வழியே அதிகளவு கார்பன் டையாக்சைடு செலுத்துவதன் மூலம் அம்மோனியம் பைகார்பனேட்டாக மாற்றப்படுகிறது. இதனால் உருவான அம்மோனியம் பைகார்பனேட் சோடியம் குளோரைடுடன் வினைப்பட்டு சோடியம் பைகார்பனேட் மற்றும் அம்மோனியம் குளோரைடைத் தருகிறது. சோடியம் பை கார்பனேட் மிகக் குறைந்த கரைதிறனைக் கொண்டுள்ளதால் வீழ்படிவாகிறது. சோடியம் பைகார்பனேட் பிரிக்கப்பட்டு, வெப்பப்படுத்தி சோடியம் கார்பனேட் பெறப்படுகிறது. இந்த வினையுடன் தொடர்புடைய வினைகள் பின்வருமாறு

2 NH3 + H2O + CO2 (NH4)2 CO3

(NH4)2 CO3 + H2O + CO2 2 NH4 HCO3 

NH4 HCO3 + NaCl NH4Cl + NaHCO3

2 NaHCO3 Na2CO3 + CO2 + H2O

இறுதியில் கிடைக்கும் அம்மோனியம் குளோரைடு கரைசலை கால்சியம் ஹைட்ராக்சைடுடன் சேர்த்து இம்முறையில் பயன்படுத்தப்பட்ட அம்மோனியாவை மீட்டெடுக்க முடியும். கால்சியம் குளோரைடு துணைப் பொருளாக கிடைக்கிறது.


பண்புகள்:

சோடியம் கார்பனேட் பொதுவாக சலவை சோடா என அறியப்படுகிறது. இது வெண்ணிற படிகமான டெக்காஹைட்ரேட்டாக படிகமாகிறது. இது நீரில் கரைந்து காரக்கரைசலை உருவாக்குகிறது. இதை வெப்பப்படுத்தும்போது படிக நீரை இழந்து மோனோ ஹைட்ரேட்டை உருவாக்குகிறது. 373 K வெப்பநிலைக்கு மேல் இந்த மோனோஹைட்ரேட் முழுவதுமாக நீரற்ற வெண்ணிறப் பொடியாக மாறுகிறது. இது சோடா சாம்பல் எனப்படுகிறது.

Na2CO3.10H2O Na2CO3.H2O + 9H2O

Na2CO3.H2O Na2CO3 + H2O


பயன்கள்

i. சோடியம் கார்பனேட் ஆனது சலவை சோடா என அறியப்படுகிறது, இது துணி வெளுக்கப் பயன்படுகிறது.

ii. இது கடின நீரை, மென்னீராக மாற்றும் செயல்முறைகளில் பயன்படுகிறது.

iii. இது கண்ணாடி, காகிதம், பெயிண்ட் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.


11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Sodium Carbonate (Washing soda): Properties and uses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : சோடியம் கார்பனேட் (சலவை சோடா) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்