Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

   Posted On :  21.09.2023 01:10 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல் : மாணவர் செயல்பாடுகள்

செயல்பாடு 1 :

உங்கள் சுற்றுப்புறத்தில் உங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு பொருள்களின் அருகே ஒரு காந்தத்தினை எடுத்துச் சென்று பார்க்கவும். என்ன நிகழ்கிறது? உற்று நோக்கி எழுதுங்கள்.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்:

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------

காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள்:

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------

எவற்றால் ஆன பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன?

-----------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------



காந்தங்களைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனைகளுக்கு உங்களுக்கு இரும்புத்துகள்கள் அதிகம் தேவைப்படும். ஒரு காந்தத்தை மணலில் நன்கு தோய்த்து எடுத்தால் இரும்புத்துகள்கள் காந்தத்தோடு ஒட்டிக்கொண்டு வருவதை நீங்கள் பார்க்கலாம். மணல் கிடைக்கவில்லையெனில்  களிமண் போன்றவற்றிலும் முயற்சிக்கலாம்.

இரும்புத்துகள்கள் இல்லையெனில் சிறிய இரும்புத்துண்டுகளைப் பயன்படுத்தலாம். அதனைச் சிறிது சிறிதாக சேகரித்து சோதனைக்குப் பயன்படுத்தலாம்.

காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது, இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்.


உங்களுக்குத் தெரியுமா

காந்தத்தின் திசைகாட்டும் பண்பு பல ஆண்டுகளாக திசையை அறியப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களைக் கட்டி தொங்கவிட்டால், அவை வடக்கு - தெற்கு திசையிலேயேஓய்வுநிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர். காந்தத்தன்மையுடைய கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகள் செய்து பயன்படுத்தினர்.

சீன மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் இத்தகைய கற்களைக் கொண்டு, புயல்காலங்களிலும், மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.


இரண்டு சட்டக்காந்தங்களை எடுத்துக்கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு முறைகளிலும் வைத்துப் பார்க்கவும். நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

எப்பொழுது காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன?

----------------------------------------------------------------

----------------------------------------------------------------

எப்பொழுது காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன?


(செயல்பாடு 2 : காந்தங்களை உருவாக்குவோமா?

செயற்கைக் காந்தங்கள் தயாரிக்கப் பல முறைகள் உள்ளன. அதில் ஓர் எளிய முறையை பற்றிப் பார்ப்போம்.

ஓர் ஆணி அல்லது சிறிய இரும்புத் துண்டை மேஜையின் மீது வைக்கவும். ஒரு சட்டகாந்தத்தின் ஒரு முனையை ஆணி/ சிறிய இரும்புத்துண்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒரே திசையில் தேய்க்கவும். தேய்க்கும்போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும். 30 அல்லது 40 முறை இதேபோல் செய்யவும்.


ஆணி / இரும்பு த்துண்டு காந்தமாக மாறி உள்ளதா என்பதைக் கண்டறிய அதன் அருகில் சில குண்டுசிகள் அல்லது இரும்புத்தூள்களைக் கொண்டு செல்லவும். அவை காந்தமாக்கப்பட்ட ஆணி இரும்புத்துண்டால் ஈர்க்கப்படுகின்றனவா? என்பதைக் கவனிக்கவும். இல்லையெனில் இதே முறையைப் பின்பற்றி மறுபடியும் செய்து பார்க்கவும். 


காந்தங்களைச் சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்றாலும் கூட அவை தமது காந்தத்தன்மையை இழந்து விடுகின்றன.


சட்டகாந்தங்களைக் காந்தத்தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க, இரண்டு சட்டகாந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து, அவற்றிற்கு இடையில் ஒரு மரக்கட்டையை வைக்கவும். இரண்டு தேனிரும்புத் துண்டுகளை காந்தங்களின்முனைகளுக்குக் குறுக்கே படத்தில் உள்ளது போல் வைத்து சட்டகாந்தங்களைப் பாதுகாக்க வேண்டும்.

லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்குக் குறுக்கே ஒரு தேனிரும்புத் துண்டை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.


கைபேசி, குறுந்தகடு,  கணினி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும். அந்தப் பொருள்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.


 

செயல்பாடு 3: காந்த திசைகாட்டியை உருவாக்குவோமா!

நீங்கள் செயல்பாடு - 2 இல் காந்தமாக்கிய காந்த ஊசியை இரு ஸ்டைரோஃபோம் (தெர்மோகோல்) பந்துகளில் செருகி, அதனை குவளையிலுள்ள நீரில் மிதக்க விடவும். காந்த ஊசி வடக்கு - தெற்கு திசையில் ஓய்வு நிலைக்கு வருகிறதா? எனச் சரிபார்க்கவும்.


குறிப்பு: உங்களிடம் தெர்மோகொகோல் பந்துகள் இல்லையெனில் காய்ந்த இலையையோ,கார்க் துண்டையோ பயன்படுத்தலாம்.


காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்பது நமக்குத் தெரியும். படத்தில் காட்டியவாறு ேேரண்டு சட்ட காந்தங்களை வைக்கவும். நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

---------------------------------------------

காந்தங்களின் விலக்கு விசையைக் கொண்டு நாம் காந்தப் பொருள்களை தூக்கி நிறுத்த முடியும். காந்தத் தூாக்குதலைப் புரிந்து கொள்ள ஒரு விளையாட்டுப் பொருள் செய்து மகிழ்வோமா?


இந்த  விளையாட்டுப் பொருள்பிடித்திருந்ததா? மின்காந்தத் தொடர்வண்டிகளும் இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. இதனைப் பற்றிக் கேள்விட்பட்டிருக்கிறீர்களா?


மின்காந்தத் தொடர்வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு. பறக்கும் தொடர்வண்டி எனவும் இது அழைக்கப்படுகிறது. டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயண்படுத்தாமல், நாம் மேலே குறிப்பிட்ட காந்த ஈர்ப்பு மற்றும் விலக்கு விசைகளைக் கொண்டு இந்த அதிவேக தொடர்வண்டி இயங்குகிறது.


Tags : Magnetism | Term 3 Unit 1 | 6th Science காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 1 : Magnetism : Student Activities Magnetism | Term 3 Unit 1 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல் : மாணவர் செயல்பாடுகள் - காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்