Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 7 : Magnetism

   Posted On :  28.07.2023 04:39 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

சிறிதளவு இரும்புத் துகள்களை ஒரு தாளில் எடுத்துக் கொண்டு அவற்றின் அருகில் ஒரு காந்தத்தினைக் கொண்டு செல்லவும். இரும்புத் துகள்கள், காந்தத்தால் கவரப்படுவதை உங்களால் காண முடிகிறதா? காந்தத்தின் எப்பகுதி அவற்றைக் கவர்கிறது?


செயல்பாடு 2

ஒரு சட்டக் காந்தத்தினை எடுத்துக் கொண்டு அதனை ஒரு தாங்கியில் தொங்கவிடவும். மற்றொரு சட்டக் காந்தத்தினை கையில் பிடித்துக் கொண்டு, அதனை தொங்கவிடப்பட்டுள்ள காந்தத்தின் வடமுனைக்கு அருகில் எடுத்துச் செல்லவும். நீங்கள் என்ன காண்கிறீர்கள்? தொங்கவிடப்பட்ட காந்த விலகிச் செல்லும்.


செயல்பாடு 3

நூகினைப் பயன்படுத்தி ஒரு சட்டக் காந்தத்தினை ஒரு தாங்கியில் கட்டித் தொங்கவிடவும். அப்பகுதியில் எந்த ஒரு காந்தப் பொருள்களும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டு, தொங்கவிடப்பட்ட சட்டக் காந்தத்தினை மெதுவாக நகர்த்தவும். அது சிறிது நேரம் அலைவுற்று, பின்னர் ஒரு நிலையில் வந்து நிற்கும். காந்தத்தின் வடமுனையானது பூமியின் வடமுனையை நோக்கி நிற்பதை உங்களால் காண முடியும். இதேபோல் பலமுறை செய்து பார்க்கவும். ஒவ்வொரு முறையும் அதே திசையில் காந்தமானது வந்து நிற்பதை உங்களால் காண முடியும்.


செயல்பாடு 4

ஒரு மேசையின் மீது ஒரு வெள்ளைத் தாளினை வைத்து அதன்மீது மண்ணிலிருந்து சேகரிக்கப்பட்ட இரும்புத்துகள்களைச் சீராகப் பரப்பவும். வெள்ளைத்தாளிற்குக் கீழே ஒரு சட்டக் காந்தத்தினை எடுத்துச் செல்லவும். மெதுவாக மேசையைத் தட்டவும். என்ன காண்கிறீர்கள்? படத்தில் காட்டியுள்ளவாறு இரும்புத் துகள்கள் குறிப்பிட்ட முறையில் ஒருங்கமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணமுடியும்.


செயல்பாடு 5

ஒருசில குண்டுசிகள், காகிதங்களை இணைக்கும் ஊசிகள் (stapler pins), இரும்பு ஆணிகள், சிறிய காகிதத் துண்டுகள், அளவுகோல், அழிப்பான், நெகிழியாலான உடைகளைத் தொங்கவிட உதவும் பொருள் (plastic cloth hanger) ஆகியவற்றை மேசையின் மீது பரப்பி வைக்கவும். ஒரு காந்தத்தை இப்பொருள்களின் அருகில் கொண்டு செல்லவும். நீங்கள் என்ன காண்கிறீர்கள்? இவற்றுள் காந்தத்தால்கவரப்படும் மற்றும் கவரப்படாத பொருள்கள் எவை? நீங்கள் கண்டறிந்ததை அட்டவணைப்படுத்தவும்.


செயல்பாடு 6

ஒரு மரப்பலகையின் மீது குண்டுசிகளைப் பரப்பி வைத்து அவற்றினருகே ஓர் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். அவை கவரப்படுகின்றனவா? இப்போது சட்டக் காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினைத் தொடவும். மெதுவாக ஆணியின் மீது காந்தத்தினை ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும். படத்தில் காட்டியவாறு இதே போன்று மீண்டும் 20 அல்லது 30 முறை நகர்த்தவும். ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையிலேயே நகர்த்த வேண்டும். தற்போது குண்டுசிகளுக்கருகில் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். என்ன காண்கிறாய்? இரும்பு ஆணி தற்காலிகக் காந்தமாக மாறுவதால், குண்டுசிகள் ஆணியின் மீது ஒட்டிக் கொள்வதை நாம் காணலாம்.


புறக் காந்தப்புலத்தில் ஒரு  பொருளினை வைத்து, அதனை நிலையான அல்லது தற்காலிகக் காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கல் எனப்படும். இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளுள் ஒன்றாகும்.

மெக்லிவ் (Maglev) தொடர் வண்டிக்கு (காந்த விலக்கத் தொடர்வண்டி) சக்கரங்கள் கிடையாது. கணினி கட்டுப்படுத்தப்படும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால் தண்டவாளங்களுக்க

மேலே இது மிதந்து செல்லும். இது உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும். இது தோராயமாக 500 கிமீ / மணி. வேகத்தில் செல்லக்கூடியது


கடன் அட்டை / பற்று அட்டைகளின் பின்புறத்தில் ஒரு காந்த வரிப் பட்டை உள்ளது. இது பெரும்பாலும் மாக்ஸ்ட்ரைப் என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப் என்பது இரும்பிலிருந்து பெறப்பட்ட காந்தத் துகள்களால் ஆன மெல்லிய எநகிழிப் படலம் ஆகும். ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் 20 மில்லியனில் ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.


• வங்கிக் காசோலைகள் மீது அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்து கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.

• காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் பொருள்களைப் பிரித்தெடுப்பதற்த தொழிற்சாலைகளில் 'காந்தக் கடத்துப் பட்டைகள்' (Conveyor belts) பயன்படுகின்றன.

• திருகு ஆணிகளின் (Screw drivers) முனைகளில் சிறிய அளவிலான காந்தம் பொருத்தப்பட்டிருக்கும் இது திருகுகளைப் பிடிக்க உதவுகிறது. • மருத்துவமனைகளில் காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம் (MRI – Magnetic Resonance Imaging) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பினை ஸ்கேன் (நிழலுரு படம்) செய்கின்றனர். அதில் வலிமையான மின்காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : Magnetism | Chapter 7 | 8th Science காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 7 : Magnetism : Student Activities Magnetism | Chapter 7 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல் : மாணவர் செயல்பாடுகள் - காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்