8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல் - காந்தத்தின் பயன்கள் | 8th Science : Chapter 7 : Magnetism
காந்தத்தின் பயன்கள்
அன்றாட வாழ்வில் காந்தங்களோடு நாம் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளோம்.
அவை பல்வேறு கருவிகளில் அதிக அளவில் பயன்படுகின்றன. அவற்றின் சில பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
• முற்காலத்தில் கடலில் பயணம் செய்வோரால் திசையினை அறிவதற்கான
'திசைகாட்டும் கல்லாக காந்தம் பயன்படுத்தபட்டது.
• தற்காலத்தில் டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு காந்தங்கள்
பயன்படுகின்றன. மின்காந்தங்கள் பல்வேறு வகைகளில் நமது அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
• மின்சார மணிகளிலும் மின்மோட்டார்களிலும் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
• ஒலிப்பெருக்கிகளிலும், நுண் பேசிகளிலும் (microphones) இவை
பயன்படுகின்றன.
• அதிவேகமான மெக்லிவ் தொடர்வண்டியானது மிகவும் திறன்மிக்க மின்காந்தங்களைப்
பயன்படுத்தி தண்டவாளங்களுக்கு உயர்த்தி இயக்கப்படுகிறது.
மெக்லிவ்
(Maglev) தொடர் வண்டிக்கு (காந்த விலக்கத் தொடர்வண்டி) சக்கரங்கள் கிடையாது. கணினி
கட்டுப்படுத்தப்படும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால்
தண்டவாளங்களுக்க
மேலே
இது மிதந்து செல்லும். இது உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும். இது தோராயமாக
500 கிமீ / மணி. வேகத்தில் செல்லக்கூடியது
கடன்
அட்டை / பற்று அட்டைகளின் பின்புறத்தில் ஒரு காந்த வரிப் பட்டை உள்ளது. இது பெரும்பாலும்
மாக்ஸ்ட்ரைப் என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப் என்பது இரும்பிலிருந்து பெறப்பட்ட
காந்தத் துகள்களால் ஆன மெல்லிய எநகிழிப் படலம் ஆகும். ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில்
20 மில்லியனில் ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.
• வங்கிக் காசோலைகள் மீது அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்து
கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.
• காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக்
பொருள்களைப் பிரித்தெடுப்பதற்த தொழிற்சாலைகளில் 'காந்தக் கடத்துப் பட்டைகள்'
(Conveyor belts) பயன்படுகின்றன.
• திருகு ஆணிகளின் (Screw drivers) முனைகளில் சிறிய அளவிலான
காந்தம் பொருத்தப்பட்டிருக்கும் இது திருகுகளைப் பிடிக்க உதவுகிறது. • மருத்துவமனைகளில்
காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம் (MRI – Magnetic Resonance Imaging) மூலம் குறிப்பிட்ட
உள்ளுறுப்பினை ஸ்கேன் (நிழலுரு படம்) செய்கின்றனர். அதில் வலிமையான மின்காந்தங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.