Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 7 : Magnetism

   Posted On :  09.09.2023 10:29 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

காந்தங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை: இயற்கைக் காந்தங்கள் மற்றும் செயற்கைக் காந்தங்கள்.

காந்தங்கள் காந்தத்தன்மை கொண்ட இரும்பு போன்ற பொருள்களைக் கவரக்கூடியவை.

காந்தத்தின் முனைப்பகுதிகள் அதிக கவரும் பண்பினை உடையவை.

தங்குதடையில்லாமல் தொங்கவிடப்பட்ட காந்தமானது எப்பொழுதும் புவியின் வட தென் திசை நோக்கி நிற்கும்.

காந்தத்தின் ஓரின முனைகள் ஒன்றையொன்று விலக்கும்;வேறினமுனைகள் ஒன்றையொன்று கவரும்.

காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் 'காந்தப் பொருள்கள்' என்றும் காந்தத்தால் கவரப்படாத பொருள்கள் 'காந்தம் அல்லாத பொருள்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன.

காந்தப்புலத்தில் வெளிப்படுத்தும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு காந்தப் பொருள்கள் டயா, பாரா, ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காந்தப் பண்புகளை தக்கவைத்துக் கொள்ளும் பண்பின் அடிப்படையில் செயற்கைக் காந்தங்களை 'நிலையான மற்றும் தற்காலிகக் காந்தங்கள் என வகைப்படுத்தலாம்.

புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது, புவியியல் வடமுனைக்கருகிலும், வடமுனையானது புவிக்காந்தத்தின் புவியியல் தென்முனைக்கருகிலும் அமைந்துள்ளது

பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு திசையினை அறிவதற்கான 'திசைகாட்டும் கல்லாக காந்தங்கள் பயன்படுத்தபட்டன.

டைனமோக்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய காந்தங்கள் பயன்படுகின்றன.

மின்காந்தங்கள் பல்வேறு வழிகளில் நமது அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன

கணினியில் உள்ள சேமிக்கும் சாதனங்களான நிலைவட்டுக்களில் (Hard disks) காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன அவை அட்டைகளிலும் பயன்படுகின்றன.

 

சொல்லடைவு

அல்நிக்கோ (ALNICO)  காந்த ஊசி அலுமினியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் உலோகக் கலவை கிடைமட்ட தளத்தில் எளிதில் சுழலக்கூடிய வகையில் சிறிய காந்ததினைக் கொண்ட குறிமுள் வடிவிலான ஊசி

காந்தம் இரும்பாலான பொருள்களைக் கவரும் ஒரு சிறிய இரும்பு கலந்த பொருள்

காந்த அச்சு காந்த முனைகளை இணைக்கும் கோடு

காந்தப்புலம் ஒரு காந்தத்தைச் சுற்றிலும் குறிப்பிட்ட பகுதியில் காந்த விசையை உணரும் பகுதி.

காந்தவியல் காந்தப் பண்புகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு பிரிவு.

காந்தமாக்கம் புறக்காந்தப்புலத்தால் ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறை. 

மேக்னடைட் காந்தத் தன்மையுள்ள பாறை




பிற நூல்கள்

1. Electricity and Magnetism S. Subramanian - S. Chand publications Brijlal

2. ICSE Physics - Lakmir Singh and Manjit Kaur - S. Chand publications

3. Physics concepts and connections - Art Hobson. Edition: Pearson Education

 

இணையதள வளங்கள்

1. https://www.livescience.com/38059- magnetism.html

2. https://en.wikipedia.org/wiki/Magnetar

3. https://www.investopedia.com/terms/m/ magnetic-stripe-card.asp

Tags : Magnetism | Chapter 7 | 8th Science காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 7 : Magnetism : Points to Remember, Glossary, Concept Map Magnetism | Chapter 7 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்