Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு (Total Probability of an event)

வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் - ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு (Total Probability of an event) | 11th Mathematics : UNIT 12 : Introduction to Probability Theory

   Posted On :  19.02.2024 10:53 am

11 வது கணக்கு : அலகு 12 : நிகழ்தகவு கோட்பாடு - ஓர் அறிமுகம் (Introduction to Probability Theory)

ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு (Total Probability of an event)

A1, A2, A3,.., An என்பன ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகள் மற்றும் B என்பது கூறுவெளி S-ல் உள்ள ஒரு நிகழ்ச்சி எனில் P(B) என்பது B நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்வு ஆகும்.

ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு (Total Probability of an event)

தேற்றம் 12.10 (ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு)

A1, A2, A3,.., An என்பன ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகள் மற்றும் B என்பது கூறுவெளி S-ல் உள்ள ஒரு நிகழ்ச்சி எனில் P(B) என்பது B நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்வு ஆகும்.


நிரூபணம்

B என்பது கூறுவெளி S -ல் உள்ள ஒரு நிகழ்ச்சி படத்திலிருந்து


B = (A1∩ B) (A2∩B) (A3∩B)… (An∩B). 

A1, A2, A3, ...An என்பன ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் எனவே

(A1B), (A2B), (A3B), … (AnB) என்பன ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகளாகும்.

P(B) = P[(A1∩ B) (A2∩B) (A3∩B) (An∩B)]

P(B) = P(A1∩ B) + P (A2∩B) + P (A3∩B) + … +  P(An ∩ B)


பின்வரும் கணக்குகள் நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவைப் பயன்படுத்தி தீர்க்கப்படுகின்றன


எடுத்துக்காட்டு 12.24

ஒரு ஜாடியில் 8 சிவப்பு மற்றும் 4 நீல நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 10 நீல நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன. இரு பந்துகளும் சிவப்பு நிறப்பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

தீர்வு

A1 என்பது ஜாடி -I தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. மற்றும் A2 என்பது ஜாடி-II-ஐத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க.


B என்பது இரண்டு சிவப்பு நிறப்பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காண வேண்டும். அதாவது P(B).

A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய, யாவுமளாவிய நிகழ்ச்சிகள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

P(A1) = 1/2, P(B/ A1) = 8c2 / 12c2 = 14/33

P(A2) = 1/2, P(B/ A2) = 5c2 / 15c2 = 2/21

P(B) = P(A1) . P(B/A1) + P(A2) . P(B/A2)

P(B) = 1/2 . 14/33 + 1/2 . 2/21 = 20/77



எடுத்துக்காட்டு 12.25

ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகைகள் உள்ளன. இயந்திரம்-I தொழிற்சாலையின் உற்பத்தியில் 40% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம்- II உற்பத்தியில் 60% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-I -ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 4% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம்-II-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 5% குறைபாடுள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது

தீர்வு

A1 என்பது இயந்திரம்-I ன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. A2 என்பது இயந்திரம்-IIன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. Bஎன்பது குறைபாடுள்ளபொருள்களைத்தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி என்க.


நிகழ்ச்சி B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காணவேண்டும். அதாவது, P(B).

A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகளாகும். ஆதலால்

P(B) = P(A1) . P(B/ A1) + P(A2). P(B/ A2)

P(A1) = 0.40, P(B/ A1) = 0.04 

P(A2) = 0.60, P(B/A2 ) = 0.05

P(B) = P(A1) . P(B/ A1) + P(A2). P(B/ A2)

= (0.40) (0.04) + (0.60 ) (0.05)

= 0.046.


Tags : Theorem, Solved Example Problems | Probability Theory வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள்.
11th Mathematics : UNIT 12 : Introduction to Probability Theory : Total Probability of an event Theorem, Solved Example Problems | Probability Theory in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 12 : நிகழ்தகவு கோட்பாடு - ஓர் அறிமுகம் (Introduction to Probability Theory) : ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு (Total Probability of an event) - வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 12 : நிகழ்தகவு கோட்பாடு - ஓர் அறிமுகம் (Introduction to Probability Theory)