Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்

பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும் | 5th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  25.10.2023 06:46 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்

நாம் சென்ற பருவத்திலேயே ஒருங்கிணைந்த கருத்துக்கள் அலகில் பணப்பரிமாற்றல் குறித்துக் கற்றுள்ளோம். பின்வருவனவற்றை நாம் நிரப்ப முயல்வோம்.

அலகு − 5

பணம்



நினைவு கூர்க

நாம் சென்ற பருவத்திலேயே ஒருங்கிணைந்த கருத்துக்கள் அலகில் பணப்பரிமாற்றல் குறித்துக் கற்றுள்ளோம். பின்வருவனவற்றை நாம் நிரப்ப முயல்வோம்.


இவற்றை முயல்க

₹ 1 = 100 பைசாக்கள்

₹ 5 = 500 பைசாக்கள்

775 பைசாக்கள் = ₹ 7.75

425 பைசாக்கள் = ₹ 4.25 


பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்


சூழல் 1

சாரதியும் மீனுவும் தங்கள் பெற்றோருடன் கோயில் தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர். அந்த விழாவில், சாரதி  ₹ 70 இக்கு ஒரு கைக்கடிகாரத்தையும் மீனு  ₹  90 இக்கு வளையல்கள் மற்றும் கம்மல்களையும் அவர்களின் தாயார்  ₹ 160 இக்கு ஒரு சங்கிலியையும் வாங்கினர். அவர்களிடம் வாங்கியப் பொருள்களுக்குப் பணம் செலுத்துமாறு கடைக்காரர் கேட்டார். மீனுவுக்குத் தான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. எனவே, அவள் தனது தாயாரிடம் கேட்டார். அவளது தாயார் அவளிடம் வாங்கிய அனைத்துப் பொருள்களின் விலையையும் கூட்டும்படி கூறினார். அவள் பின்வருமாறுக் கூட்டினாள்.


ஆகவே, மீனு, கடைக்காரருக்கு ₹ 320 ஐச் செலுத்த வேண்டும்

சூழல் 2

வாசு, ஒரு எழுதுபொருள்கள் கடையை வைத்துள்ளார். அவர் தனது கடையிலுள்ள எழுதுகோல்களின் இருப்பு குறித்துச் சோதிக்க விரும்பினார். மீதமுள்ள பொருள்களை எவ்வாறு காண்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அதற்கு அவர் தனது நண்பரிடம் உதவிக் கேட்டார். அவருடைய நண்பர், அவரிடம் ஒரு அட்டவணையை அமைக்க உதவினார். அந்த அட்டவணையானது கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள பொருளின் விலையைக் காண, நாம் இருக்கும் பொருள்களின் விலையிலிருந்து விற்ற பொருள்களின் விலையைக் கழிக்க வேண்டும்.

அதாவது,

மீதமுள்ள பொருள்களின் விலை = இருக்கும் பொருள்களின் விலைவிற்ற பொருள்களின் விலை 

= ₹ 3750 − ₹ 1680

= ₹ 2070


எடுத்துக்காட்டு 5.1

அருண் என்பவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு சலவை இயந்திரம் மற்றும் ஒரு இருசக்கர வண்டி ஆகியவற்றை முறையே ₹ 12,500, ₹ 14,999 மற்றும் ₹ 75,000 இக்கு வாங்கினார் எனில், அருண் செலவு செய்த மொத்த தொகையைக் காண்க.

தீர்வு



எடுத்துக்காட்டு 5.2

7678.75, ₹ 50875.50, ₹4071.50 மற்றும் 675.75 ஆகிய தொகையைக் கூட்டி மொத்தத் தொகையைக் காண்க.

தீர்வு


ஆகவே, மொத்தத் தொகை = ₹ 7678.75 + ₹ 50875.50 + ₹ 407.50 + ₹ 675.75

 = ₹63,301.50

75 + 50 + 50 + 75 ஆகிய பைசாக்களைக் கூட்டி, ரூபாயில் மாற்றவும்.

75 + 50 + 50 + 75 = 250 பைசாக்கள்

100 பைசாக்கள் = ₹ 1

250 பைசாக்கள் = 250 / 100  = ₹ 2.50


எடுத்துக்காட்டு 5.3

ஒரு குடியேற்ற பகுதி மக்கள் மூன்று நாள்கள் சுற்றுலாச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்காக அவர்கள் ₹18,540 தொகையை ஒதுக்கினர். முதல் நாளில் அவர்கள் 6235 ஐச் செலவு செய்தனர். அடுத்த இரண்டு நாள்களுக்கு, மீதமிருக்கும் தொகை எவ்வளவு?

தீர்வு


ஆகவே, அடுத்த இரண்டு நாள்களுக்கு மீதமிருக்கும் தொகையானது ₹ 12,305 ஆகும்.


எடுத்துக்காட்டு 5.4

கீதா என்பவர் தனது குடும்பத்திற்காக ஒரு மேசையை வாங்க விரும்புகிறார். அவர் கடைக்காரிடம் 4,529.50 தொகையைச் செலுத்தினார். கடைக்காரர், அவருக்கு 439.75 மீதியாகத் தந்தார் எனில், மேசையின் விலை என்ன?

தீர்வு


நாம் 75 பைசாக்களை 50 பைசாக்களிலிருந்து கழிக்கும்போது ₹1 பைசாக்களாக மாற்றி 50 பைசாக்களோடு கூட்டிய பிறகு கழிக்க வேண்டும்.

₹ 1 = 100 பைசாக்கள்

100 + 50 = 150 பைசாக்கள்

150 – 75 = 75 பைசாக்கள்


செயல்பாடு

பெரிய பையினை சிறிய பைகளோடு பொருத்துக.



Tags : Money | Term 3 Chapter 5 | 5th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 5 : Money : Addition and Subtraction using money Money | Term 3 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும் - பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்