Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல்

பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல் | 5th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  25.10.2023 07:00 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல்

வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல்

வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல்


சூழல் 1

இராஜுயும் இரவியும், ஒரே பொருள்களுக்கான இரு விலைப்பட்டியல்களை இரு வேறு கடைகளிலிருந்து பெற்றுள்ளனர். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கடை 1: இராஜுவின் விலைப் பட்டியல்


இரவியின் விலைப்பட்டியல்


இவர்கள் இருவரும் மேற்கண்ட விலைப்பட்டியல்களை வகுப்பில் ஆசிரியரிடம் காண்பித்தனர். ஆசிரியர் மாணவர்களை குழுக்களாக உட்கார்ந்து, விவாதித்து, பொருள்களின் விலையினை ஒப்பிட்டுப் பார்க்கக் கூறுகிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, விலைபட்டியல்கள் குறித்து, பின்வரும் வினாக்களை ஆசிரியர் கேட்கிறார்

ஆசிரியர்: அழிப்பானின் விலையானது எந்தக் கடையில் குறைவாக உள்ளது? எவ்வளவு குறைவு?

மாணவன்: கடை 2 இல், ₹ 3 குறைவாக உள்ளது.

ஆசிரியர்: கடை 1 மற்றும் கடை 2 ஆகியவற்றின் மொத்தத் தொகையில் உள்ள வித்தியாசம் என்ன?

மாணவன் : ₹ 5

ஆசிரியர்: கடை 2 ஒப்பிடுகையில் கடை 1 இல் கரிக்கோலின் விலையானது அதிகமா? குறைவா?

மாணவன்: கரிக்கோலின் விலையானது கடை 1 இல் குறைவாகும்.

ஆசிரியர் : கடை 1 மற்றும் கடை 2 இல் ஓர் எழுதுகோலின் விலை என்ன? மேலும், விலைகளின் வித்தியாசத்தையும் கூறு.

மாணவன்: கடை 1 இல் ஓர் எழுதுகோலின் விலை ₹ 5.50 ஆகும். கடை 2 இல் அதன் விலையானது ₹ 6 ஆகும். விலைகளின் வித்தியாசமானது 50 காசுக்கள் ஆகும்.

இதன் மூலம் விலையானது கடைக்காரர் எதிர்கொள்ளும் பயணம், வாடகை, வேலையாள்களின் கூலி, மின்சாரம் போன்ற காரணிகளைப் பொறுத்து, இடத்திற்கு இடம் மாறுபடும் என ஆசிரியர் உரையாடலை நிறைவு செய்கிறார்.


செயல்பாடு

உனது வீடருகே உள்ள காய்கறிக் கடையினை உற்றுநோக்கி, அங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலையைக் காண்க. அந்த விலையினை உனது வீட்டருகில் இருக்கும் பல் பொருள் அங்காடியில் விற்கப்படும் காய்கறிகளின் விலையோடு ஒப்பிட்டுப் பார்க்க.


விலையுயர்ந்து, விலைமலிந்து இருப்பதற்கான காரணம் அறிதல் 

சூழல்

இராணி தனது வீட்டின் அருகே உள்ள ஒரு காய்கறி வியாபாரியிடம் 1 கி.கி கத்திரிக்காயை வாங்கினார். அதன் விலை ₹50 ஆகும். அதே அளவிலான கத்திரிக்காயை ஒரு மொத்த விலை அங்காடியில், கலா வாங்கினார். அதன் விலை ₹ 30 ஆகும். இந்த சூழல் குறித்து நீங்கள் புரிந்துக் கொள்வது என்ன?

மேற்காணும் சூழலிலிருந்து, கலா வாங்கிய கத்திரிக்காய் ஆனது விலை மலிவானதாகவும், இராணி வாங்கியது விலையுயர்ந்ததாகவும் இருப்பதை நாம் புரிந்துக் கொள்கிறோம்.


செயல்பாடு

உனது வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடையில் வாங்கிய பொருள்களின் விலையினையும் பல்பொருள் அங்காடியில் அதே பொருள்களின் விலையினையும் சரிபார்த்து எது விலையுயர்ந்தது எனவும் எது விலை மலிவானது எனவும் கண்டறிக.


விலையுயர்ந்த, விலை மலிவான, விலை ஏறிய, விலை குறைந்த, வாங்கக்கூடிய, விலை பகட்டான போன்ற சொற்களைப் பயன்படுத்துதல் 

சூழல் 1

இரவி, தனது குடும்பத்திற்காக மளிகைப் பொருள்களை வாங்க, ஒரு மளிகைக் கடைக்குச் செல்கிறார். அவர், அங்கு பல தர அடையாளங்களைப் பெற்ற புழுங்கல் அரிசி வகைகளைப் பார்க்கிறார். அதிலிருந்து, ஒரு தர அடையாள வகையைத் தேர்வு செய்தார். அந்தத் தர அடையாள வகையில், பல வகையான, பல்வேறு வகைகளில் வகைகேற்ற விலைகளில் அரிசி இருந்தது. அதன் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வகை − 1 ஒரு கி.கி ₹ 42

வகை − 2 ஒரு கி.கி ₹ 48

வகை – 3 ஒரு கி.கி ₹ 52

வகை − 4 ஒரு கி.கி ₹ 56

அவர், ஒரு கிலோ ₹ 42 ஆக உள்ள வகை 1 புழுங்கல் அரிசியை வாங்குகிறார். அவர் ஏன் வேறெந்த வகைகளையும் வாங்காமல் இந்த வகையைத் தேர்வு செய்கிறார்? அவரால் மற்ற வகைகளையும் வாங்கக்கூடியதாக இருந்தாலும், அவர் வகை 1 ஆனது விலை குறைவாக இருப்பதாக நினைக்கிறார்

சூழல் 2

ஒரு நகரிலுள்ள மூன்று குடும்பங்கள் A, B மற்றும் C ஆகியோர் ஒரு மகிழுந்தை வாங்க விரும்பினர். அவர்கள், ஒரு மகிழுந்து காட்சியகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் விலை குறைந்த, விலையுயர்ந்த மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மகிழுந்துகளைப் பார்த்தனர்.

குடும்பம் A ஆனது விலை குறைந்த மகிழுந்தைத் தேர்வு செய்தது. குடும்பம் A ஆனது, விலைகுறைந்த மகிழுந்தை ஏன் தேர்வு செய்தது? அவர்களிடம், விலையுயர்ந்த மகிழுந்தை வாங்க பணம் இருந்தபோதும், விலைகுறைந்த மகிழுந்தை வாங்கியதால், அவர்கள் விலைமலிவானதாக உணர்ந்தார்கள்.

குடும்பம் B ஆனது விலையுயர்ந்த மகிழுந்தைத் தேர்வு செய்தது. குடும்பம் B ஆனது, விலையுயர்ந்த மகிழுந்தை ஏன் தேர்வு செய்தது? அவர்களிடம் மற்ற மகிழுந்துகளை வாங்க பணம் இருந்தபோதும், அவர்கள் விலையுயர்ந்த, அதிக விலைக் கொண்ட மகிழுந்தையே தேர்வு செய்தனர்.

குடும்பம் C ஆனது இறக்குமதிச் செய்யப்பட்ட மகிழுந்தையே தேர்வு செய்தது. ஏனெனில், அவர்கள் பகட்டான மகிழுந்தையே விரும்பினர்.

இப்போது, நாம் பின்வரும் சொற்களின் பொருளைப் பார்ப்போம்

(i) விலையுயர்ந்தவிலையில் கூடுதலாக இருப்பது

(ii) விலை மலிந்தகுறைந்த விலை

(iii) விலை ஏறியஅதிக விலை

(iv) விலை குறைந்தகுறைந்த விலை

(v) வாங்கக் கூடியஏற்கத்தக்க விலை

(vi) பகட்டானமிகவும் விலையுயர்ந்த


செயல்பாடு

மாணவர்களை, அங்காடிக்கு அனுப்பி, அங்குள்ள பல்வேறு கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு காய்கறியின் விலையைக் கண்டு, அவர்கள் பார்த்தைப் பட்டியலிட்டு தயாரிக்கும் படி கூறவும். இந்தப் பட்டியலைக் கொண்டு, வகுப்பறையில் சோடிக் குழுக்களில் எது விலை குறைந்தது, எது விலை ஏறியது, எது வாங்கக்கூடியது போன்று விவாதிக்க வேண்டும். அவர்கள் விவாதிக்கும்போது ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


செயல்பாடு

பழவியாபாரி 1 என்பவர், தனது இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி, தன்னிடமிருந்த பழங்களை ₹ 150 இக்கு விற்கிறார். அவர் பெட்ரோல் செலவாக ₹ 170 ஐச் செலவிடுகிறார். ஆனால், பழ வியாபாரி 2 என்பவர், ஓர் அலுவலகத்தின் வெளியே உட்கார்ந்து, தன்னிடமிருந்தப் பழங்களை ₹ 250 இக்கு விற்கிறார்.

மாணவர்களைக் குழுக்களில் உட்கார வைத்து இந்தச் சூழல் குறித்து, எது விலை ஏற்றமானது? எது விலை குறைந்தது? என விவாதிக்கச் செய்யவும்.


Tags : Money | Term 3 Chapter 5 | 5th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 5 : Money : Expensive, inexpensive costly, cheap, affordable and luxurious Money | Term 3 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : வாங்கிய பொருள்களுக்கு விலைப்பட்டியலைச் சேகரித்தல் மற்றும் ஒரே பொருள்களின் விலையினை ஒப்பீடு செய்தல் - பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்