பண்புகள், கதிரியக்க இடம்பெயர்வு விதி - ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்கள் | 10th Science : Chapter 6 : Nuclear Physics
ஆல்பா, பீட்டா மற்றும்
காமாக் கதிர்கள்
கதிரியக்கத்திற்கு உட்படும்
கதிரியக்க உட்கரு செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்களை உமிழ்கின்றன. வழக்கமாக அவை
மூன்று கதிரியக்கத் துகள்களாகத் தரப்பட்டுள்ளன. அவை ஆல்பா (α), பீட்டா (β) மற்றும் காமா (γ) கதிர்களாகும்.
உங்களுக்குத்
தெரியுமா?
யுரேனஸ் கோள் பெயரிட்டப் பிறகு
அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுலிருந்து யுரேனியத்தை ஜெர்மன்
வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார்.
1. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகள்
இந்த மூன்று கதிர்களின் பண்புகளில்
சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அட்டவணை 6.2 இல் ஆல்பா,
பீட்டா மற்றும் காமா கதிர்களின் பண்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
2. கதிரியக்க
இடம்பெயர்வு விதி
α
மற்றும் β சிதைவின் போது சேய் உட்கரு
உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் 1913 இல் சாடி
மற்றும் ஃபஜன் விளக்கினர். கதிரியக்கச் சிதைவு விதி கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.
கதிரியக்கத் தனிமம் ஒன்று ஒரு α
- துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணுஎண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
கதிரியக்கத் தனிமம் ஒன்று β - துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று
அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.
அணுக்கரு வினையின் போது நிலையற்ற
தாய் உட்கருவானது, α
துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது α
- சிதைவு என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து,
தோரியம் - 234 (Th234) ஆக
மாறுகிறது
92U238 → 90Th234 + 2He4 (α - சிதைவு)
ஒரு தாய் உட்கருவானது α
சிதைவடைந்து அதன் நிறை எண்ணில் நான்கும் அணுஎண்ணில் இரண்டும்
குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும் என்பதனை படம் 6.1
விளக்குகிறது
அணுக்கரு வினையின் போது நிலையற்ற
தாய் உட்கருவானது β துகளை உமிழ்ந்து
நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது β
- சிதைவு என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு பாஸ்பரஸின் β - சிதைவு
15P32 → 16S32 + -1e0 (β - சிதைவு)
β
- சிதைவின் போது நிறை எண்ணில் எவ்வித மாறுபாடு இல்லாமல், அணு எண்ணில் ஒன்று அதிகரிக்கும்.
குறிப்பு: அணுக்கரு வினையில் தோன்றும் புதிய
தனிமத்தின் உட்கருவானது நிறை எண்ணால் அல்லாமல் அணு எண்ணால் அறியப்படுகிறது.
காமாச் சிதைவின் போது உட்கருவின் ‘ஆற்றல் மட்டம்’ மட்டுமே மாற்றம் அடைகிறது. அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே அளவில் இருக்கும்.