அணுக்கரு இயற்பியல் | அறிவியல் - தீர்க்கப்பட்ட கணக்கு | 10th Science : Chapter 6 : Nuclear Physics
அணுக்கரு இயற்பியல் (அறிவியல்)
தீர்க்கப்பட்ட
கணக்கு 6.1
கீழ்க்கண்ட அணுக்கரு வினையிலிருந்து
A,B,C மற்றும் D
ஆகியவற்றைக் காண்க.
தீர்வு
A என்பது ஆல்பாத்
துகள், B என்பது நியூட்ரான், C என்பது
புரோட்டான் மற்றும் D என்பது எலக்ட்ரான்.
தீர்க்கப்பட்ட
கணக்கு 6.2
ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு
வினாடியில் 3.7 × 103
GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவினை கியூரி அலகாக
மாற்றுக.
ஒரு கியூரி = 3.7 × 1010 Bq (ஒரு வினாடியில் ஏற்படும் சிதைவு)
தீர்வு
1 Bq = ஒரு வினாடியில் ஏற்படும் சிதைவு ஒரு கியூரி = 3.7 × 1010 Bq
தீர்க்கப்பட்ட
கணக்கு 6.3
92 U 235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா
சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள
நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு
X மற்றும் Y என்பன ஆல்பா மற்றும் பீட்டா துகள் உமிழ்விற்குப் பிறகு முறையே உருவாகும்
புதிய தனிமங்களாகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை
எண் - அணு எண்
= 231 - 91 = 140
தீர்க்கப்பட்ட
கணக்கு 6.4:
2 கிகி நிறையுடைய ஒரு
கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியாகும் மொத்த ஆற்றலைக் கணக்கிடுக.
தீர்வு
வினையின் போது நிறைவழு m = 2 கிகி
ஒளியின் திசைவேகம் c = 3 × 108 மீ வி-1
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு E = mc2
E = 2 × (3 x 108)2
= 1.8 × 1017 J