காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம் | 3rd Maths : Term 1 Unit 5 : Time
முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்
பின்வரும் கடிகாரங்களை உற்றுநோக்குக.
முட்கடிகாரம், இலக்கமுறை கடிகாரம்
முட்கடிகாரத்தில் மணிமுள் மற்றும் நிமிடமுள் இருக்கும். அவை இருக்கும் நிலையை கொண்டு நாம் நேரத்தை அறியலாம். இலக்கமுறை கடிகாரத்தில் நேரம் எண்களில் காண்பிக்கப்படுகிறது
இரு வழிகளிலும் நேரத்தை குறிக்கும்.
செயல்பாடு 2
1. முட்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை இலக்கமுறையில் எழுதுக.
2. இலக்கமுறை கடிகாரத்தில் குறிப்பிட்ட நேரத்தை காட்ட முட்களை வரையவும்.
3. காவ்யாவின் அட்டவணையை சரியான நேரத்துடன் பொருத்தவும்.
அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள் 7 : 45
ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள் 9 : 30
இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள். 2 : 30
ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள். 4 : 45
உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள் 8 : 15
விடை :
அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள் 8:15
ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள் 2:30
இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள். 4:45
ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள். 7:45
உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள் 9:30