காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - படிக்கும் நேரம் | 3rd Maths : Term 1 Unit 5 : Time
படிக்கும் நேரம்
நான் ஒரு கடிகாரம். என்னில் 1 முதல் 12 எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். எனக்கு 2 முள்கள் உள்ளன. குறுகிய முள் மணிமுள் எனவும், நீண்ட முள் நிமிடமுள் எனவும் அழைக்கிறோம். சில கடிகாரங்களில் மற்றுமொரு விநாடி முள்ளும் உள்ளது.
மணிமுன் ஒரு எண்ணுக்கும் அடுத்த எண்ணுக்கும் இடையில் நகர்ந்து செல்ல 1 மணி நேரம் ஆகும். நிமிடமுள், மணிமுள்ளை விட அதிவேகமாக ஒரு எண்ணிற்கும், அடுத்த எண்ணிற்கும் இடையில் 5 நிமிடத்தில் நகர்கிறது. விநாடி முள் மிக வேகமாக 5 விநாடியில் ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணிற்கு நகர்கிறது.
3 படி நிலைகளில் கடிகாரம் வரைதல்
படி 1: 1, 2, 3 ______ 59, 60
படி 2: ஐந்து, ஐந்தாக தாவி எண்னுதல், 5, 10, 15, 20 ____ 55, 60.
படி 3: 5, 10, 15 _______ற்கு கீழே நேராக 1, 2, 3 _______ 12 எழுது
12 மணி நேரம் + 12 மணி நேரம் = 24 மணி நேரம் = 1 நாள்
ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர் கடிகாரத்தைப் பயன்படுத்தி மணிமுள், நிமிடமுள், விநாடிமுள்களை விளக்குதல்.
பயிற்சி செய்
1. கடிகாரத்தில் நேரத்தை கண்டறிந்து இரு முறைகளிலும் எழுதுக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை கடிகாரத்தில் முட்கள் வரைந்து குறிப்பிடுக.
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்தை குறிப்பிடுக (மணி நேரம், நிமிடங்கள், நொடிகள் அல்லது நாட்கள்)
முயற்சி செய்க
ஒரு நிமிடத்தில் பின்வருவனவற்றை எத்தனை முறை செய்யமுடியும்?
1. விரலைச் சொடுக்குதல் 60
2. கயிறு தாண்டுதல் 70
3. மேலும் கீழுமாக குதித்தல் 50
4. கண்களைச் சிமிட்டுதல் 120
தெரிந்து கொள்வோம்
60 நொடிகள் = 1 நிமிடம்
60 நிமிடங்கள் = 1 மணி நேரம்
செயல்பாடு 1
கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி நேரத்தை சரியாக காட்டு கடிகாரத்தில் (✓) குறியீடுக.