காலம் | முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - நாட்காட்டி | 3rd Maths : Term 1 Unit 5 : Time
நாட்காட்டி
ஒரு ஆண்டின் மாதங்களை நினைவு கூர்வோம்.
அ. நாள்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.
ஆ. மாதங்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.
இ. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒரு வருடத்தில் 365 நாட்கள் உண்டு.
2. ஒரு வாரத்தில் 7 நாட்கள் உண்டு.
3. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன.
4. ஒரு மாதத்தில் 30 நாட்கள் உண்டு.
5. ஒரு வருடத்தில் முதல் மாதம் ஜனவரி.
6. ஒரு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு
தெரிந்து கொள்வோம்
1 வாரம் = 7 நாள்கள்
1 மாதம் = 30 நாள்கள்
1 வருடம் = 12 மாதங்கள்
1 வருடம் = 365 நாள்கள்
1லீப் வருடம் = 366 நாள்கள்
லீப் ஆண்டு
ஒரு லீப் ஆண்டில் 366 நாட்கள் உண்டு. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு வரும். 2016 லீப் ஆண்டாகும். அடுத்த லீப் ஆண்டு 2020 ஆகும்.