பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters
III. விரிவான விடையளி.
1.
ஆழிப்
பேரலையைப்
பற்றிச்
சிறுகுறிப்பு
வரைக.
விடை:
• ஆழிப் பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப் பேரலையாகும்.
• ஆழிப் பேரலையானது 10-30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 - 800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
• இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.
2.
நில
நடுக்கத்தின்போது
கட்டடத்திற்குள்
இருந்தால்
நீங்கள்
என்ன
செய்வீர்கள்?
விடை:
1. மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒருகையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
2. அறையின் மூலையில், மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கொள்ளவும்.
3. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
3.
ஆழிப்
பேரலையை
எவ்வாறு
எதிக்கொள்வாய்?
விடை:
ஆழிப்பேரலையை எதிர் கொள்ளல் :
1. நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிந்து திட்டமிடவும்.
2. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
3. ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடி மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
4.
தீ
விபத்தின்போது
என்ன
செய்யவேண்டும்
என்பதை
பற்றி
குறிப்பு
வரைக.
விடை:
• அமைதியாக இருக்கவும்.
• அருகில் உள்ள தீ அபாயச்சங்குப் பொத்தானை அழுத்தவும் அல்லது 112 ஐ அழைக்கவும்.
• கட்டடத்தைவிட்டு உடனடியாக வெளியேறவும்.
• தீவிபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்லவும்.
• மின் தூக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
செயல்பாடுகள்
1.
தீ விபத்திற்கான ஒத்திகை பயிற்சி. (மாணவர்களுக்கானது)
2. நில நடுக்கத்திற்கான ஒத்திகை பயிற்சி (மாணவர்களுக்கானது)
மேற்கோள் நூல்கள்
1. Disaster management Module, TNSCERT.
2.
NDMA.
3.
Wikipedia
இணையதள வளங்கள்
http://WWW.INdimirndia.nic.in
Helpline
Numbers
011-23438252
011-23438253
011-1070